Saturday, December 26, 2020

மனித குலத்திற்கும் எதிரான மனுவை ஒழிப்போம்

பள்ளி படிப்பு முடிந்த பிறகு அரசியல் தொடர்புகள் கிடைத்தது. ஆசிரியராக இருந்த எனது அப்பாவின் திராவிட இயக்கப் பின்னணி காரணமாக திராவிடர் கழகம், தமிழ்த்தேசிய அமைப்பு / இயக்கங்கள், மா.லெ.அமைப்பு என தொடர்புகள் விரிவடைந்தது.

சமூக / அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடத்தொடங்கியதும், பார்ப்பனர்கள் மட்டும் எப்படி அனைத்து பதவிகளிலும் இருக்கின்றார்கள், அதிகாரம் செலுத்தமுடிகிறது. எப்படி அவர்கள் மட்டும் படித்து மேலே செல்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

"சூத்திரர்கள் படித்தால் நாக்கை அறு, கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று" எனக்கூறி, எல்லோரையும் ஒதுக்கி / ஒடுக்கியே வைத்திருந்தனர் என்ற பதில் கிடைத்தது.

யார் / எது இப்படி கூறி ஒதுக்கியது என்றபோதுதான், மனு ஸ்மிருதி / மனு தர்மம்தான் இப்படி மக்களை ஒன்று சேரவிடாமால்/முடியாம் பிரித்து வைத்துள்ளது என பதில் வந்தது.

பிறகு மனு குறித்து நாமே தகவல்களைத் தேடி படித்தபோதுதான் தெரிந்தது

மனு நீதியல்ல அநீதியானது என்றும், மனு தர்மம் அல்ல அதர்மம் என்பது.

மொத்த மனித குலத்திற்கும் எதிரான மனுவை ஒழிப்போம்.

(24 அக்டோபர் 2020)



No comments: