தண்டகாரண்யம் - தவிர்க்க முடியாத அரசியல் படம்.
யாரும் உள்ளே நுழையமுடியாமல் கண்ணுக்குத் தெரியாத கதவு பூட்டுகளால் அனைத்துப் பக்கமும் மூடப்பட்டுள்ள ஒரு உலகம் திரைப்படம் உலகம். உள்ளே நுழைந்தவர்களும் கண்ணுக்குத் தெரியாத நூல்களால் கட்டப்பட்டார்கள். கட்டுப்படுத்தப்பட்டார்கள். அந்த நூலால் உருவாக்கப்பட்ட கோடுகளை தாண்டவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டார்கள். எல்லை தாண்டியவர் பா.ரஞ்சித். மூடியிருந்த கதவுகளை திறந்து, நூல்களை அறுத்து கோடுகளை அழித்து, அதியனையும் மாரி செல்வராஜ் போன்ற பலரை உடன் அழைத்துச் சென்றார்கள். கடலூர் ஷான், தற்போது செம்மலர் அன்னம் போன்றோர்களுக்கான வழிகளையும் திறந்துவிட்டுள்ளார்.
கதவுகளை உடைத்து, நூல்கோடுகளை அழித்து உள்ளே சென்றவர்கள், வெளியிடும் திரைப்படங்களைப் பார்த்து, பூட்டி வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இவர்களின் படங்கள் சாதிப் பெருமைகளைப் பேசவில்லை. ஆதிக்கத்தை நிறுவவில்லை. சமத்துவத்தைச் சொல்கிறது. அதிகாரத்தின் பெயரிலான ஆதிக்கத்தை உடைக்கிறது.
ஜி தமிழில் ஒளிபரப்பான அம்பேத்கர் தொடரில், குட்டி அம்பேத்கர், ‘’ஒரு நாள் வானத்தைப் போல உலகம் முழுவதையும் நீல நிறத்தில் மாற்றுவேன்’ என்பார். நீலம் என்பது சமத்துவம். இதைத்தான் ரஞ்சித், அதியன், மாரி சொல்கிறார்கள். சமத்துவம் கூடாது என்பவர்கள்தான் இவர்களையும், இவர்களின் படங்களையும் எதிர்க்கின்றனர்.
தண்டகாரன்யம் படத்தைப் பற்றிய நான்கு பார்வை பார்வை.
காடு, பழங்குடியினர், வாழ்வாதாரம் இல்லை, சொத்தை விற்றுப் படிப்பு, காக்கி உடை அணிந்தால் அரசு வேலை, அதிகாரம், மரியாதை, காதல், குடும்பம்
வனத்துறை அதிகாரிகளின் அத்துமீறல், காட்டு வளங்களை அழித்தல் கடத்தல் + கஞ்சா + பழங்குடி மக்களையே பயன்படுத்துவது.
பழங்குடியினர் மீதான அதிகாரத்தின் தாக்குதல் - பழங்குடி இனத்தை அழிப்பது, காட்டினை கைபற்றுவது.
மலிந்துவிட்ட ஊழல். போலியான பயிற்சி மையம். அதற்கான நிதி ஊழல் செய்து எடுப்பது. அப்பாவி பழங்குடியினரை நக்சல் எனச் சொல்லி கொலை செய்து, பணம், பதவி, பட்டம், புகழ்.
இப்படியான நான்கு பார்வைக்கும் அடிப்படையாக இருப்பது, நாளேடுகளில் வந்த இரண்டு செய்திகள்தான்.
நக்சல்கள் சரண், நக்சல்கள் கொலை எனும் அந்த இரு செய்திகளுக்குப் பின்னால் உள்ள மனிதர்கள்தான் இந்த தண்டகாரண்யம் படம்.
தற்போதைய ஒன்றிய அரசுக்கு போலிகளை நடத்துவது ஒன்றும் புதிதல்ல. சிரமமும் அல்ல. வட மாநிலங்களில் போலியான சுங்கச் சாவடி, காவல் நிலையம், நீதிமன்றம், வேலை வாய்ப்பு அலுவலகம், ஏன் போலியான வெளி நாட்டு தூதரங்கள் கூட நடத்தியுள்ளனர். இந்த ஒன்றிய அரசு கூட போலிதான். RSS தான் உண்மையான அரசு. பாஜக, மோடி எல்லாம் போலிகள்தான்.
இப்படி பேசும் நம்மைப் போன்றோர்களை எல்லாம் அர்பன் நக்சல் என சொல்லி ஒடுக்குகின்றனர். ஸ்டான் சாமி, பேராசியர் சாய்பா போன்றோரை கைது செய்து, சிறையில் வைத்து கொலை செய்து, இயற்கை மரணம் என்றனர்.
ஒவ்வொரு நாடாளுமன்ற தொடரிலும், தேர்தல்களிலும், தீபாவளிகளிலும் நக்சல்கள் தேசவிரோதிகள் என்றும், நக்சல் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்றும் பிரதமர் பேசி வெறியூட்டுகிறார். போலியான தேசபக்தியை உருவாக்க முயற்சிகின்றார்.
இந்த மாதிரியான சூழலில், அவர்களின் கருத்துகளை எல்லாம பொய் என்றும், அவர்கள் செயல்கள் எல்லாம் போலியானது என்றும், அவர்கள் அழிக்க நினைக்கின்ற தண்டகாரணயம் என்ற பெயரிலியே அதியன் படைப்பாக்கி இருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
நக்சல் மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில், பழங்குடியினரை ஒடுக்க, அழிக்க, பழங்குடி இளைஞர்களைக் கொண்டே போலியான பயிற்சி மையம் கேம்ப் நடத்துவது, அவர்களின் அக்னிபாத் எனும் திட்டத்தை நினைவூட்டுகின்றது.
படத்தில் தோழர் அதியன், போகிற போக்கில் நுணுக்கமான சில விஷயங்களைப் பதிவு செய்துகொண்டே போகின்றார்.
அவர்கள் மொழியிலியே பேசுகின்றனர் என மொழி அரசியல் பேசுகிறார்.
காடுங்கிறது வெறும் செடி கொடி மரம் மட்டும் இல்லை. மனிதர்கள் உட்பட எல்லாம்தான். காடு புதுசு புதுசா கத்துகொடுக்கும்.
மத்தவங்கள் காட்டை பாதுகாக்கலாம். ஆனா பழங்குடியினர் தவிர வேறு யாரும் காட்டை வளர்க்கமுடியாது, உருவாக்கமுடியாது.
காட்டில் இருக்கும் வரைதான் மனிதர்கள். காட்டை விட்டு ஊருக்குள் போனால் சாதி, மதம், கெளரம் என பல்வேறு சட்டைகளை அணிந்துகொள்கிறார்கள்.
வனத்துறை, காவல், இராணுவம் போன்றோர் அணியும் உடையும் அதன் அதிகாரத்தையும் ஒடுக்குமுறைகளையும் பார்த்து அச்சப்படுகிறார்கள். அதே சீருடையை நமது பிள்ளைகள் போட்டுக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தால் இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை மாறும், இருக்காது என நம்புகிறார்கள்.
ஒரு மாநில அரசு நக்சல்கள் என சரணடைய வைத்து, வேலை கொடுப்பதாக கணக்கு காட்டுகின்றது. இன்னொரு மாநில அரசு பொய் வழக்குப் போட்டு குடும்பத்தை சிதைக்கின்றது.
கடைசி அணுகுண்டு படத்தில் லாரிகளும் பாத்திரங்களாகவே கேரக்டர்களாகவே இருக்கும். அப்படி இந்தப் படத்தில் இடை இடையே லாரிகள் போய் கொண்டே இருக்கும்.
இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும், பொருளுக்கும் பின்னாலும் அரசியல் உள்ளது. பத்திரிகளைகளில் வருகின்ற ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் பெரும் அரசியல் உள்ளது. தற்போதைய செய்திகளில் ஒரு பெரும் சதி உள்ளது என்றே சொல்லாம்.
அப்படித்தான் இந்தப் படத்தில் காட்டப்படும் இரு செய்தி துணுக்குகளுக்குப் பின்னால் உள்ள சதி, வாழ்க்கை, மக்கள், ஒடுக்குமுறை, அரசியல், ஊழல்கள்தான் இந்தப் படம்.
கடைசியாக ஒரு கருத்து. விசாரணை, ஜெய்பீம் வரிசையில், அதையும் தாண்டி வந்திருக்கவேண்டிய படம்.
இந்திய அளவில் துணை இராணுவப் படையில் நிலவும் ஊழல், அரசியல், போலி பயிற்சி மையங்கள் போன்வைகளை வெளியுலகின் பார்வைக்கு கொண்டுவந்து பேசுபொருளாக்கிய தோழர் அதியன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எப்போதும்போல், இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டும், பேசிக்கொண்டிருக்கும் அண்ணன் இரவி கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.



No comments:
Post a Comment