Monday, January 4, 2021

அம்பேத்கர் நாட்காட்டி

அழகிய அம்பேத்கர் படத்துடன் தகவல் களஞ்சியமான

தலித் முரசு
Dalit Murasu
நாள்காட்டி வந்ததடைந்தது...



பெற்றோர் ஆசிரியர் கூட்டம் – நுண் வகுப்பறை 100-வது நாள்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டம் –
நுண் வகுப்பறை 100-வது நாள்.
------------------------------------------------------------------------------------------------------------
கொரோனா ஊரடங்கில் அனைத்தும் முடங்கியதுபோன்று, கல்வியின் எதிர்காலமும் கேள்விக்குறியானது. மாணவர்கள் கல்வியில் பின் தங்குவதைத் தவிர்க்கவும், இட நிற்றல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவதைத் தடுக்கவும், சூலை 15, 2020 கல்வி வளர்ச்சி நாள் அன்று
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளியில்நுண் வகுப்பறைத் திட்டம் தொடங்கினோம்.
குழந்தைகளின் வீடுகளையே கற்றல் மையமாக்கி நடைபெற்ற இந்த நுண் வகுப்பறை 30.12.2020 அன்று 100-வது நாளை அடைந்தது. அதனைக் கொண்டாடும் விதமாக அன்று மாலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த திண்டிவனம் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் திரு இராஜமாணிக்கம், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கவிஞர் மான்.கு.ஏழுமலை, பேராசிரியர் ஜெ.ராமமூர்த்தி ஆகியோருடன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைபர் திருமதி இராதா ஆகியோர் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வாழ்த்தி பாராட்டிப் பேசினர். தலைமை ஆசிரியர் அ.மரிய அந்தோணி “நுண் வகுப்பறை 100 நாள்” என்ற தலைப்பில் அறிக்கை தயாரித்து வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்கள்.
1.அண்மையில் மறைந்த தமிழறிஞர், ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. நுண் வகுப்பறை 100-வது நாளைக் கொண்டாடும் வகையில் விழா நடத்துவது.
3. தனது மகள் பிறந்த நாள் மகிழ்வாக நமது பள்ளிக்கு 4 கணினி, 1 அச்சியந்திரம் ஆகியவைகளை ரூ. 1,50,00/- ரூபாய் மதிப்பில் வாங்கிக்கொடுத்ததுடன், நுண் வகுப்பறைக் காலங்களில் 15 நாட்களுக்கு உணவு வழங்க ரூ 68,5000/- வழங்கிய, தற்போது பிரான்சில் புதுச்சேரியைச் சேர்ந்த திருமதி புஷ்பா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பரிந்துரை செய்த பிரான்சில் வசிக்கும் திரு பொன்முடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. நூண் வகுப்பறை 100 வது நாள் விழா, கணினி ஆய்வகம் திறப்பு விழாவினை வரும் 06.01.2021 அன்று பள்ளியில், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலுடன் நடத்துவது என்றும், சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் சார் – ஆட்சியர் மருத்துவர் அனு அவர்களை அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
5. நுண் வகுப்பறை நடத்த தமது வீடுகளை அளித்த ரோசனை பொதுமக்கள், மையத்திற்கு உடனிருந்த உதவிகள் செய்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. சமத்துவப் பொங்கல் விழா : முந்தைய ஆண்டுகளைப் போலவே, வரும் 15.01.2021 அன்று பள்ளியில் "9-வது ஆண்டு சமத்துவப் பொங்கல்" விழா நடத்துவது என்றும். கொரோனா தடுப்பு விதிகளின்படி, குறைவான எண்ணிக்கையில் பொங்கல் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
7. நம்மோடு இணைந்து பொங்கல் விழா கொண்டாட முன் வந்த திண்டிவனம் தமிழ்ச் சங்கத்தின் முடிவினை வரவேற்பது என்றும், தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கலைத் திறன் போட்டிகளை முன்கூட்டியே நடத்துவது என்றும், தமிழ்ச் சங்கம் வழங்கும் பரிசினை பொங்கல் விழா மேடையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.




புத்தாண்டு சந்திப்பு..

புத்தாண்டு சந்திப்பு.. 

ஜெயஸ்ரீ அவர்களை, சனவரி 1 அன்று
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
மற்றும்
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினோம்.
தாய்த்தமிழ்ப் பள்ளியில் 100 நாளைக் கடந்து நடைபெறும் நுண் வகுப்பறையின் அறிக்கையினை அளித்தோம்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி இராதா, மாண்டிசோரி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள்.

97 வயது. மூத்த வழக்கறிஞர் திரு பிரசன்னவெங்கடாஜலபதி. திண்டிவனத்தில் 1986-ல் தொடங்கப்பட்ட பள்ளித் திறப்புக் குழு, நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் முன்னோடி. சென்னையில் மகன் வீட்டில் உள்ளார்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும்
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளி மற்றும்
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
சார்பில் சனவரி 1 அன்று குழுவாகச் சந்தித்து வாழ்த்துகளைக் கூறினோம், அவரிடம் பெற்றோம்.

(01.01.2020 முகநூல்)






தொற்றிடம் தோற்காத கல்வி - 100 வது நாளைக் கடக்கும் நுண் வகுப்பறை.

 தொற்றிடம் தோற்காத கல்வி..

100 வது நாளைக் கடக்கும் நுண் வகுப்பறை
----------------------------------------------------------
சாதாரண காலங்களிலேயே கல்வியில் இடை நிற்றல் இருக்கும். இந்தக் கொரோனா காலத்தில் இடை நிற்றல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. கல்வியிலிருந்து குழந்தைகள் விலகினால், மீண்டும் அவர்களை கல்விக்கு கொண்டுவருவது பெரும் சவாலான ஒன்றாகிவிடும். இதனைத் தவிர்க்க, நாங்கள்
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளியில்,
சூலை 15 அன்று நுண் வகுப்பறை மூலம், குழந்தைகளின் வீடுகளையே கற்றல் மையமாக்கி கல்வி கற்பிக்கத் தொடங்கினோம் நேற்று 100-வது நாளை அடைந்தோம்.
பள்ளியையும், கல்வியையும், குழந்தைகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கொரோனா தொற்றிடம் தோற்காத கல்வி அளிக்கும் நுண் வகுப்பறை 100-வது நாளை தாண்டியுள்ளோம்.
தினந்தோறும் உணவளித்து உதவி வரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

(31.12.2020)








பேரிடர் கடந்த 2020

 பேரிடர் கடந்த 2020

--------------------------------------------------------------------

பிறந்தது சிறு கிராமம். எனது அப்பா மற்றும் அண்ணன், அண்ணனின் நண்பர்களின் வாசிப்பு பழக்கத்திலும், புத்தகங்கள் அறிமுகமும் சிறுவயதில் எனக்கும் வந்துவிட்டது.
படித்தது, வளர்ந்தது, அரசியல் செயல்பாடுகள் செய்தது, பணி செய்தது என பல பகுதிகளில் / ஊர்களில் இருந்துள்ளேன்.
அனைத்து ஊரிலும் நூலகத்தில் உறுப்பினர் ஆவதுதான் என் முதல் வேலையாக இருக்கும். அப்படி மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், செங்கோட்டை, திண்டிவனம் ஆகிய ஊர்களில் உள்ள நூலகத்தில் உறுப்பினர் ஆகியுள்ளேன். கிடைக்கும் நூல்களை எடுத்துப் படிப்பேன்.

நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் முடங்கிக் கிடந்த நூலகத்தையும் திறந்து பயன்படுத்தியுள்ளேன். திண்டிவனம் வந்த புதிதில் அரசு நூலகத்தில் உறுப்பினராகி, இன்றுவரை நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை நூலகம் ஒன்று இயங்கியது, அதிலும் படித்துள்ளேன்.
மேலும் நான் வாங்கும், நண்பர்களிடம் கிடைக்கும் நூல்களும் படித்து வருகின்றேன்.
இந்நிலையில்தன்
வாசிப்பை நேசிப்போம்
என்ற முக நூல் குழு அறிமுகமாகியது.
வாசிப்பை நேசிப்போம் எனும் இக்குழு நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தையும், பழக்கத்தையும் முன்னெடுத்து வருகின்றது. அதற்காக அவ்வப்போது போட்டிகளும் நடத்திவருகின்றது.
வாசிப்பு மாரத்தான் 2020 போட்டியில் பதிந்துகொண்டு பங்கேற்றேன். இதற்கு படிக்கின்ற புத்தகங்களை குறித்து வைப்பதோ, பட்டியலிடுவதோ கிடையாது. ஆனால், வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கெடுத்தால், படிக்கின்ற நூல் விவரங்களை பட்டியலிடவேண்டும். வாசிப்பை நேசிப்போம் குழுவில் நூல் அறிமுகமும் செய்யவேண்டும்.
திட்டமிட்டபடி 100 புத்தகங்கள் படித்ததை குழுவில் பட்டியலிட்டுள்ளேன். 70 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து அறிமுகமும் / விமர்சனமும் எழுதியிருந்தேன்.
எதிர்பார்த்தப்படி பொன்னியின் செல்வன் நூல் விமர்சனத்திற்கு பின்னூட்டங்கள் அதிமிருந்தன. கொஞ்சமும் எதிர்பார்க்காதது, "களப்பிரர்கள் காலம்" நூலுக்கான பின்னூட்டங்களும், கருத்துப்பகிர்வும்தான்.
ஆனால், கடந்த வாரம் படித்து, குழுவில் நூல் அறிமுகம் செய்திருந்த ஆன்ந்த் டெல்டும்டே அவர்களின் "தலித்துகள் நேற்று இன்று நாளை" நூல் மற்றும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் "சாதி ஒழிப்புப் பிரகடனம்" ஆகிய இரண்டு நூலுக்கும் response இல்லை. இது குறித்து யோசிக்க வேண்டும், பேசவேண்டும்.
வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்று நான் படித்த நூல்கள் பட்டியல்.
Reading_Marathon_2020_100
RM149 - 100/100
------------------------------------
100.களப்பிரர் ஆட்சியில் தமிழகம் -
மயிலை சீனி. வேங்கடசாமி
99. சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம் - பி.எஸ்.கிருஷ்ணன்.
98. தலித்துகள் நேற்று இன்று நாளை
ஆனந்த் டெல்டும்டே.
97. முள் - முத்து மீனாள்.
96.நீ எழுத மறுக்கும் எனதழுகு - இளம்பிறை
95. என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள் - இறைதூதர் நபி
94.கொரோனா வைரஸ் அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் - தாமஸ் பியுயோ.
93. ஒவ்வொரு படியாக முன்னேறலாம் - என்.சொக்கன்
92. கற்பித்தல் ஒரு கலை -
டாக்டர் பி.வி.பட்டாபிராம்
91. ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் - ஸ்டீபன் ஹாக்கிங்
90.வானமே எல்லை - கேப்டன் கோபிநாத்
89. பில்கேட்ஸ் - சாஃப்ட்வேர் சுல்தான்
என்.சொக்கன்
88.நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் - சி.எஸ்.வெங்கடேஸ்வரன்
87. மூன்றாம் நதி - வா.மணிகண்டன் நாவல்
86.இரண்டாவது கருவறை - இ.இசாக்
85.மசால்தோசை 38 ரூபாய் - வா.மணிகண்டன்
84. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா.மணிகண்டன்
சிறுகதை
83. உப்பு நாய்கள் -லஷ்மி சரவணகுமார்
82. . சொற்களைத் தவிர வேறு துணையில்லை - லஷ்மி சரவணகுமார்.
81. படைவீடு - தமிழ்மகன்
80. வானவல்லி - பாகம் 4 - சி.வெற்றிவேல்.
79.வானவல்லி - பாகம் 3 - சி.வெற்றிவேல்.
78. வானவல்லி - பாகம் 2 - சி.வெற்றிவேல்.
77. வானவல்லி - பாகம் 1 - சி.வெற்றிவேல்.
76.வென்வேல் சென்னி - பாகம் 3 - சிவெற்றிவேல்
75.வென்வேல் சென்னி - பாகம் 2 - சிவெற்றிவேல்
74.வென்வேல் சென்னி - பாகம் 1 - சிவெற்றிவேல்
73. அன்பெனும் ஆற்றல் - என்.சொக்கன்
72. பகத்சிங் - என்.சொக்கன்
71.ஐரீஷ் - லஷ்மி சரவணகுனார்
70. நீலப்படம் - லஷ்மி சரவணகுமார்.
69. நான் கண்ட காந்தி - தி.சு.அவினாசிலிங்கம்
68.கூவம் அடையாறு பக்கிங்காம் - கோ.செங்குட்டுவன்
67. வருகிறார்கள் - கரன் கார்க்கி
66. அறுபடும் விலங்கு - கரன் கார்கி
65. நாம் ஏன் உடற்பயிற்சிகளைக் கைவிடுகிறோம் - அதிஷா
64.பொன்னியின் செல்வன் - பாகம் 5
63.பொன்னியின் செல்வன் - பாகம் 4
62.பொன்னியின் செல்வன் - பாகம் 3
61. பொன்னியின் செல்வன் - பாகம் 2
60. பொன்னியின் செல்வன் - பாகம் 1
59. நந்தலாலா-மாலன்
58. புகார் நகரத்துப் பெரவணிகன் - பா.பிரபாகரன்
57.தூரத்து துரோகம் - ராஜேஷ்குமார்
56.சுபமங்கள காலங்கள் - யுகபாரதி
55. காதலாகி - இசாக்
54. தோழமை எனும் தூயசொல் - யுகபாரதி
53. அவர்கள் - வலம்புரி ஜான்
52. இவையும் இன்ன பிறவும் - அழகுநிலா
51. மணல் உரையாடல் - இசாக்
50. தேடுங்கள் கிடைக்காது! இந்தியா என் தாய் வீடு - ராஜேஷ்குமார்
49. கரிகால் வளவன் - கி.வா.ஜகன்நாதன்
48. நினைவின் தாழ்வாரங்கள் - கலாப்பிரியா
47.மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார் - நாவல் சொக்கன்
46. அகம் - அறிவுச் செல்வன்
45. தீண்டாதார் தலை நீக்கிய தீரர் - மெ.பெ.அரங்கசாமி.
44. நடுநிசி வேட்டை - அரிஞ்சயன்
43. பிரபாகரன் ஒரு வாழ்க்கை - செல்லமுத்து குப்புசாமி
42. தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் - ரவிக்குமார்
41.வழிகாட்டுதலும் ஆலோசனைக் கூறுதலும் - முனைவர் அரங்க மல்லிகா
40. தேசத்துரோகி - ஷோபா சக்தி
39. ம் - ஷோபா சக்தி
38. கொரில்லா - ஷோபா சக்தி
37.இறுதி இரவு - சி.சரவணகார்த்திகேயன்
36. ஜாதியற்றவளின் குரல் - ஜெயராணி
35. இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும் - மூவலூர் அ.இராமாமிர்தம்.
34. கஸ்பா - யாழன் ஆதி
33. மஞ்சு - எம்.டி.வாசுதேவன் நாயர்
32. நாகம்மாள் - ஆர்.ஷண்முகசுந்தரம்
31. கடுங்காலத்தின் கதைகள் - ஆதவன் தீட்சண்யா.
30. தூப்புக்காரி - மலர்வதி
29. காதுகள் - எம்.வி.வெங்கட்ராம்
28.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
27. அடி - தி.ஜானகிராமன்
26. உற்சாகம்தான் எல்லாமே - நார்மன் வின்சென்ட் பீல்
25. தன்னம்பிக்கை - நார்மன் வின்சென்ட் பீல்
24. காந்தி முதல் கல்புர்கி வரை - ஆர்.ராஜா
23. வைரஸ் - ம.சிவந்திரன்
22. செம்மீன் - தகழி
21.பந்தய்த் துடிப்பு - பட்டுக்கோட்டை பிரபாகர்
20.தொடரும் - பட்டுக்கோ பிரபாகர்.
19. பீஃப் கவிதைகள் - பச்சோந்தி.
21.டாலர் நகரம் - திருப்பூர் ஜோதிஜி
17. அருந்ததியர்களாகிய நாங்கள் - மதிவண்ணன்.
16. ஏழு நிறப்பூ - யூமா வாசுகி.
18.ஹெர்குலிஸ் - ஜெயந்தி நாகராஜன்.
14.உலகப் பிரபலங்களின் காதல் விவகாரங்கள் -
13. மீள்கோணம் - அழகியபெரியவன்.
12.உள் ஒதுக்கீடு - மதிவாணன்
11.மூடிய முகங்களில் - அழகிய பெரியவன்.

10.தலித்தியம் - கே.பாலகோபால்.

9. பீமா கோரேகான்.

10. காம்ரேட் - யஷ்பால்.

7.கொலை செய்யப்பட்ட கோடி பெண் சிசுக்கள் - ரவிக்குமார்.

6.சார்லஸ் டார்வினும் பரிணாமத் தத்துவமும் - மருத்துவர் பழ.ஜெகன்பாபு.

5.மனிதப் பேரினத்தின் வரலாறு - ஏற்காடு இளங்கோ.

4.நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல - ஏற்காடு இளங்கோ.

3.தீவிரவாதம் - ஹெச்.ஜி.ரசூல்

2. பரபரப்பான வழக்குகள் - தினத்தந்தி.

1.ஜெயலலிதா நடிப்பும் அரசியலும் - பாலுமணிவண்ணன்

(31.12.20 முகநூல்)