Saturday, December 26, 2020

பத்திரிகையாளர் சந்திப்பு

 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும்  தாய் தமிழ் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி பயில 7.5 ஒதுக்கீட்டில் இடம் அளிக்க வேண்டும்.

 

பத்திரிகையாளர் சந்திப்பு

07.11.2020 காலை 9.30 மணி. சாந்தி நிலையம் - விழுப்புரம்.

திண்டிவனம் ரோசனை தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் ஏற்பிசைவு பெற்று நடைபெற்று வருகின்றது. தமிழக அரசு பாடத்திட்டத்தின் மூலம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டணமின்றி இலவச  கல்வியை கடந்த 20 ஆண்டுகளாக அளித்து வருகிறது.

இப்பள்ளியில் மொட்டு வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவி கா.சந்திரலேகா, 9 முதல் 12ம் வகுப்பு வரை திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற சிறந்த மாணவியாகும். நீட் நுழைவுத் தேர்வில்  155 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவி சந்திரலேகா,  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 271 வது இடம் பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில்  தேர்ச்சி அடைந்துள்ள 52 பேரில், 10-வது இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவி சந்திரலேகா 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரை தாய்த் தமிழ்ப் பள்ளியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 6-ஆம் வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் பயிலவில்லை என்பதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கான

7.5 ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத சிக்கலில் உள்ளார். இவரைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலருக்கும் 7.5% ஒதுக்கீடு கிடைக்காத அவல நிலை உள்ளது.

இந்நிலையில்தான் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி பயில 7.5% ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 07.11.2020 சனிக்கிழமை 9.30 மணிக்கு விழுப்புரம் சாந்தி நிலையம் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

அவசியம் பங்கேற்று ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில ஆதரவளிக்க வேண்டும்

இவன்,

பேராசிரியர் பிரபா கல்விமணி,

தலைவர்,

தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி, ரோசனை,

திண்டிவனம்.

பேச : 9442622970 / 9894207407

07.11.2020

 

 

 

No comments: