Monday, December 28, 2020

அம்பேத்கர் நகரில் கலங்கி நிற்கும் இந்தத் தாயாரின் கண்ணீருக்கு யார் பதில் சொலவது?

அம்பேத்கர் நகரில் கலங்கி நிற்கும் இந்தத் தாயாரின் கண்ணீருக்கு யார் பதில் சொலவது?

சிதம்பரம் அருகே உள்ளது கவரப்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர், வடுகத்திருமேடு இரு தலித் கிராமங்களும் தண்ணீரால் சூழப்பட்டு தணித்தீவாக உள்ளது.
அனைத்து வீடுகளும் இடுப்பளவு தண்ணீர் ஏறியுள்ளது. அந்தத் தண்ணீரிலேயா குழந்தைகள், பெண்கள், முதியோர் என உள்ளனர்.
இன்றோடு 5-வது நாளாக அதிகாரிகள் உள்ளிட்ட யாராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தனது குழந்தைகள் இருவரையும் குடிசைவீட்டில் பரண் கட்டி உட்கார வைத்துள்ளோம் என்கிறார் இந்தத் தாயார்.
வருவாய்த் துறை அதிகாரிகளோ உணவு வழங்க வேண்டியது பஞ்சாயத்துத் தலைவர் எனகூறி ஒதுங்கிக் கொள்கின்றனர்.
சிதம்பரம் பகுதியில் சாதி ஆதிக்கம் செலுத்தும் வாண்டையார் குடும்பத்தினர்தான் பஞ்சாயத்துத் தலைவர். யார் எப்படி போனால் நமக்கென்ன என அவர்களது மாளிகையில் பதுங்கிக்கொண்டனர்.
எப்போதும் போல் தலித் மக்கள் புறக்கணிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
நிவாரணம் வேண்டாம், முடிந்தால் வீடு கிடைக்க உதவி செய்யுங்கள் என்கிறார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 100 வீடுகள் இப்பஞ்சாயத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. 100 வீடுகளையும் சட்டத்திற்குப் புறம்பாக ஒப்பந்தம் எடுத்த வாண்டையார் குழு, வீடுகளை ஒழுங்காக / தரமாக கட்டவில்லை என்பதால் அதிகாரிகள் வீடுகட்ட அனுமதிக்கவில்லை.
வாண்டையார் குழுவினர் ஒழுங்காக அப்போது வீடுகளைக் கட்டிக்கொடுத்திருந்தால், இப்போது தண்ணீரில் மிதக்கும் அவலம் ஏற்பட்டிருக்காது.
தண்ணீரில் தவிக்கும் அம்பேத்கர் நகர் & வடுகத்திருமேடு தலித் குடும்பங்களை உடனடியாக தற்காலில தங்குமுகாமில் தங்க வைக்க வேண்டும்.
IFAD நிறுவனத்தின் சமுதாயக் கூடம், அரசுப் பள்ளி போன்றவை பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் மக்களுக்கு தற்காலிக முகாம் உருவாக்கவேண்டும்.

06.11.2020 முகநூல் பதிவு



No comments: