Saturday, December 26, 2020

இதோ மற்றொரு உலக மனநல நாள்...

 

அரவிந்தன் சிவக்குமார்

இதோ மற்றொரு உலக மனநல நாள்...

முந்தா நாள் உலக மனநல நாள்...

நாடு முழுக்க வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. எதிர்ப்பார்த்தது போன்றே நாடடங்கு மக்கள் வாழ்வில் நிகழ்த்திய வன்முறை குறித்தோ, புலம் பெயர் தொழிலாளர் நடைப்பிணமாமய் விரட்டப்பட்டு குறித்தோ,  கடந்த ஏழு மாதங்களில் ஏற்கெனவே நிலவிக் கொண்டிருந்த பொருளாதார மந்த நிலை அதனால் நிலவிய மிகப்பெரிய நெருக்கடியில் கம்பி நுனியில் நின்றிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் ஊரடங்கால் நிர்மூலமாக்கப்பட்டு துவண்டிருந்ததைப் பற்றியோ லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்ததைப் பற்றியோ பசிக் கொடுமையால் சாக மனமில்லாமல் பிச்சை எடுத்தவர்கள் பற்றியோ, கடன் நெருக்கடியால் தற்கொலை செய்தவர்கள் பற்றியோ ஒரு ஊறுகாய் அளவுக்கு கூட பேச்சு அடிபடவில்லை...

ஆமாம் மனநலத்துறையின் மிக முக்கிய பணியே make people adjust to this sick society without raising any questions about the cause for their.sickness.

கட்டமைப்பு வன்முறையை பற்றி கேள்வி எழுப்பாமல், மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகளை பற்றி பேசாமல், அதைக் கடந்து போய் தனிமனித மூளை அவன் சிந்தனை அவன் செயல் முறையை மட்டுமே பேசி தன் வர்க்கக் கருத்தியலை மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியிருக்கிறது மனநலத்துறை...

உலகம் முழுக்க மக்கள் கொந்தளிப்பை , கோபத்தை , போராட்டத்தை மட்டுப்படுத்தி உளவியல் சிக்கல்களை மனநலப்பிரச்சனைகளை தனிமனித தோல்விகளாகவே சித்தரித்து  சந்தை சக்திகளை தற்காத்துக் கொள்ள மிகப் பேர் உதவியை இந்த நவதாராளமயமாக்கல் சமூகத்தில் மனநலத்துறை திறம்பட செய்து கொண்டிருக்கிறது. மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது....

மனித மனதை சமூக்ததின் இயக்கப்போக்கிலிருந்தும் அதன் தாக்கத்திலிருந்தும் பிரிக்க முடியாது.

Mind is embodied in the brain

Brain is embedded in the body

The body is in constant interaction with the body என்று நரம்பியல் நிபுணர் ஸ்டீவன் ரோஸ் மனம் பற்றிய கேள்விக்கு விடை சொல்வார். மனதை பற்றி பேசும் போது சமூகத்தின் தொடர்புகளற்று , மனதை மூளையிலிருந்தும் மூளையை உடலிலிருந்தும உடலை சமூகத்திலிருந்தும் பெயர்த்தெடுத்து தனித்தனியே பார்க்க முடியாது கூடாது அது அறிவியலுக்கு புறம்பானது..

மேலும் மனநலம் மனநலச்சிக்கல் மனநோய்கள் ஒரு குறிப்பிட்ட சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் தான் நிகழ்கிறது. அதை மறைத்துவிட்டு நாம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வது ராஜா ராணி படத்தில் சிவாஜி கணேசன் திரை மொழியில் புண்ணுக்கு புனுகு பூசும் வேலை.

மக்கள் பிரச்சனைகளுக்கு துணை நிற்கவில்லையென்றாலும் பரவாயில்லை அவர்கள் அறச்சீற்றத்தை வாழ்வை சீர்குலைத்தவர்களின் மீதான நியாயமான கோபத்தை தங்கள் அடிப்படை வாழும் உரிமைகளை சமூக நீதியை நசுக்கியவர்களின் மீதான மக்களின் இயல்பான கோபத்தை மக்கள் எழுச்சியை நீர்த்துப்போகச் செய்யும் செயலை மனநலத்துறை செய்யாமல் இருந்தால் போதுமானது....

(12 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)

No comments: