Sunday, May 31, 2020

தாகம் - கவிஞர் அறிவுச்செல்வன் புத்தகம்

கவிதைகள் படிப்பது கடந்த பல ஆண்டுகளாக நின்றே விட்டது. ஏனோ, கவிதைப் புத்தகங்கள் பக்கம் மனம் போகவே இல்லை.

80 களின் இறுதி, 90 களில் பல வடிவங்களில் கவிதை நூல்கள் வெளியாகின. வடிவமைப்பும் வித்தியாசமாக இருக்கும்.
ஏ4 தாளை நீளவாக்கில் மடித்து (பேருந்தில் நடத்துனர் பயன்படுத்தும் பயணச் சீட்டு புத்தகம் போன்று) ஒரு கவிதைப் புத்தகம் இப்போது பார்த்தேன். படிக்கத்தோன்றியது.
அகம் என்ற தலைப்பில் அறிவுச் செல்வன் என்பவர் எழுதியிருந்த கவிதைப் புத்தகம்.
எந்த ஆண்டு என கண்டுபிடிக்க முடியவில்லை. படித்து முடித்த பிறகு கடைசி பக்கத்தில் கி.ரா அவர்களின் அணிந்துரையில்தான் 1993 ல் வெளியான புத்தகம் எனத் தெரிந்தது.
அப்போதைய கவிதைகளில் Trending ஆக இருந்த சமூகச் சாடல், வெறுப்பு, தோல்வி, சோகம், தன்னம்பிக்கை, வேலை வாய்ப்பு, பெண் விடுதலை போன்றவைகளை மையமாக கொண்ட கவிதைகள் நிறைந்த புத்தகம்.
சில கவிதைகள் தற்போதும் ரசிக்கும்படியாக இருந்தது.. அவைகள்தான் இவை.
நம் கடைகள்
தேவைகளுக்காக இல்லை
நாம்தான் கடைகளின் தேவை
என்றானது இன்று.
உன் தேவைகளை
விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன.
எல்லோருக்கும் தெரிகிறது,
எப்படி விற்பது என்றும்
எப்படி வாங்குவது என்றும்.
எவனுக்கும் தெரியவில்லை,
எப்படி வாழ்வில் என்றும்
எதைநோக்கி வளர்வது என்றும்.
இந்தச் சந்தையில்
எந்த மனிதனுக்கும்
உள்ளீடு இல்லை.
ஆன்மாவில் கொஞ்சமும்
அடர்த்தி இல்லை
வாங்க முடியாதது
எதுவுமே இல்லை..
ஒருவேளை, இருந்தால்..?
__என்ன,
கொஞ்சம் அதிக விலை இருக்கும் அவ்வளவுதான்....
தகுந்த விலை கிடைத்தால்
தன்னையே விற்பவன்,
தள்ளி நிற்காவிட்டால்
உன்னையும் விற்பான்.
உன் சகோதரன் வாங்குவான்.
நுகர்வு கலாச்சாரத்திற்கு
கடிவாளம் ஏதாவது செய்யாவிட்டால்.. மனிதர்களின் சாம்ராஜ்யம் சரிந்து சாமான்களின் சாம்ராஜ்யம் வளர்ந்து
யாருமே எதுவுமே
செய்யமுடியாது..
+++++++
(#இந்தக்_கவிதை_தற்போதை_ஊரடங்கு காலத்திற்கு பொருத்தமான தோன்றும்)
இது
நமது மக்களின்
ஓய்வு நேரங்களுக்கு
உயிர் ஒட்டவில்லை.
இரக்கமற்ற
முதலாளி போலாகிவிட்டது.
உழைக்கும் நேரங்களைச்
சுரண்டுகிறது.
உண்ணும் நேரங்களை
தின்னுகிறது.
உலவும் நேரங்களை
ஓடிக்கிறது.
படிக்கும் நேரங்களைப்
பறிக்கிறது
சிந்திக்கும் நேரங்களைச்
சிதைகிறது.
++++++
(#குழந்தைகளை_கட்டுப்பாடுகளுடன் பொத்தி பொத்தி வளர்க்கும் பெற்றோர்களுக்கு இந்தக் கவிதையைக் கூறுகின்றார். )
அவர்களை
இறக்கிவிடுங்கள்;
தங்களது
தளத்தையும் களத்தையும்
அவர்கள்
கால்களால் அடையட்டும்.
உங்கள் மலைகளைவிட
எங்கள் பள்ளத்தாக்குகள்
உயரமானவை.
உங்கள் மூதாதையரைவிட
எங்கள் விடலைகள்
அறிவாளிகள்.
உங்களைவிட
எங்கள் மூளைகள்
முற்றல்.
++++++
#1993ல்_எழுதப்பட்டுள்ள_இந்தக் கவிதையில், ஆதிக்கத்தினை விலங்குகளோடு ஒப்பிட்டு, இறுதியில் பெண்கள் மீதான ஆதிக்தையும் சாடுகிறார்)
எங்கும் விலங்குகள்
வியட்நாம்களில்
கழுகுகள்
வெண்மணிகளில்
பாம்புகள்
தெலுங்கானாக்களில்
நரிகள்
ஈழங்களில்
ஒட்டகங்கள்.
அலங்காநல்லூரில்
மாடுகள்
அலுவலகங்களில்
நாய்கள்
காக்கித்தோல்
புலிகள்.
பேருந்துகளில்
எருமைகள்
திரையரங்குகளில்
பன்றிகள்.
வீடுகளில்
கணவர்கள்.
வீதிகளில்
ஆடவர்கள்.
இப்படி
எங்கும் விலங்குகள்..
..
ஆண்களே..
உங்கள்
நகங்கள் அழிவதெப்போ?
நச்சுப்பல் விழுவதெப்போ?
கொம்புகள் உடைவதெப்போ?
அன்பினை அறிவதெப்போ?
++++++
(#ஒரு_கவிதையில்_இடையில் இருந்த இந்த வரிகள்.. தற்போதைய சனாதன ஆட்சியின் அடக்குமுறைகளை நினைவுபடுத்துகிறது.
எல்லாச் சந்தேகங்களே,
கைகட்டுங்கள்..
எல்லாக் கேள்விகளே,
வாய்ப் பொத்துங்கள்!.
+++++
கவிதைகள் கவிஞர் அறிவுச்செல்வன்.

திருப்பூர் மாவட்டத்தில் 10 இருளர் குடும்பங்கள் கொத்தடிமை - சித்திரவதை ; மீட்கவேண்டும்

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் கருங்காலிப்பட்டு பழங்குடி இருளர்கள் - திருப்பூர் மாவட்டம் திருமலாபாளையம் டி.பி.சி செங்கல் சூளையில் அடி ,உதை, சித்திரவதை, கொலை மிரட்டல்.
10 கொத்தடிமை குடும்பங்களை  மீட்க கோரி திருப்பூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்,  காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு. விழுப்புரம் மாவட்டம் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆன்லைன் புகார் மனு!
விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் கருங்காலி பட்டு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளர் சாதியை சார்ந்த ஏழுமலை மற்றும்10 குடும்பத்தினரை விழுப்புரம் மாவட்டம் தெளிமேடு கிராமத்தைச் சார்ந்த முருகன் கவுண்டர் முன்பணமாக ஒரு ஜதைக்கு 70 ஆயிரம் ரூபாய் வீதம் 5 குடும்பங்களுக்கு கொடுத்து கடந்த தை மாதம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் எல்லைக்கு உட்பட்ட திருமலா பாளையம் கிராமத்தில்
டி.பி.சி செங்கல் சூளையில் வேலைக்கு விடப்பட்டார்கள்.

சூளை அருகே விவசாய நிலத்தில் பயன்படாத வெங்காயத்தை நிலத்தின் ஓரமாக கொட்டி இருந்ததை குழம்பு வைப்பதற்காக எடுத்து வந்த பழங்குடி இருளர் 1.வினோத், 2 .முத்து ஆகிய இருவரையும் சூலை உரிமையாளர் & இரண்டு பேர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் தெளிமேடு கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ் ஆகிய மூன்று நபர்களும் மேற்படி இரண்டு நபர்களை "எதற்காக வெங்காயத்தை எடுத்து வந்தீர்கள்?"-என்று கேட்டு ஈவு இரக்கமின்றி செங்கல்லை எடுத்து முகத்தில் குத்தி சித்திரவதைக்கு உட்படுத்தப்படுத்தி கொலை மிரட்டல் விடுதனர்.
இது சம்பந்தமாக எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் 2015-இன் கீழ் மற்றும் கொத்தடிமை மீட்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கோரியும்,
விழுப்புரம் மாவட்டம் கருங்காலிபட்டு கிராம பழங்குடி இருளர்களை பாதுகாப்பாக மீட்டுக் கொடுக்குமாறு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.


- பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்,
விழுப்புரம் மாவட்டம்.

என்.எல்.சி-யில் ஊழல் - புகார் அனுப்பியவர், அறிக்கை அளித்தவர்கள் மீது அவதூறு செய்தி; நடவடிக்கை எடுக்கப்படவேண்டு!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக அவர் துணைத் தலைமை மேலாளர் பதவிக்கு வந்த போதே போதிய கல்வித் தகுதி இல்லாமலும், போலியான பணி அனுபவ சான்றிதழ்கள் அளித்தும் வந்துள்ளார். ஊழல், முறைகேடு செய்து சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி, பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆர்.நரசிம்மன் இவரைச் செயற்பொறியாளர் பதவியிலிருந்து முதுநிலைப் பணியாளர் மேலாளராக சட்ட, விதிகளை மீறி நியமனம் செய்துள்ளார்.
மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் பணி நியமனங்களில் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆட்களை நியமித்துள்ளார். அதுவும் உயர் பதவிகளானப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் பதவிகளுக்குப் பணி நியமனம் செய்யும் போது என்.எல்.சி. நிறுவனத்திலோ அல்லது இதே தகுதியுடைய பிற பொதுத்துறை நிறுவனங்களிலோ பணியாற்றிய தகுதியானவர்களை நியமனம் செய்வது வழக்கம். ஆனால், அவ்வாறு செய்தால் லஞ்சம் பெற முடியாது என்று சிறு நிறுவனகளில் இருந்து உயர்பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்து லஞ்சம் பெற்றுள்ளார். மேலும், வெளியில் இருந்து நியமனம் செய்தால் தன் மீது ஊழல் புகார் அளிக்க மாட்டார்கள் என்பதாலும் இதுபோன்று செய்துள்ளார்.
ஊழல் புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கில் சிக்கிப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆர்.நரசிம்மனின் மகன் கணேஷ் நரசிம்மனை என்.எல்.சி. சட்ட, விதிமுறைகளை மீறி துணைத் தலைமை மேலாளர் பதவிக்கு நியமனம் செய்து, அவரும் பணியில் சேர்ந்துள்ளார்.
நெய்வேலி நகரியத்தில் தான் குடியிருக்கும் அதிகாரபூர்வ வீட்டைப் பராமரமரிக்க தானே கோப்பில் கையெழுத்திட்டு ரூ. 70 லட்சம் பணத்தைக் கையாடல் செய்துள்ளார். விதிகளை மீறி ஓராண்டில் இரண்டு முறை தன் வீட்டிற்குத் திரைத்துணி வாங்கியதில் மொத்தம் ரூ. 3 லட்சம் முறைகேடு செய்துள்ளார்.
சொந்தப் பயணமாக டோக்கியோ சென்ற போது தன் கைப்பேசி கட்டணமாக ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கு பில் அளித்து என்.எல்.சி. நிதித்துறை ஆட்சேபனையை மீறி அப்பணத்தைப் பெற்றுள்ளார். தனக்குக்கீழ் பணிபுரியும் சிலரைப் பினாமியாக வைத்து என்.எல்.சி. நிறுவன கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை எடுத்து அதில் நிறைய சம்பாத்தித்து வருகிறார்.
மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் செய்ய ஊழல், முறைகேடுகள் குறித்து என்.எல்.சி. தலைமைப் பொதுமேலளர் திரு. சி.துரைக்கண்ணு அவர்கள் கடந்த 06.05.2020 மற்றும் 13.05.2020 ஆகிய நாளிட்டு பிரதமர், மத்திய கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ. உள்ளிட்டு பலருக்கும் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். அதில் மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் ஊழல், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து சென்ற 23.05.2020 அன்று தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு செயலாளர் இரா.முருகப்பன் ஆகிய நாங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டோம். அதில் மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமன் மீதான ஊழல், முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களைப் பட்டியலிட்டு, அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி இருந்தோம்.
இதனைத் தொடர்ந்து, விருத்தாசலத்தில் இருந்து வெளியாகும் தடயம் என்ற இணைய நாளிதழில் “என்.எல்.சி. மனிதவள துறையின் மாசற்ற மாணிக்கம் இயக்குநர் விக்ரமன்” என்ற தலைப்பில் அதன் ஆசிரியர் தடயம் பாபு ஒர் செய்தி எழுதி வெளியிட்டுள்ளார். அதில் மேற்சொன்ன அதிகாரி ஆர்.விக்ரமனின் ஊழல், முறைகேடுகள் குறித்து புகார் அளித்துள்ள அதிகாரி சி.துரைக்கண்ணு குறித்து இழிவாகவும், அவதூறாகவும் கீழ்காணும்படி எழுதியுள்ளார்.
“நெய்வேலி பகுதியில் அனைவராலும் ஓரங்கட்டப்பட்ட, விலங்குகளோடுகூட ஒப்பிட முடியாதவரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு நேர்மையான அதிகாரி மீது பழிச்சொல் வார்த்தையை பூசுவது சமூக ஆர்வலர்களான உங்களுக்கு அழகா?” என்று எழுதியதோடு, மனித உரிமைத்தளத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றி வரும் எங்களையும் கேவலப்படுத்தும் வகையில் எழுதியுள்ளார். இந்த மேற்சொன்ன தடயம் பாபுவிற்குப் பின்னால், என்.எல்.சி. நிறுவனத்தில் முழுநேர ஊழியராகவும், தினமலர் நாளேட்டில் செய்தியாளருமான வரதராஜிலு என்பவர் இருக்கிறார் என்பது விசாரித்ததில் தெரிகிறது. இவர்களின் நோக்கமே பணம் பெற்றுக் கொண்டு (Paid News) வெளியிடுவதும், ஒரு குறிப்பிட்ட அதிகாரி மீது அவதூறாக செய்தி வெளியிட்டு, பிறகு மிரட்டி “பிளாக்மெயில்” செய்து பணம் பறிப்பதும் ஆகும்.
இந்நிலையில், மேற்சொன்ன தடயம் பாபு, வரதராஜிலு மீது சென்ற 26.05.2020 அன்று, நெய்வேலி, வடக்குத்து காவல்நிலையத்தில் சி.துரைக்கண்ணு புகார் அளித்துள்ளார். அதில், தன்னை இழிவுப்படுத்திச் செய்தி வெளியிட்ட மேற்சொன்னவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
என்.எல்.சி நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் சி.துரைக்கண்ணு தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் உதவிப்பொறியாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, என்.எல்.சி நிறுவனத்தில் 1986-ல் பணியை மேற்கொண்டவர். தனது பணிக்காலங்களில் ஏற்றுக்கொண்ட பணிகளில் முத்திரைப் பதித்தவர்.
2001-2004ஆம் ஆண்டு என்.எல்.சி கல்விச் செயலாளராக பணியாற்றியபோது என்.எல்.சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தியவர். 2014-ல் நெய்வேலி அருகில் 1664 ஏக்கரில் அடையாளமின்றி தூர்ந்துகிடந்த வாலாஜா ஏரியை என்.எல்.சி நிறுவனத்தின் சி.எ.ஸ்.ஆர் திட்டத்தின்கீழ் ரூ. 14 கோடியில் சீரமைத்து, நிறுவனத்திற்கு அகில இந்திய அளவில் புகழைச் சேர்த்தவர்.
2016-ல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்கங்களின் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்று, பல்வேறு நலத்திட்டங்ளைச் செயல்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றவர்.
இதுமட்டுமன்றி என்.எல்.சி. நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக மறைந்த ஐ.பி.எஃப் செல்வராஜ், பொறியாளர் பரமசிவம் உள்ளிட்ட பல நேர்மையானவர்களுடன் இணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வெற்றியும் கண்டவர். 1999-ல் நிறுவனத் தலைவர் பூபதி, 2005-ல் நிர்வாக இயக்குநர் நரசிம்மன், 2009-ல் நிறுவனத் தலைவர் அன்சாரி ஆகியோர் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்தவர்.
இப்படியான செயல்களின் மூலம் நற்பெயருடன் விளங்குபவரும், இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனம் திறம்பட செயல்படவும், ஊழல், முறைகேடுகள் மலிந்து அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் நல்ல நோக்கத்தோடு பணியாற்றி வரும் அதிகாரியுமான சி.துரைக்கண்ணு மீதும், அவருக்குத் துணையாக இருக்கும் எங்களையும் இழிவுபடுத்திய மேற்சொன்ன செய்தியாளர்கள் தடயம் பாபு, வரதராஜிலு ஆகியோரின் உள்நோக்கம் கொண்ட செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தினமலர் நாளேடு உள்ளிட்டு தமிழகம், புதுச்சேரியிலுள்ள அனைத்து ஊடகங்களும் நாங்கள் எடுக்கும் பல்வேறு மனித உரிமைச் சார்ந்த பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்க எங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்து வருகின்றன என்பதையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே, நேர்மையான அதிகாரி சி.துரைக்கண்ணு மற்றும் எங்களையும் உள்நோக்கத்தோடு இழிவுப்படுத்தி அவதூறாக எழுதிய மேற்சொன்ன தடயம் பாபு, வரதராஜிலு ஆகியோர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், கடலூர் மாவட்ட காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பேராசிரியர் அ.மார்க்ஸ்
தேசியத் தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO).
பேராசிரியர் பிரபா.கல்விமணி,
தலைவர், மக்கள் கல்வி இயக்கம்.
கோ.சுகுமாரன் , செயலாளர்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
இரா.முருகப்பன், செயலாளர்,
நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு.


(31.05.2020 முக நூல் பதிவு)

ஊரடங்கு காலத்திலும் சாதிய வன்கொடுமைகள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்…!!


இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்,
சாந்தி நிலையம் - மக்கள் பாதுகாப்புக் கழகம்
இணைந்து அளிக்கும் கூட்டறிக்கை
 


ஊரடங்கு காலத்திலும் சாதிய வன்கொடுமைகள்
சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்…!!

28.05.2020
கொரோனோ ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25 -ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி காலை ஜெயஸ்ரீ என்ற சிறுமி இறந்தது வரையிலான 45 நாட்களில் 20 மாவட்டங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் கொலையானது உட்பட மொத்தம் 40 வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை காவல் துறைக்கு புகாராகச் சென்று, தெரிய வந்தவை மட்டும். இன்னும் நூற்றுக்கணக்கான வன்கொடுமைச் சம்பவங்கள் வெளியில் தெரியவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.  இதில், 37 வன்கொடுமைச் சம்பவங்களில் தலித் மக்களும், 3 சம்பவங்களில் பழங்குடியினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள் – 20 மாவட்டங்களில்
1.      கொலை – 7
2.      ஆணவப் படுகொலை – 1
3.      கொரோனா தூய்மைப் பணியாளர் மரணம் - 2
4.      பொது இடத்தில் இழிவு / கட்டி வைத்து / முட்டிபோட வைத்து – 3
5.      பொது சொத்து / பொது இடத்தை பயன்படுத்தத் தடை – 4
6.      கொரோனா தொடர்பான வன்கொடுமை – 2
7.      சமூக வலைதளங்களில் இழிவு – 2
8.      அம்பேத்கர் சிலை அமதிப்பு – 1
9.      நில அபகரிப்பு – 2
10.   வீடு இடிப்பு - 1
11.   சாதி மறுத்து காதல் திருமணம் செய்ததால் தாக்குதல் – 1
12.   ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் / செயல்படத் தடை – 3
13.   சமூகப்புறக்கணிப்பு – 1
14.   தாக்குதல் - 10
20 மாவட்டங்களில் நிகழ்ந்துள்ள இந்த 39 வன்கொடுமைகளில் தாக்குதல் என்ற அளவில் 9 என்றாலும், 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது சாதி ஆதிக்கத்தின் உச்சக்கட்ட கொடூரமாகும். அதிலும், கொலை செய்வதன் மூலமாக, பிறரையும் அச்சுறுத்தி சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.  கொரோனா தூய்மைப் பணியாளர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், பொது வழியில் சென்றது, பொது இடத்தில் நீர் பிடித்தது என பொது வளங்களைப் பயன்படுத்தவிடாமல் 4 வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. பொது இடத்தில் முட்டி போட வைத்து, செருப்பால் அடித்தும் தலித் இளைஞர்கள் இழிவு செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடை திறந்த அன்று, குழந்தைமீது மோதுவது போன்ற குடிபோதையில் வேகமாகச் சென்ற சாதி இந்து இளைஞர்களை மெதுவாகச் செல்லுங்கள் என்று கூறியதற்காக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடனை அடைத்து நிலத்தை திருப்பிக் கேட்டதற்காகவும், நில ஆக்கிரமிப்பை எதிர்த்தற்காகவும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு துப்புரவுப் பணியாளர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்காக இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டபிறகு, உயிருக்குப் பயந்து வெளியூரில் வசித்து தம்பதியர், குழந்தை பிறந்ததும் ஊருக்கு செல்கின்றனர். பிறந்த குழந்தையுடன் சென்றவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். எல்லாவற்றையும் விட ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான தலித்துகளை செயல்பட விடாமல் தடுப்பது, தாக்குவது, இழிவு செய்வது என இந்த ஊரடங்கு காலத்தில் எல்லையற்ற வன்கொடுமைகள் நிகழ்ந்தபடியே உள்ளன. 
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மைய நோக்கமே, வன்கொடுமைகள் நிகழும் முன்பே அதனைத் தடுப்பதுதான். ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற வன்கொடுமைகளும், வன்கொலைகளும் நிகழ்வதை தடுக்கமுடியாமல், வேடிக்கைப் பார்த்தது அரசின் இயலாமையையும், தோல்வியையுமே காட்டுகின்றது.
இந்நிலையில் தொடர்ந்து வன்கொடுமைகள் நிகழாமல் இருக்க கீழ்கண்ட கோரிக்கைகளை பரிந்துரைகளாக முன் வைக்கின்றோம்.
1.      ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் இக்காலத்தில் வன்கொடுமை நிகழாமல் தடுக்கவும், வன்கொடுமை நிகழ்ந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்டம் மற்றும் வட்டந்தோறும் சிறப்பு காவல் பிரிவுகள் உருவாக்கப்படவேண்டும்.

2.      ஊரடங்கு சட்டம் 144 நடைமுறையில் உள்ள இச்சூழலில், சாதி இந்துக்கள் கும்பலாகச் சென்று தலித் மக்கள் மீது வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், ஊரடங்கு சட்டத்தை மீறியது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், இவர்கள் அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவேண்டும். 

3.      நிகழும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும், நிகழ்ந்த வன்கொடுமைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான மாவட்ட விழி கண்குழு 3 மாதத்திற்கு ஒருமுறையும், முதல்வர் தலையிலான மாநில விழிகண் குழு 6 மாதத்திற்கு ஒருமுறையும் கூடி ஆய்வு செய்யவேண்டும். ஆனால் இதனை அரசு நடைமுறைபடுத்துவதில்லை. இந்த ஊரடங்கின் நெருக்கடி காலத்தின் சூழலையும், அதிகரிக்கும் வன்கொடுமைகளையும் கருத்தில் கொண்டு மாதந்தோறும் மாவட்ட விழிகண் குழு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தி ஆய்வு செய்யவேண்டும். செயல்பாட்டாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கருத்தரிந்து வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை, முதல்வர் தலைமையிலான அரசும், மாநில விழிகண் குழுவும் அறிக்கையாகப் பெற்று பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

4.      வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யவும், உடனிருக்கவும் செயல்பாட்டாளரை அனுமதிக்கலாம் எனவும், அவை பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்கான உரிமைகளாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 15A, வழங்கியுள்ளது. இதனடிப்படையில், பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிக்கவும், சட்ட உதவிகள் வழங்கவும் செயல்பாட்டாளர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படவேண்டும்.

5.      மேற்கண்ட 39 வன்கொடுமைச் சம்பவங்களில் பல வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் மீதே எதிர்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் திரும்பப் பெறப்படவேண்டும்.

6.      பாதிக்கப்பட்டோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசின் சிறப்பு நிதித் திட்டம் மற்றும் பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழும் மறுவாழ்வு பணிகள் செய்யப்படவேண்டும். குறிப்பாக இத்திட்டங்களில் புதிய வேலை வாய்ப்புகள், தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்டோருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திடவேண்டும். இதனை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் உறுதிசெய்திட வேண்டும்.
மேலும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்துள்ள 23 வன்கொடுமை நிகழ்வுகளை இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் - SASY அமைப்பு சார்பாக சட்ட உதவிகளை செய்து வருகின்றோம். அனைத்து வழக்கிலும் அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். மேலும், ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தில் அருந்தியர் இளைஞர் பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி புலன் விசாரணை மேற்கொள்ள உத்திரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யல் உள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். 
         வே.அ.இரமேஷ்நாதன்                                                         பிரபா கல்விமணி
                 இயக்குநர்,                                                                                   ஒருங்கிணைப்பாளர்,
இளைஞர்களுக்கான சமூக.                                                                   பழங்குடி இருளர்
  விழிப்புணர்வு மையம்                                                                            பாதுகாப்புச் சங்கம்.
                9560028068.                                                                           9442622970 / 904722970

          அந்தோணிகுருஸ்                                                                      பி.வி.ரமேஷ்
                   தலைவர்                                                                                     தலைவர்
           சாந்தி நிலையம்                                                               மக்கள் பாதுகாப்புக் கழகம்
                  9443328740                                                                                              9443227529






தொடர்புக்கு:
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்.  33, அண்ணா நகர்,
4-வது குறுக்குத் தெரு, மரக்காணம் சாலை, திண்டிவனம்- 604001.
பேச : 9560028068








ஊரடங்கு காலத்திலும் சாதிய வன்கொடுமைகள்

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் – Social Awareness Society for youths (SASY)
33ஏ, அண்ணா நகர், மரக்காணம் சாலை, திண்டிவனம்-604001, விழுப்புரம் மாவட்டம்.

வ.எ
மாவட்டம்
வன்கொடுமை
நாள்
வன்கொடுமை
நிகழ்வு
காவல்
நிலையம் / DSP
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
SASY பரிந்துரைகள்
1.        
கள்ளக்குறிச்சி
வட்டம் : உளுந்தூர்பேட்டை
தலித் செய்தியாளர் மீது கொலைத் தாக்குதல்
  03.04.2020
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர் படம் சாணம் பூசி இழிவு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளிச்சம் தொலைக் காட்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ், செய்தியாக்கியுள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த சாதி வெறி கும்பல் கடந்த 23.04.2020 அன்று ஆதி.சுரேஷ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

PS  & DSP :
உளுந்தூர்பேட்டை.
·    Cr.No:142/2020 U/s:147,148,,294(b),506(ii)-IPC, 3(1) (r), 3(2) (va) SC/ST Act 17.03.2020
·    Cr.No:416/2020 U/s:147,148,,294(b),506(ii)-IPC, 3(1) (r), 3(2) (va) SC/ST Act 19.04.2020
·    7 பேர் கைது.
·    அம்பேத்கர் படம் இழிவு செய்யப்பட்டது தொடர்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3(1) (t) சேர்க்கப்படவேண்டும்.
·    பாதிக்கப்பட்ட சுரேஷ் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
·    கடமையை புறக்கணித்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய காவலதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் 4 படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2.        
விழுப்புரம்/ வட்டம் : திருவெண்ணெய்நல்லூர்
தாக்குதல்
09.05.20
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எடையார் கிராமத்திலுள்ள தலித் இளைஞர்கள் பழம் வாங்கியுள்ளனர். அப்போது தொட்டிக்குடிசை என்ற கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்து இளைஞர்கள் சிலர், தங்களுக்கு முதலில் கொடுக்குமாறு  தகராறு செய்துள்ளனர். 
PS : திருவெண்ணெய்நல்லூர்
DSP
திருக்கோவிலூர்
·        Cr.No:624/2020, U/s:147,178, 294(b),323,324,506(ii),307-IPC, r/w:3(1) (r), (s), 3(2) (Va), 3(2) (V) – SC/ST Act          date : 08.05.2020
·        3 Members Arrested

Counter FIR against Dalit’s
·        Cr.No:625/2020, U/s:147,178, 294(b),323,324,506(ii),307-IPC Date ; 08.05.2020
·        5 Members Arrested
எதிர் வழக்கு திரும்பப் பெறப்படவேண்டும்.
3.        
விழுப்புரம்
வட்டம் : திருவெண்ணெய்நல்லூர்
கொரோனா தடுப்பு வேலி
09.05.2020
திருவெண்னெய்நல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட  கொரொனா தடுப்பு வேலியால் தலித் மக்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைக்குச் சென்று வரமுடியாத நிலையில், இதுகுறித்துக் கேட்டுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தலித் மக்களின் 4 இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
திருவெண்ணெய்நல்லூர்
·        Cr.No:622/2020 U/s:147,148,,294(b),323,324,506(ii)-IPC, 3(1) (r), 3(2) (va), 3(2) (v)–SC/ST Act – 7.05.2020
·        4 Members Arrested

Counter Case Against Dalit’s.
·        Cr.No:621/2020 U/s:147,148,,294(b),323,324,506(ii)-IPC,
·        4 Arrested
·        எதிர் வழக்கு திரும்பப்பெறப்பட வேண்டும்.
·        தலித் இளைஞர்களின் சேதமான 4 இரு சக்கர வாகனத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
4.        
விழுப்புரம்
வட்டம் : விக்கிரவாண்டி
அதிகாரிகள் அலட்சியத்தால் பழங்குடியினர் மரணம்
08.05.2020
விழுப்புரம் மாவட்டம், நல்லாப்பாளையம் கிராமத்தல், உடல் நிலை சரியில்லாமல் இருந்த, பழங்குடி இருளர் அய்யனாரின் (35), தாய் மற்றும் மனைவியை கொரோனோ சோதனைக்காக 08.05.20 மாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கவனிக்க ஆள் இன்றி, அன்று இரவு அய்யனார் இறந்துவிட்டார். ஐந்தாம் வகுப்பு படிக்கும், 10 வயது மகன் ஜீவா மட்டும், இறந்துபோன தந்தையின் உடலுடன் தவித்துக் கிடந்தான்.
கண்டாச்சிபுரம்
காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தகவல் அளித்தபின்,
அரசு அதிகாரிகள் உடலை அடக்கம் செய்தனர்.

5.        
விழுப்புரம்/ வட்டம் : திருவெண்ணெய்நல்லூர்
சிறுமி எரித்துக் கொலை முயற்சி
10.05.2020
திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் உள்ள  சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலுவின் மகள் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீ 10.05.2020 அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் இருவரும் வீட்டிலிருந்த சிறுமியின்மீது, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,  அவசர சிகிச்சை பலன் இன்றி, மறுநாள் (11.05.20)  சிறுமி ஜெயஸ்ரீ மரணமடைந்தார்.
PS : திருவெண்ணெய்நல்லூர்

DSP : திருக்கோவிலூர்

·        Cr.No:630/2020, U/s:307 –IPC @ 302 – IPC
·        2 Arrested
அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படவேண்டும்.
6.        
கள்ளக்குறிச்சி
வட்டம் : உளுந்தூர்பேட்டை
படுகொலை
31.03.2020
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் இளைஞர் பாண்டியன்(35),  அதே ஊரைச் சேர்ந்த வெங்கடலாஜலபதி என்ற சாதி இந்துவால் மின்சாரம் வைத்துப் படுகொலை. அவரது உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதி இந்துக்கள் கொலையினை மறைத்து, முயல்வேட்டைக்கு சென்றபோது மின்சார தாக்கி மரணம் என வழக்கினை மாற்றியுள்ளனர்.
PS : திருநாவலூர்
DSP : உளுந்தூர்பெட்டை

·        Cr.No:235/2020, U/s:147, 201,304(ii)-IPC,
Sec:135 (i)IE Act
Date : 31.03.2020
·        4 Members Arrested
சி.பி.சி.ஐ.டி புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
7.        
விழுப்புரம்
வட்டம் : திருவெண்ணெய்நல்லூர்
சாதி சொல்லி  இழிவு – தாக்குதல்
08.05.2020
விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் பாக்கியராஜ், தனது நண்பர் சத்தியராஜ் உடன் காரில் கொடிகட்டிகொண்டு சென்றுள்ளார். காரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியுடன் சென்றுள்ளனர். அப்போது, ஏம்பலத்தைச் சேர்ந்த சாதி இந்துவான அருள்கணேஷ் என்பவர், காரினை வழிமறித்து, கட்சிக் கொடியினை இழிவுபடுத்திப் பேசி, தலித் இளைஞர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர் / திருக்கோவிலூர்
·        Cr.No:623/2020 U/s:341,294(b),427,506(ii)-IPC, 3(1) (r), (s), 3(2) (va)–SC/ST Act – 08.05.2020

விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும்.

8.        
கள்ளக்குறிச்சி
வட்டம் : சங்கராபுரம்
சாதி சொல்லி இழிவு. பொய் வழக்கு
10.05.2020
சங்கராபுரம் அருகே கல்லிப்பட்டு கிராம்த்தைச் சேர்ந்த  தலித் இளைஞர் கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சங்கராபுரம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். இவர் வயலுக்குச் சென்று திரும்பும்போது அதே ஊரைச் சேர்ந்த சாதி இந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்கி, அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர்.
சங்கராபுரம் / திருக்கோவிலூர்
·        Cr.No:338/2020,
Date 11.05.2020
6 Arrested

·        Cr.No:339/2020 – counter Case
·        4 Arrested
·        எதிர் வழக்கு ரத்து செய்யப்படவேண்டும்.
·        பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்.
9.        
விழுப்புரம்
பழங்குடியினர் வீடு இடிப்பு
22.05.2020
விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் தெளிமேடு கிராமத்தில், பழங்குடி இருளர் ஆறுமுகம் சொந்தமான குடிசை வீடு உள்ளது. கடந்த சில மாதங்களாக கொத்தமங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.
தெள்ளிமேடு முன்னாள் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜனார்த்தனன் கவுண்டர் அவர்கள் ஜேசிபி மூலம் மேற்படி இருளர் ஆறுமுகத்தின் குடிசை வீட்டை இடித்து தரை மட்டம் ஆக்கியுள்ளார்.  

காணை
விழுப்புரம்
·        Cr.No:371/2020 U/s: 448, 427 IPC,
r/w 3(2) (va) SC/ST Act
·        வீட்டை இடித்த ஜனார்த்தனன் கைது செய்யப்படவேண்டும்.
·        பாதிக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுக்கப்படவேண்டும்.
·        SC/ST Act கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும்.
10.     
அரியலூர் ஜெயங்கொண்டம்
பழங்குடி இருளர் சாதி சொல்லி இழிவு / தாக்குதல்
09.05.2020
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் பூ.செல்வகுமார், இருளர்களுக்கான அமைப்பு வைத்து செயல்பட்டு வருகின்றார். 09.05.2020 அன்று, தனது மகனுடன் தேவனூர் கூட்டுச் சாலையில் கடையில் நின்றபோது, அதே ஊரில் உள்ள சாதி இந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த செல்வய்யா என்பவர், இருவரையும் சாதி சொல்லி இழிவு செய்து தாக்கியுள்ளார்.
ஜெயங்கொண்டம்.
·        Cr.No:773/2020 – SC/ST Act
·        10.05.2020
·        விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும்.
·        உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
11.     
கடலூர்
வட்டம் : சிதம்பரம்
படுகொலை
25.04.2020
சிதம்பரம் அருகே உள்ள, கடவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(55). அம்மாபேட்டை என்ற ஊரில் உள்ள காம்பளக்ஸ் ஒன்றில் 10 வருடமாக காவலராக வேலை செய்துவருகிறார். 26ஆம் தேதி காலை மேற்படி நடராஜன், கான்சாகிப் வாய்க்கால் ஓரம் வெட்டி, கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். 
PS : அண்ணாமலைநகர்
DSP : சிதம்பரம்

Cr.No : 263/2020 u/s 302 IPC
Date 26.04.2020
சி.பி.சி.ஐ.டி புலன் விசாரனை நடத்தப்படவேண்டும்.
12.     
கடலூர்
சமூக வலை தளங்களில் இழிவு.
15.04.2020
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள கொரக்கவாடி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் சக்திவேல், அவரது தம்பி நடராஜன் ஆகிய இருவரும் தலித் மக்களை தரக் குறைவாக இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் டிக்டாக்கில் பேசி பரப்பினர். தலித் இளைஞர் பிராகஷ் என்பவருக்கு அனுப்பி மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடராஜன் கைது செய்யப்பட்டார்.  பஞ்சாயத்துத் தலைவர் சக்திவேல் கைது செய்யப்படவில்லை.
PS :
இராமநத்தம்
DSP : தொழுதூர்

Cr.No : 165/2020 u/s 294(b), 506(i) IPC r/w 3(1)(u), 3(1)(u), 3(1)(r) and 3(1)(s) SC/ST PoA Act 2015 dated : 16.04.2020

Nadarajan Arrested
அவதூறு பரப்பிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்படவேண்டும்.
13.     
கடலூர்
அம்பேத்கர் சிலை அவமதிப்பு
021.5.2020
கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேதகர் அவர்களின் சிலை அவமதிப்பு.
Cuddalore New town.
·        Cr.No: 360/2020.
u/s 153, 505 IPC.
·        ஒருவர் கைது. மனநிலை சரியில்லாதவர் என காப்பகத்தில் அடைப்பு.

14.     
திருவண்ணாமலை.
வட்டம் : தானிபாடி
தலித் மக்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி – மறுத்ததால் தாக்குதல்
24.04.2020
தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்பாச்சர்தண்டா கிராமத்தில் தலித் மக்கள் வைத்துள்ள நிலத்தை, அபகரிக்கும் நோக்கில், 24.04.2020 அன்று, சாதி இந்துக் கும்பல் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துவந்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆதிக்க சாதி கும்பல் தலித்துகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, வன்கொடுமை செய்துள்ளனர். இதில் 7 தலித்துகள் படுகாயம் அடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு,
திருவண்ணாமலை
·        Cr.No:790/2020 U/s: 147, 148,, 294(b),323,324,506(ii)-IPC, 3(1) (r), 3(2) (va), 3(2) (v) SC/ST Act, 3 of PPDT ACT - 24.04.2020.

·        12 பேர் கைது.

·        Cr.No:791/2020 U/s:147,148,,294(b),323,324,506(ii)-IPC, 3 of PPDT ACT -24.04.2020
·        எதிர்வழக்கு திரும்பப் பெறப்படவேண்டும்.
·        உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவலதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 4-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
15.     
திருவண்ணாமலை/  கீழ்பெண்ணாத்தூர்
இருசக்கர வாகனத்தில் சென்றதால் தாக்குதல்
25.03.2020
கீழ் பெண்ணாத்தூர் வட்டம் சூரியந்தங்கல் கிராமத்தில் உள்ள அருந்ததியர் இளைஞர் தனசேகரன் பொதுப்பாதையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக, சாதி வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு டூவீலர் அடித்து நொறுக்கப்பட்டு வீடுகளும் சூறையாடப்பட்டது.
வேட்டவலம்.
கீழ்பென்னாத்தூர்
·        Cr.No:78/2020 U/s:147,148,,294(b),323,324,427,506(ii)-IPC,r/w  3(1) (r), (s), 3(2) (va), 3(2) (v)–SC/ST Act – 26.03.2020
·        Cr.No:101/2020 U/s:147,148,,294(b),506(ii)-IPC,
·        4 Arrested
·        எதிர் வழக்கு ரத்து செய்யப்படவேண்டு.
·        சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு, உரிய இழப்பீடு வழங்கப்படவேண்டும்.
16.     
ஈரோடு
வட்டம் : அந்தியூர்.
தூய்மைப் பணியாளர் பணியின்போது இறப்பு
06.05.2020
ஈரோடு மாவட்டம் பவானி அம்மாபேட்டை அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில், அதே ஊரைச் சேர்ந்த  பாலன் என்கிற நாச்சிமுத்து, கடந்த 13 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.  பணியின்போது  மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். பாலனின் உடல் குப்பை வண்டியில் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை
·        இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
·        பேரூராட்சி செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
·        கொரோணா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணம் நிகழ்ந்ததால், உரிய இழப்பீடு வழங்கப்படவேண்டும்.
·        13 ஆண்டுகள் தினக்கூலியாக வேலை செய்த நிலையில் நிகழ்ந்த மரணம் என்பதால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும்.
17.     
சேலம்
படுகொலை
07.05.2020
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் நாலுக்கால் அருகில் உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் 07.05.2020 டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கியதில் இருசாதி இளைஞர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று வன்னியர் சமூகத்தினர், கும்பலாக தலித் குடியிருப்பிற்குள் புகுந்து கண்ணில் பட்ட வீடுகளை அடித்து நொருக்கி, தலித் மக்களை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி ஆயதங்களால் தாக்கியுள்ளனர். இந்த வன்கொடுமைத் தாக்குதலில் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த தலித் இளைஞர் விஷ்னுப்பிரியன் வயது 25 கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் ஆகியுள்ளது. இவரது தம்பி படுகாயம் அடைந்துள்ளார்.
ஓமலூர்
·        Cr.No : 886/2020 dated 09.05.2020 u/s 147, 148, 294(b), 323, 341, 307, 506(ii), 302 IPC r/w  3(1) (r), (s), 3(2) (va), SC/ST PoA Act.

·        6 arrest
·        அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட வேண்டும்.
·        சட்டப்படி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவேண்டும்.
·        பாதிப்புகளுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
18.     
சேலம்
ஊராட்சி மன்ற தலைவராக செயல்படத் தடை
22.04.2020
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் T.கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பெண் அம்சவள்ளி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கியில் (PACB) உறுப்பினராக அருந்ததியர் இளைஞர் தனபால் ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மக்கள் பிரதிநிதிகளான இருவரையும் சாதி இந்துக்கள் தடுத்துவருகின்றனர்.
தாரமங்கலம்
·        Cr.No ; 449/2020 u/s 234, 294(b), 141, 341, 323, 506(i) IPC r/w  3(1) (r), (s), 3(2) (va), SC/ST PoA Act.
·        இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
·        குற்றமிழைத்தோர் கைது செய்யப்படவேண்டும்.
·        சுதந்திரமாக செயல்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்யவேண்டும்.
·        உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
19.     
நாமக்கல்
பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்ததால் தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பிலிப்பாகுட்டை சமத்துவபுரத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த அருந்ததியர் பெண் அனிதாவை சாதிவெறிக் கும்பல் செருப்பால் அடித்தத சம்பவம்.
ஆயிப்பேட்டை
·        Cr.No ; 127/2020 u/s  294(b), 323, 355 IPC r/w  3(1) (r), (s), 3(2) (va), SC/ST PoA Act.
·        இருவர் கைது.
·        SC/ST PoA சட்டம் பிரிவு 3(1) (x), 3(1)(y) ஆகிய பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும்.
·        பொது வளங்களை பயன்படுத்தும் உரிமை அளிக்கப்படவேண்டும்.
20.     
கோயம்புத்தூர்
ஊராட்சிமன்றத் தலைவர் வன்கொடுமை – குடிநீர் இணைப்பு துண்டிப்பு
26.04.2020
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பதுவம்பள்ளி கிராமத்தில் வாழும் சரசம்மாள் என்பவர் வீட்டருகே, எதிர் வீட்டின் சாக்கடை தண்ணீர் வந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்துமாறு எதிர்வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.  இருவருமே அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  26-04-2020 அன்று ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியைச்சேரந்த  சரவணன் என்பவர், எதிர்வீட்டில் உள்ளவர்களுக்கு ஆதரவாக வந்து, மேற்படி சரசம்மாள் மற்றும் மகன் செல்வராஜ் சாதிசொல்லி இழிவுபடுத்தித் திட்டியுள்ளார். இதுபோன்று சாதி சொல்லி பேசாதீர்கள் என கூறியபிறகும் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வீட்டிலிருந்த குடிநீர் இணைப்பையும் துண்டித்துள்ளார். இதுகுறித்து, சரசம்மாள் 27-04-2020 அன்று கருமத்தம்பட்டி காவல்நிலையம் சென்று எழுத்து மூலமாக புகார் கொடுத்துள்ளனர்,
கருமத்தம்பட்டி
Cr.No ; 912/2020 u/s  294(b), 506(1) IPC r/w  3(1) (r), (s), , SC/ST PoA Act
·        குற்றமிழைத்தவர் கைது செய்யப்படவேண்டும்.
·        பொதுச் சொத்துபயன்பாட்டை தடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும்.
·        SC/ST PoA சட்டம் பிரிவு 3(1) (x), 3(1)(y), 3(1)(z) ஆகிய பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும்
·        பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.
21.     
திண்டுக்கல்
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் தாக்குதல்
27.04.2020
நிலக்கோட்டை அருகிலுள்ள கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் தமிழ் செல்வனும், ஆதிக்க சாதியை சேர்ந்த கவிதா என்கிற பெண்ணும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். கவிதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதினால் தம்பதியினர் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 16.04.2020 அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை எடுத்து கொண்டு 22.04.2020 அன்று கோட்டைபட்டி கிராமத்திற்கு வந்து உள்ளனர். இதனை தெரிந்து கொண்ட கவிதாவின் சாதிக்காரர்கள் 50 பேர் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு 27.04.2020 அன்று தலித் குடியிருப்புக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 தலித்துகள் பாதிக்கப்பட்டனர்.



22.     
திருப்பூர் மாவட்டம்
தலித் ஊராட்சி பெண் தலைவர் இழிவு – தாக்குதல் முயற்சி. 
04.05.20
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், கவுண்டச்சிப் புதூர் ஊராட்சித்  தலைவராக சுயேட்சையாகப் போட்டியிட்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த திருமதி        ஆர். செல்வி வெற்றிபெற்றுள்ளார். கடந்த 04.5.2020 ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத்தலைவருடன், ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குச் சீருடை மற்றும் சத்து மாத்திரைகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 ஆவது வார்டு றுப்பினர் எஸ். குப்புசாமி, ஊராட்சி தலைவரான பெண்ணைக் குறித்தும், சாதியைக் குறித்தும் மிக இழிவாகப் பேசி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடி தாக்கவும் முயன்றுள்ளார். அருகில் இருந்த துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் தடுத்து, ஊராட்சித் தலைவரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு ஊராட்சித் தலைவர் செல்வி, தாராபுரம் காவல்நிலையத்தில் குப்புசாமி மீது புகார் அளித்துள்ளார்.
பல முயற்சிகளுக்குப் பின்பு, 07.05.2020 அன்று வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், குற்றவாளி இன்றுவரை கைது செய்யப்படவில்லை.
தாராபுரம்
Cr.No : 1249/2020     Date : 07.05.2020 U/s 294(b), 506(ii), IPC r/w 3(1)(r), 3(1)(s) SC/ST PoA Act
·         
23.     
திருப்பூர்
மாட்டுக்கறி உணவு சமைத்ததால் இழிவு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சொரியங்கிணத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்களின் வீடுகளுச் சென்ற, வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் சசிகலா, சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் மாட்டுக்கறி சமைத்திருப்பதாகக் கூறி, சமைத்து வைத்திருந்த உணவுப் பொருட்களை எல்லாம் எடுத்துவந்து தெருவில் கொட்டி இழிவு படுத்தியுள்ளார்.
காங்கயம்.
இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.

நகராட்சி ஆணையர் பணி நீக்கம் செய்யப்படவேண்டும்.
24.     
திருப்பூர்
தாக்குதல். கொலை மிரட்டல். சமூகப் புறக்கணிப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி சக்திவேல் கவுண்டர் (ம) முன்னாள் அமைச்சர் துரைச்சாமி மகன் சுதர்சன் ஆகியோர் பாப்பம்பாளையம் அருந்ததியர் மக்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, ஊர்க்கட்டுப்பாடு விதித்த சம்பவம்.








ஊரடங்கு காலத்தில் பிற மாவட்டங்களில் தலித் மக்கள் மீது நிகழ்ந்துள்ள சாதிய வன்கொடுமைகள்



வ.எ
மாவட்டம்
வன்கொடுமை
நாள்
வன்கொடுமை
நிகழ்வு
காவல்
நிலையம் / DSP
1.        
விழுப்புரம்
பொதுக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்றதால் தாக்குதல்
26.03.2020
திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அரும்பட்டு கிராமத்தில் உள்ள  பொதுக் குளத்தில், தலித் இளைஞர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்த இளைஞர்கள் வன்னியர் சமூகத்தினரால் தாக்கப்பட்டனர்.
PS : திருவெண்ணெய்நல்லூர்.
DSP : திருக்கோவிலூர்
2.        
விழுப்புரம்
தாக்குதல்
07.05.2020
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் ஆதனுர் கிராமத்தில், டாஸ்மாக் திறந்த அன்று, சாதி இந்து இளைஞர்கள் நான்கு பேர் குடிபோதையில், தலித் குடியிருப்பு வழியாக வேகமாக இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தலித் இளைஞர் ஒருவர் ’மெதுவாகச் செல்லுங்கள்.. குழந்தை அடிபட்டிருக்குமே” என்று சொல்லியுள்ளார். அதற்காக சாதி இந்து இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து, தலித் இளைஞர்களைத் தாக்கியுள்ளனர். இதில் 4 தலித் இளைஞர்கள் கொடுங்காயம் அடைந்தனர். 
PS : காணை

DSP : விழுப்புரம்
3.        
திருவண்ணாமலை
ஆணவப் படுகொலை
29.03.2020
ஆரணி வட்டத்திலுள்ள மொரப்பதாங்கல் கிராமத்தில் சுதாகர் என்கிற தலித் இளைஞர் தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பரிமளா என்கிற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த, பரிமளாவின் தந்தை மூர்த்தியும் உறவினர் ஜெய்குமாரும் சுதாகரை அடித்து கொலை செய்துள்ளனர்..

4.        
திருவண்ணாமலை
சாதிய வன்கொடுமை – சாதி சொல்லி - பொது இடத்தில் இழிவு – அம்பேத்கர் படம் இழிவு
31.03.2020
திருவண்ணாமலை மாவட்டம் தோக்கவாடி கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் கவுதம பிரியன், தன் சகோதரியின் தோழியான ஆதிக்க சாதி பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது,  அதே ஊரைச் சேர்ந்த காவலர் ஈஸ்வரன், கவுதம பிரியனை சாதி ரீதியாக இழிவாகபேசி, பொது மக்கள் முன்னிலையில் முட்டி போட வைத்து, கேபிள் டி.வி ஒயரால கடுமையாக அடித்து, அணிந்திருந்த அம்பேத்கர் படம்போட்ட டி.சட்டையை கிழித்து, சித்ரவதை செய்தார்.  வன்கொடுமையில் ஈடுபட்ட காவலர் ஈஸ்வரன் மீது எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
செங்கம்
5.        
தூத்துக்குடி
படுகொலை
28.03.2020
தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் அருகேயுள்ள தோப்புரை சேர்ந்த தலித் இளைஞர் ராஜதுரை சாதி இந்துக்களால் வெட்டிப் படுகொலை.

6.        
தூத்துக்குடி
நிலப்பத்திரத்தை திருப்பிக் கேட்டதால் இருவர் படுகொலை
07.05.2020
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள உடையார்குளம், காந்திபுரத்தில் பலவேசம்(64) வசித்து வருகிறார். இவர் பள்ளர் சமூக்தைச் சேர்ந்தவர் ஆகும்.  பலவேசம், தன்னுடைய நிலப்பத்திரத்தைக் கொடுத்து, இந்து மறவர் சாதியை சேர்ந்த தங்கபாண்டி மகன் முத்துராஜ் (40) என்பவரிடம் வாங்கியிருந்த ரூ 40 ஆயிர பணத்தை,  வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால், முத்துராஜ் நிலப்பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து முத்துராஜின் அண்ணன் சண்முகசுந்தரம் என்பவரிடம் அவர்,  பலவேசத்தை ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பலவேசம் நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் தனது, சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் பலவேசத்தின் வீட்டிற்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது மருமகன் தங்கராஜ் (27) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.  இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
நாசரேத்
7.        
நாமக்கல்
தாக்குதல் – செருப்பால் அடித்து இழிவு
08.05.20
நாமக்கல் மாவட்டம், வகுராம்பட்டி கிராமத்திலுள்ள அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சசிகுமார் (30), சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்ட கல்லூரி (School of Excellence in Law) - யில் LLB (Hons.) சட்டம் இறுதி ஆண்டு படித்துவருறார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டத்தால், சொந்த ஊருக்கு வந்துள்ளார்.  08.05.2020 ம் தேதி நேற்று மாலை 6.45 மணியளவில்  அவரது நண்பர் சக்திவேல் என்பவருடன்  நடைபயிற்சி சென்றுள்ளார்.. அப்போது எதிரில் இரு சக்கர வாகனங்களில் வந்த கோபி என்கிற கோபிநாத், சதீஷ்குமார் உள்ளிட்ட  மூன்று பேர்  சேர்ந்து சசிக்குமாரையும், அவரது நண்பரையும் சாதி சொல்லி, இழிவு செய்து, தாக்கியுள்ளனர்.

8.        
திருநெல்வேலி
கட்டிவைத்து தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேட்டுள்ள வேப்பன்காடு கிராமத்தில் 3 தலித் இளைஞர்களை ஆதிக்கச் சாதியினர் பொது இடத்தில் கட்டி வைத்து அடித்துத் தாக்கினர்.

9.        
தென்காசி
பொதுப்பாதையில் செல்லத் தடை

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் அருந்ததியர் மக்களை பொதுப்பாதையில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கிய சம்பவம்.

10.     
கன்னியாகுமரி
படுகொலை

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அருகே எறுப்புக்காடு பகுதியில் அருந்ததியர் இளைஞர் வினோத் சாதி வெறியர்களால் படுகொலை.

11.     
தேனி
சமூக வலைதளத்தில் இழிவு

தேனி மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்த வசுமித்ரா என்கிற சாதி வெறியன் தனது முகநூல் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை முகநூல் இழிவாக பேசிய சம்பவம்.

12.     
சிவகங்கை
தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மாங்குளம் உராட்சியில் உள்ள மூங்கிலுரணி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுகத்தைச் சேர்ந்த கணவன் மனைவியான பாக்கியம், லட்சுமி மீது சாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்.

13.     
இராணிப்பேட்டை
தாக்குதல்

இராணிப்பேட்டையில் தலித் இளைஞர் மில்டன் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட சாதி வெறியர்கள்

14.     
தஞ்சாவூர்
தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு காவல்நிலைய எலகைக்குட்பட்ட கிளாமங்கலம் பறையர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்திய கள்ளர்கள்.

15.     
புதுக்கோட்டை
வேலைக்கு வர மறுத்ததால் தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேம்பக்குடி கிராமத்தில் தனது தோப்பிற்கு வேலைக்கு வராத காரணத்தினால் தலித் இளைஞர் ராஜேஷை காவல்துறை முன்பாக கட்டிவைத்து கத்தியால் குத்தி, அவரது தாய் ராஜகுமாரியை தாக்கிய சாதுவெறியன் நீலகண்டன்.

16.     
சென்னை
தூய்மைப் பணியாளர் – கொரோனா தொற்றில் மரணம்
10.05.2020
சென்னை ராயபுரத்தில்  58 வயது மதிக்கத்தக்க தூய்மைப் பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார்.