Saturday, December 26, 2020

பள்ளிப் பருவம் - இமயம்

நான் ஆறாம் வகுப்பில் சேர்வதற்குப் போனேன். நான் பள்ளியில் சேர்ந்த  அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் வேணுகோபால் "திசைகளின் பெயர்களைச் சொல்" என்று கேட்டார்.

என்னுடைய பெரியம்மா சொல்லி தந்திருந்ததுபோல "சனி மூலை, புள்ளியா மூலை, கொடிக்கா மூலை, பாரீச மூலை" என்று சொன்னேன்.

சனி மூலையில் கருக்கினால் பலமான மழை வரும். கொடிக்கா மூலையில் மின்னினால் நிச்சயம் மழை வரும் என்று அர்த்தம். எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன். அவர் தலையில் அடித்துக் கொண்டார்.

நான் சொன்னதுபோலத்தான் எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் இன்றும் சொல்லிக்கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முட்டாள்களா?

விசயம் ஒன்றுதான். மொழிதான் வேறு. மொழி தெரியவில்லை என்பதால் ஒருவன் முட்டாளாகிவிடுவானா? இப்படித்தான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை என்னைக் கடைசி பெஞ்சிலேயே உட்கார வைத்திருந்தார்கள் முட்டாளாகவே.

- "பள்ளிப்பருவம்" நூலில்  எழுத்தாளர் இமையம்.

Imayam Annamalai

(8 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)

 

 

No comments: