Monday, December 28, 2020

நெல்லிக்குப்பம் காவல் நிலைய சட்டவிரோதச் செயல்.

 #நெல்லிக்குப்பம்_காவல்_நிலைய #சட்டவிரோதச்_செயல்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட
பழங்குடி இளைஞரிடமிருந்து,
மனைவியைப் பிரிக்க முயற்சி.
மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர்
தலையிட்டுக் காப்பாற்றவேண்டும்..

அறிவியல் சலிப்பாகக் காரணம்..

அறிவியல் சலிப்பாக இருக்கிறது என்றால்,

நீங்கள் தவறான ஆசிரியரிடம் பயின்றுள்ளீர்கள் .

- ரிச்சர்ட் பெயின்மன்

(இயற்பியலில் நோபெல் பரிசு பெற்றவர்)

கஞ்சா, லாட்டரி, கள்ளசாராயம் உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதச் செயல்களும் காவல் துறையின் அனுமதியுடந்தான் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்தது.

லாட்டரி விற்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதில், இரு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரும், காவலர் பாலாவும் காவல் நிலையத்திலேயே சண்டையிட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த லாட்டரி விற்பனை வழக்கில் இவர்கள் இருவரையும் இணைத்தே விசாரிக்க வேண்டும்.
நாடுமுழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி உள்ளிட்ட அனைத்து வழக்கிலும் விற்பனையாளரை மட்டும் கைது செய்யாமல், தொடர்புடைய காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் குற்றவாளிகளாக சேர்த்து விசாரிக்கப்படவேண்டும்.

25.12.2020 முகநூல் பதிவு


மரபணு மாறிய கொரோனா..?

மரபணு மாற்றப்பட்ட பருத்தி / பி.டி கத்திரிக்காய்"

என சொல்வதுபோல் உள்ளது,

"மரபு மாறி வீரியத்துடன் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா" என்பதும்.


மீண்டும் ஒரு மொழிப்போர் - அறிஞர் தொ.ப.

தமிழ் மொழியைப் பாதுகாக்க,

மீண்டும் ஒரு
மொழிப் போர் தொடங்கவேண்டும்"
என அறிஞர் தொ.ப.
தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
செய்தி மடலில் அப்போது வெளியிட்டிருந்தோம்.
ஒரு முறையாவது நேரில் சந்தித்துப்
பேசவேண்டும் என நினைத்திருந்தேன்.
தற்போதைய தமிழ்ச் சூழலில் பேரிழப்பு.

24.12.20 முகநூல் பதிவு


ஜியோ நாடு ---

 ஜியோ நாடு --- 

Sen Balan

கொரொனா பிரச்சனை எல்லாம் முடிஞ்சு ஊருக்கு வரும் போது,

ஊர் எப்படி இருக்கும்ன்னு
ஒரு சின்ன கற்பனை:
ஜியோ ஏர்லைன்ஸ்ஸில் வந்து,
ஜியோ ஏர்போர்ட்டில் இறங்கி,
ஜியோ போனில் இருந்து,
ஜியோ கேப் புக் பண்ணி,
ஜியோ டோல்கேட்டில்,
ஜியோ மணி மூலமா பணம் கட்டி,
ஜியோ பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு,
ஜியோ இரயில்வே ஸ்டேசனில், ஜியோ எக்ஸ்பிரஸில் ஏறி,
ஜியோ அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து, ஜியோ சூப்பர்மார்க்கெட்டில் காய்கறி வாங்கி,
ஜியோ டிரெண்ட்ஸில் துணி எடுத்து, ஜியோ மார்ட்டில் பொருள் வாங்கி, ஜியோ அரிசியில் சோறாக்கி,
ஜியோ டிவியில்
ஜியோ பிரதமர் சுடுற
ஜியோ வடையை கேட்கப்போறேன்

24.12.20 முகநூல் பதிவு


மொழி கற்றுக்கொள்வது

 மொழி கற்றுக்கொள்வது

என். சொக்கன்

--------------------------------------------

ஆங்கிலத்தில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 1000 சொற்களின் பட்டியல் இணையத்தில் ஆங்காங்கே கிடைக்கிறது. இந்த ஆயிரம் சொற்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பதில் எனக்குச் சில கேள்விகள் இருந்தாலும், இதுபோல் பொதுவான சொற்களைத் தொகுத்துப் படித்துத் தெரிந்துகொள்வதால் அந்த மொழியைப் புதிதாகக் கற்கிறவர்களுக்கு நல்ல நன்மை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எடுத்துக்காட்டாக, நான் பள்ளிக்கூடத்தில் படித்த ஆங்கிலம் எனக்கு மிகக் குறைவான மொழியறிவையே அளித்தது. மிஞ்சிப்போனால் நூறு, நூற்றைம்பது சொற்களை அரைகுறையாக உள்வாங்கிக்கொண்டிருப்பேன். ஒருவேளை, நான் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றிருந்தால், அல்லது, சுற்றி ஆங்கிலம் பேசுகிறவர்கள் மிகுந்த சூழலில் வளர்ந்திருந்தால் இது ஆயிரம் சொற்களாக விரிந்திருக்கக்கூடும்.
ஏனெனில், ஒரு மொழியை மொழியாகப் படிப்பதைவிட, கணக்கு, அறிவியல், வரலாறு போன்ற பாடங்களில், அன்றாடப் பேச்சில் அது எப்படிப் பயன்படுகிறது என்பதுடன் சேர்த்துப் படிக்கும்போதுதான் சொற்களும் சரி, இலக்கண விதிமுறைகளும் சரி, மனத்தில் நன்கு பதிகின்றன. அந்த வாய்ப்பு எனக்குப் பள்ளியில் கிடைக்கவே இல்லை.
கல்லூரியில் ஆங்கில வழியில்தான் படித்தேன். ஆனால், பள்ளிக் கல்வியில் சரியான ஆங்கில அடித்தளம் இல்லாததால் மிகவும் தடுமாறினேன். நல்ல ஆங்கில மொழியறிவு இருந்த பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதைத் தமிழில் உள்வாங்கிக்கொண்டேன், அதன்பிறகு எல்லாம் சரியாகப் புரிந்தது. ஆனால், பாடங்கள்தான் மனத்தில் ஏறின, (ஆங்கில) மொழி ஏறவில்லை.
நல்லவேளையாக, சிட்னி ஷெல்டனும் ஹெரால்ட் ராபின்ஸும் எனக்குக் கை கொடுத்தார்கள். பின்னர் ஜான் கிரிஷம் இவர்களுடன் சேர்ந்துகொண்டார். ஜெஃப்ரே ஆர்ச்சரை மிகப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன். உண்மையில் இவர்கள்தான் என்னுடைய ஆங்கில ஆசிரியர்கள்.
இதேபோல், செய்தித்தாள் படித்து ஆங்கிலம் கற்றவர்கள் பலரை நான் அறிவேன். வேலையில் சேர்ந்தபிறகு மற்றவர்களைக் கவனித்துப் பேச்சு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு நன்கு பேசத் தொடங்கியவர்களை அறிவேன். எல்லாம் ஒரே இடத்துக்குதான் வருகின்றன: மொழிக் கற்றலுக்கு, அந்த மொழியைப் படிப்படியாகக் கற்றுத்தரும் புத்தகங்களைவிட, பிறரை/பொதுவான நூல்களைக் கவனித்துப் 'போலச்செய்தல்' (Mimicing) நன்கு உதவும். அதனால்தான், எழுத வருகிறவர்களை நிறையப் படிக்கச்சொல்கிறார்கள், பேச முனைகிறவர்களை நிறையக் கேட்கச்சொல்கிறார்கள்.
த. நா. குமாரசாமி எப்படி வங்காள மொழியைக் கற்றுக்கொண்டார் என்பதுபற்றி நண்பர் ஶ்ரீனிவாச கோபாலன் ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதில், த. நா. குமாரசாமி பயன்படுத்திய ஓர் உத்தியைப் படித்து வியந்துபோனேன்.
அடிப்படையிலேயே த. நா. குமாரசாமிக்கு வங்காள மொழி கற்கும் ஆவல் இருக்கிறது. ஆகவே, தானே முயன்று பல சொற்களை, அவற்றின் பொருளைக் கற்றுக்கொள்கிறார்.
அந்த நேரத்தில், பக்கிம் சந்திரருடைய புகழ் பெற்ற ‘ஆனந்த மடம்’ நாவலை ஒருவர் தமிழாக்கம் செய்கிறார். அதைத் த. நா. குமாரசாமி சிரமப்பட்டுத் தேடிப் படிக்கிறார்.
அடுத்து, கொல்கத்தாவிலிருந்து ‘ஆனந்த மடம்’ நாவலின் மூலப் பதிப்பை (வங்க மொழிப் பதிப்பை) வரவழைக்கிறார், ஒருபக்கம் தமிழ் மொழிபெயர்ப்பு, இன்னொருபக்கம் வங்க மொழிப் புத்தகம் என்று வைத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக இரு மொழிகளிலும் படித்துப் புரிந்துகொள்கிறார். வங்க மொழி அமைப்பு அவருக்குக் கொஞ்சங்கொஞ்சமாகப் புரியத்தொடங்குகிறது. அம்மொழியின்மீது மேலும் ஆர்வம் பெருகுகிறது, தொடர்ந்து படிக்கிறார், வங்க மொழியிலிருந்து பல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளராக உயர்கிறார். எப்பேர்ப்பட்ட திறமை, எப்பேர்ப்பட்ட உழைப்பு

மனித உரிமைக் காப்பாளர் மீது தாக்குதல்

கடலூர் மனித உரிமை செயல்பாட்டாளர் இரா.பாபு

மீதான தாக்குதலைக் கண்டித்து,

22.12.2020 காலை 10.00 மணிக்கு கடலூரில்

அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின்

கண்டன ஆர்ப்பாட்டம்.

பங்கேற்று ஆதரவளிக்க அழைக்கின்றோம்.






அறிவியல் அதிகக் கடினமானதா?

’’அறிவியல் அதிகக் கடினமானது, புரிந்து கொள்ளப்பட முடியாத அளவுக்குச் சிக்கலானது என்று பெரும்பாலான மக்கள் நம்புவதுதான் இங்கு பிரச்சனை.

ஆனால் அவர்களுடைய எண்ணம் தவறு என்பது என்னுடைய கருத்து. பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் அடிப்படை விதிகளை ஆய்வு செய்ய வேண்டுமென்றால், அதற்கு ஏராளமான நேரம் அர்ப்பணிக்கப்பட வேண்டும். பெரும்பாலானோரிடம் பற்றாக்குறையாக இருப்பது நேரம்தான்"


'’ஒரு தந்தை என்ற முறையில், கேள்விகள் கேட்பதன் முக்கியத்துவத்தை நான் என் குழந்தைகளின் மனத்தில் பதிக்க எப்போதும் முயற்சித்தேன். ஏராளமான சின்னஞ் சிறு பிரபஞ்சங்கள் இருந்தனவா என்று டிமோத்தி ஒருமுறை என்னிடம் கேட்டான். ஆனால் அச்சமயத்தில், அக்கேள்வி அற்பமானதோ என்ற கவலை அவனுள் எழுந்தது. ஆனால், ஒரு யோசனையோ அல்லது கருதுகோளோ எவ்வளவு கிறுக்குத்தனமானதாகத் தோன்றினாலும், அதை அங்கீகரிக்க ஒருபோதும் பயப்படக்கூடாது என்று நான் அவனிடம் கூறினேன்"



- ஸ்டீவ் ஹாக்கிங்.

18.12.20 முகநூல் பதிவு


ஸ்டீபன் ஹாக்கிங்கின் மகள்

 "நான் ஒரு சாதாரணமான இளமைப் பருவத்தைக் கொண்டிருந்தேன் என்று கூற முடியாது. சவால் மிகுந்த கேள்விகளைக் கொத்துக் கொத்தாகப் பெரியவர்களை நோக்கி அள்ளி வீசுவது சாதாரணமானது என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், எங்கள் வீட்டில் அப்படித்தான் நடக்கும். ஒருமுறை, கடவுளின் இருத்தலுக்கு ஒரு நிரூபணத்தைக் கொடுக்கும்படி நான் ஒரு பாதிரியாரிடம் கேட்டு அவரைப் பாடாய்ப்படுத்தி, அவர் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு நான் அவரைக் கொண்டு வந்திருந்ததாக என் பெற்றோர் என்னிடம் கூறினர்"

- லூசி ஹாக்கிங்
(ஸ்டீபன் ஹாக்கிங்கின் மகள்)

18.12.20 முகநூல் பதிவு



தென்னிந்தியர்களிடம் பேசும்போது

 ///// தென்னிந்தியர்களிடம் பேசும்போது ஒரே ஒரு தமிழ்/கன்னட/தெலுங்கு/மலையாளச் சொல்லைக்கூடக் கேட்டதில்லை, முழுக் கவனத்துடன் ஆங்கிலத்தில்மட்டும்தான் பேசுவார்கள்////

என்னுடைய வேலையின் ஒரு பகுதியாக, மாதந்தோறும் பலரை நேர்காணல் (Interview) செய்கிறேன். அதில் கவனித்த ஒரு விநோதமான புள்ளிவிவரம்: ஒரு மணி நேர இன்டர்வ்யூவில் ஒரே ஒருமுறையேனும் 'டீக் ஹைன்?' (சரிதானே?) அல்லது 'அச்சா!' (நல்லது) அல்லது 'மத்லப்' (அதாவது) என்ற சொற்களைப் பயன்படுத்தாத ஒரு வட இந்தியரைக்கூட நான் பார்த்ததில்லை. பிரமாதமாக ஆங்கிலம் பேசுகிறவர்களிடம்கூடத் தங்களையும் அறியாமல் இந்தச் சொற்கள் ஒரு கணத்தில் வந்து விழுந்தே தீரும் என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.
மாறாக, தென்னிந்தியர்களிடம் பேசும்போது ஒரே ஒரு தமிழ்/கன்னட/தெலுங்கு/மலையாளச் சொல்லைக்கூடக் கேட்டதில்லை, முழுக் கவனத்துடன் ஆங்கிலத்தில்மட்டும்தான் பேசுவார்கள்.
பின்குறிப்பு: இதைக் குறை/நிறையாகச் சொல்லவில்லை; தாய்மொழியில் மனம் ஊன்றுதல் நல்ல விஷயம்தான்; ஒரு கவனிப்பாகமட்டுமே இதைப் பதிவு செய்கிறேன்.

18.12.2020 முகநூல் பதிவு

தொடர்ந்து சொல்லிவருகிறோம்...

தொடர்ந்து சொல்லிவருகிறோம்.

இங்கு

கல்வி இரண்டு வகையாக உள்ளது.
பணம் உள்ளோருக்கு
ஒரு கல்வி,
பணமிலாத ஏழைக்கு
ஒரு கல்வி.
அதனை கல்வி அமைச்சர்
இப்போது உறுதி படுத்துகிறார்.
கல்வி அமைச்சர் என்றால் அரசுதானே.
கல்வி பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதை அரசே உறுதிபடுத்துகின்றது.
"அரசு பள்ளிகள் & அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து.
தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம்.
பாடத்திட்டங்கள்
9ம் வகுப்பில் 50%
10 ,11 ,12ஆம் வகுப்புகளில் 35% குறைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் செங்கோட்டையன்."

(16.11.2020 முகநூல் பதிவு)

சென்னை குடிசைகள் அகற்றம் மக்கள் இடிந்தனர்.

சென்னை தீவுத்திடல் எதிரில், அன்னை சத்தியவானி முத்டு நகர், கூவம் கரையோரம் குடியிருந்த 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை இடித்து அங்கு வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை வெளியேற்றியுள்ளது அரசு. இதனால் அவர்கள் தன் வாழ்வாதாரங்களை இழந்து நடுங்கும் குளிரிலும், கொசுக்கடியிலும் இடிக்கப்பட்ட தங்களது இடங்களில் இரவெல்லாம் குழந்தைகளோடு தவித்து வந்த மக்களையும், அவர்களுக்கு ஆதரவாக போராடிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள், தலித் அமைப்புகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசி கள ஆய்வு செய்தோம்.

15.11.2020 முகநூல் பதிவு





அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அகரம் உதவி

அரசுப் பள்ளிகளில் 10, 11, 12 வகுப்பு பயிலும் 500 மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை திறன்பேசி வழங்கி வருகிறது.

விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்
60 பேருக்கு திறன்பேசி வழங்கும் நிகழ்வு நேற்று
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளியில் நடைபெற்றது.
பெரும்பாலான மாணவர்கள் பெற்றோரில் இருவரையும் இழந்தவர்களாலும்.
சில மாணவர்கள் பெற்றோர் இல்லாமல் தாத்தா, தாய்மாமன் போன்றோர் பாதுகாப்பில் உள்ளனர்.




அம்பேத்கர் நகரில் கலங்கி நிற்கும் இந்தத் தாயாரின் கண்ணீருக்கு யார் பதில் சொலவது?

அம்பேத்கர் நகரில் கலங்கி நிற்கும் இந்தத் தாயாரின் கண்ணீருக்கு யார் பதில் சொலவது?

சிதம்பரம் அருகே உள்ளது கவரப்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர், வடுகத்திருமேடு இரு தலித் கிராமங்களும் தண்ணீரால் சூழப்பட்டு தணித்தீவாக உள்ளது.
அனைத்து வீடுகளும் இடுப்பளவு தண்ணீர் ஏறியுள்ளது. அந்தத் தண்ணீரிலேயா குழந்தைகள், பெண்கள், முதியோர் என உள்ளனர்.
இன்றோடு 5-வது நாளாக அதிகாரிகள் உள்ளிட்ட யாராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தனது குழந்தைகள் இருவரையும் குடிசைவீட்டில் பரண் கட்டி உட்கார வைத்துள்ளோம் என்கிறார் இந்தத் தாயார்.
வருவாய்த் துறை அதிகாரிகளோ உணவு வழங்க வேண்டியது பஞ்சாயத்துத் தலைவர் எனகூறி ஒதுங்கிக் கொள்கின்றனர்.
சிதம்பரம் பகுதியில் சாதி ஆதிக்கம் செலுத்தும் வாண்டையார் குடும்பத்தினர்தான் பஞ்சாயத்துத் தலைவர். யார் எப்படி போனால் நமக்கென்ன என அவர்களது மாளிகையில் பதுங்கிக்கொண்டனர்.
எப்போதும் போல் தலித் மக்கள் புறக்கணிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
நிவாரணம் வேண்டாம், முடிந்தால் வீடு கிடைக்க உதவி செய்யுங்கள் என்கிறார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 100 வீடுகள் இப்பஞ்சாயத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. 100 வீடுகளையும் சட்டத்திற்குப் புறம்பாக ஒப்பந்தம் எடுத்த வாண்டையார் குழு, வீடுகளை ஒழுங்காக / தரமாக கட்டவில்லை என்பதால் அதிகாரிகள் வீடுகட்ட அனுமதிக்கவில்லை.
வாண்டையார் குழுவினர் ஒழுங்காக அப்போது வீடுகளைக் கட்டிக்கொடுத்திருந்தால், இப்போது தண்ணீரில் மிதக்கும் அவலம் ஏற்பட்டிருக்காது.
தண்ணீரில் தவிக்கும் அம்பேத்கர் நகர் & வடுகத்திருமேடு தலித் குடும்பங்களை உடனடியாக தற்காலில தங்குமுகாமில் தங்க வைக்க வேண்டும்.
IFAD நிறுவனத்தின் சமுதாயக் கூடம், அரசுப் பள்ளி போன்றவை பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் மக்களுக்கு தற்காலிக முகாம் உருவாக்கவேண்டும்.

06.11.2020 முகநூல் பதிவு