Monday, May 4, 2020

’’பட்டினியால செத்தா போயிட்டீங்க” என பழங்குடியினர மிரட்டும் கிராம நிர்வாக அலுவலர்

நிவாரணம் கேட்ட பழங்குடி இருளர்களை மிரட்டும் கிராம நிர்வாக அலுவலர்..
-------------------------------------------------------------------------------------------------------------------------
கடலூர் அருகே உள்ள
கீழ்பாதி கிராமத்தில்
25 இருளர் குடும்பங்கள்,
70 பேர் உள்ளனர்.
18 குடும்பத்திற்கு மட்டுமே குடும்ப அட்டை இருந்ததால், அவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் பணமும், 15 கிலோ அரிசியும் அரசு வழங்கியுள்ளது.
1 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் 22 மாணவர்கள் உள்ளனர்.
வேலையும் வருமானமும் இல்லாமல் தவிக்கும் இவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவிடுமாறு
Sasy-tn Tindivanam Tamilnadu
SASY ஒருங்கிணைப்பாளர்
நண்பர் பாபு Babu Raja, கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார். இதுகுறித்து தந்தி தொலைக்காட்சி செய்தியும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை கீழ்பாதி இருளர் குடியிருப்பிருக்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர், "கலெக்டருக்கு புகார் சொல்ற அளவுக்கு உங்களுக்கு திமிரா ஆயிடுச்சா.. இப்பா என்னா பட்டினியால செத்தா போயிட்டீங்க" என்று இழிவுபடுத்திப் பேசி மிரட்டியுள்ளார்.
மேலும், பசியால் வாடும் பழங்குடி மக்களின் வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியையும் அவரது செல்பேசியில் படம்பிடித்துச் சென்றுள்ளார் அந்த கிராம நிர்வாக அலுவலர்.
வீட்டில் அரிசி வைத்துக்கொண்டே நிவாரணம் கேட்கின்றனர் என்று அதிகாரிகளிடம் காட்டுவதற்கு படம் பிடித்துள்ளார்.
இந்த நெருக்கடி சூழலில், இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டு, பழங்குடி மக்களை மிரட்டி இழிவுபடுத்திய
கீழ்பாதி-புதுப்பேட்டை கிராம நிராவக அலுவலர் மீது, கடலூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழங்குடியினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும்..

No comments: