Saturday, May 16, 2020

நல்லாப்பாளையம் மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் உதவி

நல்லாப்பாளையம் இருளர்கள் உள்ளிட்ட
80 குடும்பங்களுக்கு
நிவாரண உதவி வழங்கிய
காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் அவர்களுக்கு. நன்றி... நன்றி...
------------------------------------------------------------------------
                                                     நாள்:15-05-2020

மேற்படி கிராமத்தில் பழங்குடி இருளர் மா.அய்யனார் இறந்ததை அடுத்து அவரது மனைவி தனம், தாயார் முனியம்மாள் இருவரும் கொரானா தொற்று காரணமாக முண்டியம்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தனிமையில் விடப்பட்ட அய்யனார் மகனான 10 வயது சிறுவன் ஜீவாவிற்கு ஏற்கனவே
எஸ்.பி அவர்கள் நேரில் சந்தித்து ₹.5000/- அளித்து ஆறுதல் கூறியுள்ளார்கள். 

மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு அண்ணாதுரை அவர்கள் வட்டாட்சியர் மூலம் ₹.10,000/-
வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ₹.5000/- திமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் க.பொன்முடி அவர்கள் ₹.10,000/- வழங்கினர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அவர்கள் ஆசிரியர்கள் மூலம் ₹.9,500/- தொகையுடன் காய்கறிகள் மற்றும் 2 சிப்பம் அரிசி ஆகியவற்றை சிறுவன் ஜீவாவிற்கு வழங்கியுளனர்.

எல்லாவற்றுக்கும்  மேலாக சிறுவன் ஜீவாவின் அனாதரவான நிலையினை வெளி உலகுக்கு முதலில் வெளிப்படுத்திய புதிய தலைமுறை தொலைக் காட்சி செய்தியாளர்  விழுப்புரம் Jothi Narasimman ஜோதியைத் தொடர்பு கொண்ட மேற்கு வங்கத்தின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளரும் தமிழ்வழிக் கல்வி ஆதரவாளருமான கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்,  அவர்கள், தமிழகத்தில் தனக்கான நட்பு வட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சிறுவன் ஜீவா மற்றும் பாதிக்கப்பட்டுள்ள இருளர்களுக்கு நியாயம் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதுடன்,  சிறுவன் ஜீவா குடும்பத்திற்கு பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை மூலம் ₹.10,000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள்.

இதுபோன்று அருட்தந்தை ஏசுபாதம் அவர்கள் அவரது நண்பர் நாராயணன்  ப.இ.கல்வி அறக்கட்டளை மூலம்
 ₹.10,000/- வழங்கியள்ளார்கள்.

இறுதியாக 14-05-2020 வியாழனன்று மாலை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நல்லாப்பாளையத்திற்கு நேரில் சென்று கொரானாவுக்காக தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளான இருளர் குடியிருப்பு, தேன்கல்மேடுவில் வசிக்கும் 52 இருளர் குடும்பங்கள் உள்ளிட்டு மொத்தம் 80 குடும்பங்களுக்கு
தலா 10 கி.கி அரிசி மற்றும்
5 கி.கி காய்கறிகளை,
சிறுவன் ஜீவாவிடம் தொடங்கி வழங்கியுள்ளார்.
சிறுவன் ஜீவாவிடம்,"உன் தாய் மற்றும் பாட்டி இன்னும் நான்கு நாட்களில் வீடு வந்துவிடுவார்" என ஆறுதல் கூறியுள்ளார்.

இக்கட்டான காலகட்டத்தில் பழங்குடி மக்ககளுக்கு ஆதரவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
     
                            இவண்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை, அனந்தபுரம்.
புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு, விழுப்புரம்.
கவசம் & கிளாரட் சபை, மங்களபுரம்.
பழங்குடி இருளர் மேம்பாட்டு அமைப்பு, செஞ்சி.
பேச:9047222970, 9442622970, 9894207407

No comments: