Saturday, December 26, 2020

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு பிறந்த நாள்

 

பேராசிரியர் .மார்க்ஸ் அவர்கள் சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து தினந்தோறும் எழுதி வருகின்றார். அவரது எழுத்துக்கள் அனைத்தும் அதிகாரத்திற்கு எதிராகவும், பாதிக்கப்படும் மக்களின் குரலாகவும் ஒலிப்பதை அனைவரும் அறிவோம். ஜனநாயகத்திற்கு எதிரான அதிகாரத்தின் குரலை நாம் எப்படி புரிந்துகொள்வது என்பதையும், அதற்கெதிராக நாம் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, செயல்பட்டு வருபவர்.

இன்று பிறந்த நாள் காணும் பேராசிரியர் .மார்க்ஸ் அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 தாய்த்தமிழ்ப் பள்ளி புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட .மார்க்ஸ்  அவர்களிடம் கடனாக 10,000/- வாங்கியிருந்த பேராசிரியர் கல்யாணி @ பிரபா கல்விமணி கட்டட வேலை முடிந்து நன்கொடை கிடைத்ததும், பேராசிரியர் .மார்கஸ் அவர்களிடம் அப்பணத்தை திருப்பி அளித்தார்.  இது நடந்தது 2007 ஆம் ஆண்டு. அப்போதுதான் பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்குவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்றன.

இதனையறிந்த .மார்க்ஸ்  Marx Anthonisamy அவர்கள், அந்தப் பணத்தைப் பெறாமல், பள்ளிக்கு நன்கொடையாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு கிடைத்த முதல் நன்கொடை இது.

உலகம் முழுவதுமிருந்து நண்பர்கள் அளிக்கும் உதவிகளினால் கடந்த  13 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய உணவு  தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்  பள்ளியில் வழங்கப்படுகிறது.  

 இதற்கான முதல் அரிசி / முதல் உணவை வழங்கியவர் பேராசிரியர் .மார்க்ஸ் என்பதில் பெருமைகொண்டு மகிழ்கின்றோம்.  இன்றைய பிறந்த நாளில்  ஐயா .மார்க்ஸ் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்.  தாய்ய்தமிழ்ப் பள்ளி மற்றும்  பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



 

No comments: