நமது கல்விமுறை...
--------------------------------
...மிதமிஞ்சிய போட்டியினால் பெரும் அளவுக்கு உழைப்பு வீணாவதுடன், மனிதர்களிடையில்
சமூக உணர்ச்சி குன்றி விடுகிறது.
முதலாளித்துவத்தின் மிகக்கொடிய விளைவு இப்போது மனிதர்களின் இயலாமையை அதிகரிப்பதுதான்
என்று நான் நினைக்கின்றேன். நம் கல்வி முறை முழுவதையும் இக்கொடுமை பாதித்திருக்கிறது.
போட்டி மனப்பான்மை இருந்தாலொழிய மனிதன் பிழைக்க முடியாது என்ற மனப்பான்மை மாணவர்களுக்கு
ஏற்பட்டிருக்கிறது. சொத்து சேர்ப்பதில் வெற்றி பெற்றாலொழிய அவனுடைய எதிர்கால வாழ்வு
சுகமாக இருக்காது என்ற கருத்து மாணவர் உள்ளத்திலின்று புகுந்திருக்கிறது.
இக்கொடுமைகளை ஒழிப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமே
இல்லை. சோசலிசப் பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவதுதான் அந்த வழி. அதனுடன் இப்போதுள்ள
கல்வி முறையும் மாறவேண்டும். சமூக லட்சியங்களில் மாணவர்கள் ஈடுபடுவதற்கான முறையில்
அது மாற்றி அமைக்கப்படவேண்டும்.
ஒருவருக்கு இயல்பாகவே அமைந்த திறனை வளர்ப்பதுடன் சுயநலத்திற்காக அதிகாரத்தையும்
வெற்றியையும் தேடித்திரிவதற்குப் பதிலாக, ‘’மற்றவர்களுடைய நல்வாழ்வுக்குப் பாடுபடுவதில்
எனக்கும் பொறுப்பு உண்டு” என்ற உணர்ச்சியையும் ஒவ்வொருவரிடத்திலும் நமது கல்விமுறை
ஏற்படுத்தவேண்டும்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(நன்றி : ‘’ஜனநாயக சோசலிசம்”)
பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் 1985 நவம்பரில் எழுதிய “நமது கல்விப் பிரச்சனைகள்”
நூலில் இருந்து…
No comments:
Post a Comment