Saturday, December 26, 2020

தப்பு மல்லாட்ட..

 தப்பு மல்லாட்ட..

-------------------------------

வேகவைத்த வேர்கடலை   அரைகிலோ 50 ரூபாய்.  இன்று மாலை வாங்கி வந்து சாப்பிட்டோம். நினைவுகள் பின்னோக்கி ஓடியது. சிறுவயதில், கிராமத்தில் அளவுக்கதிமாக கிடைக்கும். நிறைய தூக்கிபோட்டும் அடித்துக் கொண்டும்\ விளையாடியுள்ளோம்.  கீழேயும் கொட்டியுள்ளோம்.

சாப்பிடும்போது, "என்னப்பா தண்ணியவே காணோம்" என்றான் அதியன். சில மல்லாட்டையில் உப்புபோட்டு வேகவைத்த தண்ணீர் சில சொட்டு இருக்கும். அது சில நேரம் நல்ல சுவை கொடுக்கும் அதைத்தான் கேட்டான்.

2.   உடனே எனக்கு தப்பு மல்லாட்ட பொறுக்கபோனது நினைவு வந்தது. நஞ்சை, புஞ்சை இரண்டிலும் வேர்கடலை பிடுங்கிய சில நாட்கள் கழித்து, மண்ணில் புதைந்துள்ள வேர்கடலையை எடுக்க  "தப்பு மல்லாட்ட" பொறுக்கப்போவோம்.

3.  புஞ்சையில் தப்பு மல்லாட்ட பொறுக்கும்போதே சாப்பிட முடியுமா முடியாதா என்பது தெரிந்துவிடும்.

4. நஞ்சையில் தப்பு மல்லாட்ட சேற்றுத் தண்ணீரில் மிதக்கும். பார்க்கும்போது சாப்பிடக்கூடியதா என்பது தெரியாது. நல்ல தண்ணீரில் கழுவிட்டு சாப்பிடும்போது, சில நாட்கள் தண்ணீரில் உரிய வித்தியாசமான சுவையுடன் (கொஞ்சம் புளித்தமாதிரி) சாப்பிட நன்றாக இருக்கும். சில லேசாக முளைத்து வேறு சுவையைத் தரும்.

5.     தண்ணீரில் மிதக்கும் தப்பு மல்லாட்டையில் சொத்து மல்லாட்டையும் இருக்கும் அவசரத்தில் தெரியாமல் அதை வாயில் போட்டு மென்று விட்டால் அவ்வளவுதான். அது ஒரு வகையான கெட்டுபோன புளிச்ச நாத்தமடிக்கும். வாய் கெட்டுபோகும். அடுத்து வேறு எதை சாப்பிட்டாலும் பல மணி நேரத்திற்கு வாய் சரியாகாது. கொடுமையாக இருக்கும். பயங்கரமா மூடு அவுட் ஆயிடும்.

6.  மகன் வேக வைத்த வேர்கடலையில் தண்ணீர் கேட்டதும், தப்பு மல்லாட்டையில் புளிச்ச தண்ணீர் நினைவு வந்தது. (12 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)



 

No comments: