இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைதான 10 பேர் ஜாமீனில் விடுதலை
கடலூர், ஜன. 28: இந்திய இறையண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக, கடலூரில் கைதான 10 பேர், வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை போரில் இறந்த தமிழர்களின் நினைவாகக் கடலூரில் கடந்த சனிக்கிழமை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ் மாணவர், இளைஞர் பேரவை என்ற அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதையொட்டி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் பேசியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக தமிழ் மாணவர், இளைஞர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாலகுரு, திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி, நகைமுகன், திருமாறன், கார்த்திகேயன், பாலாஜி உள்ளிட்ட 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களைக் கைது செய்ததைக் கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் உடல் நிலை மோசமான, பேராசிரியர் பிரபா கல்விமணி உள்ளிட்ட 3 பேர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, கடலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சகந்தி, 10 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளிவந்த அவர்களை, மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் புதுவை சுகுமாறன், கடலூர் ஆல்பேட்டை பாபு, திண்டிவனம் முருகப்பன், வழக்கறிஞர் பூபாலன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

First Published : 29 Jan 2011 09:50:21 AM IST dinamani
No comments:
Post a Comment