15 வருடங்களாகத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவரும் செல்வியிடம் பேசினோம்,
"கொரோனா பரவ ஆரம்பிச்சதிலிருந்து ஒரு நாள் கூட லீவ் எடுக்காம நான் வேலை
செஞ்சுட்டு இருக்கேன். நான் மட்டுமல்ல தூய்மைப் பணியாளர்கள் அனை வரும் அப்படித்தான்
வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. எங்களுக்கும் உசுரு பயம் இருக்கத்தான் செய்யுது. ஆனா,
நாங்க வேலைக்கு வரலைன்னா குப்பை சேர்ந்து கொரோனா மாதிரி வேற ஏதாவது புது வியாதி வந்துருச்சுன்னா
சமாளிக்க முடியுமா? அதனாலதான் உசுரு பயத்தையும் பொருட்படுத்தாம வேலைக்கு வந்து கிட்டிருக்கோம்.
ஊரடங்கால எல்லாரும்
வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தபோது கூட தெருக்களில் குப்பை சேராம இல்ல. வழக்கம்
போல தினமும் குப்பைகள் சேர்ந்து கிட்டுதான் இருந்தது. இப்பவும் சேர்ந்துகிட்டுதான்
இருக்கு நாங்களும்
சளைக்காமல் அள்ளிக்கிட்டுதான் இருக்ககோம். கவர்மெண்ட்ல இருந்து கிளவசும் மாஸ்க்கும்
கொடுக்குறாங்க. ஆனால் கிளவுசை போட்டா,
தொடப்பத்தைப் பிடித்து கூட்ட முடியாது. ரொம்ப சிரமமா இருக்கும் அந்த சிரமத்தோடுதான்
வேலை பார்க்கிறேன்"
விகடன் தீபாவளி மலரில்
15.11.2020 முகநூல் பதிவு.
No comments:
Post a Comment