ஜோ பைடனின் வெற்றியை , அதைவிட முக்கியமாக டொனால்டு ட்ரம்பின் தோல்வியை அமெரிக்கா மட்டுமல்ல , உலகமே ஏன் எதிர்நோக்கியிருந்தது என்பதற்கான விடையை சி.என்.என் அரசியல் விமர்சகர் வான் ஜோன்ஸ் அளிக்கிறார்.
ஆப்ரோ அமெரிக்கரான அவரால் இரண்டு நிமிடங்கள் சேர்ந்தார்போல் பேசமுடியவில்லை.
பேசும்போதே குரல் தழுதழுத்து தேய்ந்து, உடைகிறது. அழவும் செய்கிறார்,
"நான் மட்டுமல்ல, பலரும் விடுதலையடைந்ததைப் போல் உணர்கிறோம். இனி ஒரு முஸ்லிமோ
பக்கத்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்தவரோ, அமெரிக்க அதிபர் என்ன நினைப்பாரோ?
என்ன செய்வாரோ? என்று ஒவ்வொரு கணமும் அஞ்சிக்கொண்டிருக்கவேண்டிய
நிலை இருக்காது. ஒரே ஒரு ட்விட் மூலம் உங்களைப் சுற்றியிருப்பவர்களிடம் இனவெறியைக்
கிளப்பி உங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் அதிபர் இனி இங்கே இல்லை.அமெரிக்கா மாறப்போகிறது."
ஆனந்த விகடனில்
16.11.2020 முகநூல் பதிவு
No comments:
Post a Comment