Wednesday, September 11, 2024

பச்சையப்பன் அறக்கட்டளை விவகாரம் : உயர்கல்வித் துறை இணை இயக்குநர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு!! கைகட்டி வேடிக்கைப் பார்க்காது என நீதிமன்றம் எச்சரிக்கை!!

 10.09.2024

பச்சையப்பன் அறக்கட்டளை விவகாரம் :

உயர்கல்வித் துறை இணை இயக்குநர் மற்றும்

சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் மீது

நீதி மன்ற அவமதிப்பு வழக்கு!!

கைகட்டி வேடிக்கைப் பார்க்காது என நீதிமன்றம் எச்சரிக்ககை

ை!!

 

அன்புடையீர் வணக்கம்.

தங்களது பணிக் காலத்தில் நேர்மையாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட, சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு பார்த்தீபன் அவர்கள் நிர்வாகியாகவும், நெய்வேலி என்.எல்.சி கல்வித் துறை செயலாளராக இருந்த திரு சி.துரைக்கண்ணு அவர்கள் செயலாளராகவும் தற்போது பச்சையப்பன் அறக்கட்டளையில் உள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் உள்ளிட்ட 132 பணியிடங்களை நேர்மையான முறையில் நடத்துவதற்கான முயற்சிகளை நிர்வாகி மற்றும் செயலாளர் முன்னெடுத்து வருகின்றனர்.

நேர்மையான இந்தச் செயல்பாடுகளை விரும்பாத தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் உள்ள சில அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து, பல்வேறு இடையூறுகள் அளிக்கின்றனர். இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு, அமைதியாக வேடிக்கை பார்ப்பது சந்தேகங்களை உருவாக்குகின்றது. இதுகுறித்து விரிவாக முந்தைய (08.09.24) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். 


தள்ளிக்க வைக்கப்பட்ட நேர்காணல் : சென்னைப் பல்கலைக் கழக

பேராசிரியர்கள் 84 பேர் முறைகேடுகளுக்கு துணைபோகின்றார்களா?

விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

காலிப் பணியிடங்கள் விளம்பரம் வெளியிட்டதிலிருந்து, இதனை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட்ட இடையூறுகள் குறித்து நேரடியாக நீதிமன்றத்தின் பார்வைக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் எடுத்துச் சென்றுள்ளனர். நீதி மன்ற வழிகாட்டுதல்களுடன் ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொண்டு நேற்றும், இன்றும் 09, 10-09-2024 மேற்படி 132 பணியிடங்களுக்கும் நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது.

துணைவேந்தரால் நியமிக்கப்படும் பிரதிநிதி மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டுதல் படி பேராசிரியர்கள் அடங்கிய நேர்காணல் குழு கல்லூரி பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்தவேண்டும். அதனடிப்படையில் பங்கேற்கவேண்டிய சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து 84 பேராசிரியர்கள், தங்களுக்கு விருப்பமில்லை என்றும், 19 பேராசிரியர்கள் விருப்பம் தெரிவித்தும் சனிக்கிழமை (07.09.24) கடிதம் அளித்துள்ளனர். இதனால் 132 பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தமுடியாத நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

உயர் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும்

பல்கலைகழக பதிவாளர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

         நேர்காணலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு விருப்பமில்லை என 84 பேராசிரியர்கள் கடிதம் கொடுத்தது குறித்து, பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கினை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதி மன்ற  நீதிபதி ஆன்ந்த வெங்கடேஷ் அவர்கள்,

  • விதிகளுக்குப் புறம்பாக விருப்பமில்லை எனக் கடிதம் கொடுத்து, நேர்காணலை தடுத்து நிறுத்த முயற்சித்த சென்னை பல்கைலைக் கழகப் பேராசிரியர்கள் 84 மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அந்நடவடிக்கை இனி இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்றும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவர அறிக்கையினை, அடுத்த விசாரணை நாளான 25-ஆம் தேதிக்குள்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும், இதில் நல்லதொரு முடிவு எட்டப்படும்வரை இவ்வழக்கு தொடர்ந்து நடைபெறும்.

  • நேர்காணலில் பங்கேற்க முழு மனதுடன் ஒப்புதல் தெரிவிக்கும் பேராசிரியர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, புதிய நேர்காணல் குழு விபரத்தை 20-ஆம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

  • 27, 28, 30 ஆகிய நாட்களில் நேர்காணல் முழுமையாக நடைபெற உயர் கல்வித் துறையும், பல்கலைக் கழக்கமும் உரிய ஒத்துழைப்பினை அளிக்கவேண்டும்

 

என்று உயர் கல்வித் துறை இணை இயக்குநர், பல்கலைக் கழகப் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்திரவிட்டார்.

 

சூழ்ச்சிகள், இடையூறுளை உருவாக்கி, நேர்காணலை தடுத்து நிறுத்தும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற உத்திரவுப்படி நேர்மையான முறையில் பணி நியமனங்கள் நடைபெற பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் செயலாளருக்கு தமிழக அரசு ஆதரவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


பச்சையப்பன் கல்லூரிகளில் 132 பணியிடங்கள்

  • சூழ்ச்சிகள், இடையூறுளை உருவாக்கி, நேர்காணலை தடுத்து நிறுத்தும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும்  சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள்  84 பேர் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!!

  • நேர்மையான முறையில் பணி நியமனங்கள் நடைபெற அறக்கட்டளை நிர்வாகி மற்றும் செயலாளருக்கு  தமிழக அரசு ஆதரவளிக்கவேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைப் பல்கலைக் கழகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும்.

 

1.     எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மனித உரிமை செயற்பாட்டாளர்

2.     வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.

3.     பேராசிரியர் .மார்க்ஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்

4.   பேராசிரியர் பிரபா கல்விமணி, தலைவர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு,

5.     பேராசிரியர் சங்கரலிங்கம், தலைவர்,  மக்கள் சிவில் உரிமைக் கழகம்

6.  வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்

7.   கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர்தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை

8. பேராசிரியர் மு.திருமாவளவன்,  கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ), மக்கள் விடுதலை

9.     பழ.ஆசைத்தம்பி, மாநிலச் செயலாளர், சி.பி. (எம்.எல்), தமிழ் நாடு

10. வே..இரமேசுநாதன், அமைப்பாளர்நீதிக்கான தலித்,பழங்குடி கூட்டமைப்பு

11.  பேராசிரியர் அரச முருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை

12. .சிம்சன், ஒருங்கிணைப்பாளர்நீதிக்கான மக்கள் இயக்கம்.காரைக்குடி.

13.  கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

14.  காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்

15.  அருட்தந்தை .ரபேல்ராஜ், கவசம், கக்கனூர், விழுப்புரம்

16.  எழுத்தாளர் .கீதா, சென்னை

17.  பேராசிரியர் வீ.அரசு, சென்னை

18.  பேராசிரியர் அரங்க மல்லிகா, சென்னை

19.  வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் பதிப்பகம், சென்னை

20.  பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், சிவகங்கை

21. வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், மக்கள் உரிமைக் கூட்டணி, சென்னை

22. அ.தேவநேயன், தோழமை, குழந்தை உரிமை செயற்பாட்டாளர், சென்னை

23.  வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார், உயர்நீதிமன்றம், மதுரை.

24.  .இரவி கார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.

25.  கவிஞர் இசாக், சென்னை

26.  ஆர்.மோகனசுந்தரம், ஓய்வு பெற்ற ஆசிரியர், விழுப்புரம்

27.  பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்

28.  இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்

29.  முருகப்பன் ராமசாமி, செயலாளர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு.

-------------------

தொடர்புக்கு : பிரபா கல்விமணி, 9442622970.











No comments: