Tuesday, September 3, 2024

காந்தஹார் விமானக் கடத்தல் : ஐசி 814

Netflix தளத்தில் தமிழில் உள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நேபாளம் காட்மாண்டில் விமானம் கடத்தப்படுவது தொடங்கி, ஆப்கானிஸ்தான் காந்தஹார் விமானம் நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை பிறகு விடுவிக்கப்பட்டது வரையிலான, 7 நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகள்தான் இத்தொடர்.  6 பகுதியாக உள்ளது.

காஷ்மீர் பைல்ஸ், கேரளா பைல்ஸ் போன்றவைகளை விளம்பரப்படுத்திய பாஜக அரசு, இத்தொடருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒன்றுமேயில்லாத அன்னபூரனி படத்தையே நீக்க வைத்தவர்கள்.

பிபிசி ஆவணப் படத்திற்கு நடந்ததை அனைவரும் அறிவோம்.

இத்தொடரில் அப்போதைய பாஜக ஆட்சி நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் காட்சிகள், வசனங்கள் உள்ளது. அதனால் இத்தொடரை விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வார்கள்.



No comments: