பெரியார் பிறந்த நாளும்
Wednesday, September 18, 2024
பெரியார் பிறந்த நாளும் நீதியரசர் சந்துரு குழுவிற்கான கலந்துரையாடல் கூட்டமும்.
Tuesday, September 17, 2024
பாழடையும் பெரியாரின் ஈரோடு நினைவிடம் - பாதுகாக்கப்பட வேண்டும்..
பாழடையும் பெரியாரின் ஈரோடு நினைவிடம்
பாதுகாக்கப்பட வேண்டும்..
----------------------------------------------
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்.
நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள். எதிர்ப்புகள் இருந்தாலும் விடா முயற்சியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். சில விமர்சனங்கள் இருந்தாலும், தங்களின் முயற்சிகளுக்கு பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
தமிழ்நாட்டரசை உருவாக்கிய அண்ணாவிற்கு சிந்தனையாக இருந்து, வழிகாட்டிய தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான இன்று, அவர் தொடர்பான ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன்.
இந்த வேண்டுகோள் இப்போது எழுதியது அல்ல. 9 ஆண்டுகளுக்கு முன்பு (2015 இல்) எழுதியது. தாங்கள் நினைத்தால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இப்போதும் இதனை முன் வைக்கின்றேன்.
2015 ஆம் ஆண்டு நண்பர் திருமணத்திற்காக சத்தியமங்கலம் சென்று, திரும்பும் வழியில் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லம் பார்த்து திரும்பினோம்.
மனம் பெருத்த கவலையில் ஆழ்ந்தது. பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்கின்றவர்களுக்கும், விமர்சனங்களுக்கும் நாம் பதில் சொல்லிவிடுகின்றோம். ஆனால் பெரியார் பிறந்து, வளர்ந்து, சமூக பணிக்கான செயல்பாடுகளை தொடங்கிய அவருடைய வீட்டினை – தற்போது நினைவில்லம் என்று அழைக்கப்படுகின்ற – இடத்தினைப் பார்க்கின்ற பெரியார் ஆதரவாளர்கள் வேதனைப்படாமல் வெளியேற முடியாது.
பலபேர் தங்களுடைய சொந்த தாய் தந்தையருக்கான நினைவிடத்தை அவ்வளவு நேர்த்தியாக, பொறுப்புணர்வுடன், சுத்தமாகவும், அழகாகவும் பாதுகாத்து வருகின்றனர். நான் கூட எனது அப்பாவின் நினைவாக அவர் பயன்படுதிய மேசையை ஊரில் இருந்து எடுத்துவந்து பாதுகாத்து வருகின்றேன்.
ஆனால் சமூக நீதிக்கும், தமிழ் சமூகத்திற்கும், பகுத்தறிவிற்கும், மூட நம்பிக்கை எதிர்ப்பிற்கும், சமூக ஜனநாயக் செயல்பாடுகளுக்கும் தந்தையான தந்தைப் பெரியாரின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பும் இன்றி பாழடைந்து வருகின்றது. இதனையே அய்யாவின் பிறந்த நாள் கருத்தாக வேதனையுடன் பதிவிடுகின்றேன். இதனையொட்டி சில குறிப்புகள்…
இந்தியாவிற்கே வழிகாட்டி என பெருமையோடு குறிப்பிடுகின்றோம். அந்த பெருமைகள் எதுவும் நினைவிடத்தில் இல்லை. நாம் ஏற்கனவே பல முறை பத்திரிகைகளில், தமிழக அரசு விளம்பரங்களில் பார்த்திருக்கின்ற மிகவும் பிரபலமான புகைப்படங்கள் மட்டுமே கொஞ்சம் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அவைகளும் முறையாகப் பாதுகாக்கப்படாமல் மழை, வெயிலில் வெளிரிப்போய் பொலிவிழந்து காணப்படுகின்றது. இருக்கின்ற படங்களிலும் ஜெ.மட்டுமே முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். கலைஞர் ஒன்றிரண்டு மட்டுமே. இவைகளை சில நிமிடங்களில் சுற்றிப் பார்த்துவிடலாம். மிகவும் அரிதான படங்கள் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு ஒன்றுமில்லை.
பெரியார் நடத்திய இதழ்கள் ஒன்று கூட காட்சிக்கு இல்லை. பகுத்தறிவு, குடியரசு இதழ்களின் ஒன்றிரண்டு முதல் பக்கம் மட்டும் பெரிதாக ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதே நினைவிடத்தில் பின்பகுதியில் அண்ணா தங்கியிருந்தார் என அதுவும் பாதுகாக்கப்படுகின்றது. இப்பகுதி ஓப்பீட்டளவில் முக்கியத்துவம் கொடுத்து செய்துள்ளனர். பெரியாரின் நினைவில்லத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. அண்ணாவிற்கு வேண்டாம் என்பதில்லை. பெரியார் நினைவுகள் பாதுகாக்கப்படவில்லை என்பதுதான்.
பெரியார் பிறந்த கட்டில் என்று ஒரு அட்டையில் வெள்ளைத்தாளில் ஸ்கெட்ச் பேனாவில் எழுதி அந்தக் கட்டில் மீது வைத்துள்ளார்கள். அந்தக் கட்டில் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி திறந்த வெளியில் சாதாரணாமாக கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டின் மேல்பகுதியில் உள்ள மரங்கள் உளுத்து கொட்டுகின்ற தூசுகள் படிந்து ஒரு சதவீதம் கூட பாதுகாக்கப்படாமல் போட்டுவைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கடைசியில் பெரியார் பயன்படுத்திய மேசை, ஈசிசேர், கைத்தடி போன்றவைகளும் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கண்ணாடியிலான ஒரு கதவு உள்ளது. ஆனால் அதன் ஜன்னல்கள் அனைத்தும் திறந்தபடியே உள்ளது. ஒரே அழுக்கும், புழுதியும், குப்பையுமாக அந்த அறை உள்ளது. எதற்காக இவைகளை இப்படியான மோசமான நினைவுகளுடன் காட்சிப்படுத்துகின்றார்கள் என்று தெரியவில்லை.
மிகப்பெரிய வீட்டின் ஒரு பாதி மட்டுமே இப்படி நினைவில்லம் என்ற பெயரில் உள்ளது. மறுபாதி பூட்டப்பட்டு எவ்வித பயன்பாடுகளும் இல்லாமல் பாழடைந்து, குப்பைகள் சூழ்ந்து உள்ளது. நகரங்களில் தெருமுனைகளில் கேட்பாரற்று கிடக்கும் கட்டங்களை நினைத்துப்பாருங்கள். அதற்கும் இதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. அங்கிருந்த மேலாளர் இடம் அந்த வீடு ஏன் பூட்டப்பட்டு கிடக்கிறது என்று கேட்டதற்கு அது டிரஸ்டில் உள்ளது என்றார். ஒருவேளை ஏதேனும் வழக்கில் இருக்கலாம். அரசு முன்வந்து பொறுப்பெடுத்து வழக்கினை முடித்து, அந்த வீட்டையும் சேர்த்து நினைவில்லமாக புதுப்பிக்கவேண்டும்.
உலகத்தோடு பெரியாரை ஒப்பிடுகின்றோம். அவரின் நினைவிடத்தை உள்ளூரில் உள்ள ஒருவன் பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவில்தான் வைத்துள்ளோம். ஹைதாராபாத்தில் நிஜாம் அரசர்களின் நினைவிடத்தை அருங்காட்சியமாக மாற்றி அம்மாநில அரசு பாதுகாத்து, உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளது. அதனை சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது. ஆனால் நமது பெரியாரின் நினைவிடத்தைப் பார்க்க பத்து நிமிடமே அதிகம்.
உலகத் தரத்தில் பெரியாரின் நினைவிடத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு அரசு தனியொரு சுதந்திரமான நிர்வாக அமைப்பினை உருவாக்கவேண்டும்.
பெரியாரின் எழுத்து, பேச்சுக்களை நாட்டுடமை ஆக்கவேண்டும்.
வாய்ப்புள்ள அனைவரும் பெரியாரின் நினைவில்லம் சென்று உலகத் தரத்தில் பெரியாரின் நினைவிடம் பாதுகாக்கப் படவேண்டும் என்பதை பிரச்சாரமாக எடுத்துச் செல்லவேண்டும். இதுவே பெரியாரின் பிறந்த நாள் வாழ்த்தும் செய்தியும்.
வாழை
Wednesday, September 11, 2024
தமிழ்க்குரிசில் நினைவேந்தல்
ஆசிரியர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை? முதன்மைக் கல்வி அலுவலர் மீது.....?
திண்டிவனம் சாலை வசதி
பச்சையப்பன் அறக்கட்டளை விவகாரம் : உயர்கல்வித் துறை இணை இயக்குநர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு!! கைகட்டி வேடிக்கைப் பார்க்காது என நீதிமன்றம் எச்சரிக்கை!!
10.09.2024
பச்சையப்பன் அறக்கட்டளை விவகாரம் :
உயர்கல்வித் துறை இணை இயக்குநர் மற்றும்
சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் மீது
நீதி மன்ற அவமதிப்பு வழக்கு!!
கைகட்டி வேடிக்கைப் பார்க்காது என நீதிமன்றம் எச்சரிக்ககைை!!
அன்புடையீர் வணக்கம்.
தங்களது பணிக் காலத்தில் நேர்மையாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட, சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு பார்த்தீபன் அவர்கள் நிர்வாகியாகவும், நெய்வேலி என்.எல்.சி கல்வித் துறை செயலாளராக இருந்த திரு சி.துரைக்கண்ணு அவர்கள் செயலாளராகவும் தற்போது பச்சையப்பன் அறக்கட்டளையில் உள்ளனர்.
பச்சையப்பன் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் உள்ளிட்ட 132 பணியிடங்களை நேர்மையான முறையில் நடத்துவதற்கான முயற்சிகளை நிர்வாகி மற்றும் செயலாளர் முன்னெடுத்து வருகின்றனர்.
நேர்மையான இந்தச் செயல்பாடுகளை விரும்பாத தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் உள்ள சில அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து, பல்வேறு இடையூறுகள் அளிக்கின்றனர். இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு, அமைதியாக வேடிக்கை பார்ப்பது சந்தேகங்களை உருவாக்குகின்றது. இதுகுறித்து விரிவாக முந்தைய (08.09.24) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
தள்ளிக்க வைக்கப்பட்ட நேர்காணல் : சென்னைப் பல்கலைக் கழக
பேராசிரியர்கள் 84 பேர் முறைகேடுகளுக்கு துணைபோகின்றார்களா?
விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
காலிப் பணியிடங்கள் விளம்பரம் வெளியிட்டதிலிருந்து, இதனை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட்ட இடையூறுகள் குறித்து நேரடியாக நீதிமன்றத்தின் பார்வைக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் எடுத்துச் சென்றுள்ளனர். நீதி மன்ற வழிகாட்டுதல்களுடன் ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொண்டு நேற்றும், இன்றும் 09, 10-09-2024 மேற்படி 132 பணியிடங்களுக்கும் நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது.
துணைவேந்தரால் நியமிக்கப்படும் பிரதிநிதி மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டுதல் படி பேராசிரியர்கள் அடங்கிய நேர்காணல் குழு கல்லூரி பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்தவேண்டும். அதனடிப்படையில் பங்கேற்கவேண்டிய சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து 84 பேராசிரியர்கள், தங்களுக்கு விருப்பமில்லை என்றும், 19 பேராசிரியர்கள் விருப்பம் தெரிவித்தும் சனிக்கிழமை (07.09.24) கடிதம் அளித்துள்ளனர். இதனால் 132 பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தமுடியாத நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும்
பல்கலைகழக பதிவாளர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
நேர்காணலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு விருப்பமில்லை என 84 பேராசிரியர்கள் கடிதம் கொடுத்தது குறித்து, பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கினை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஆன்ந்த வெங்கடேஷ் அவர்கள்,
விதிகளுக்குப் புறம்பாக விருப்பமில்லை எனக் கடிதம் கொடுத்து, நேர்காணலை தடுத்து நிறுத்த முயற்சித்த சென்னை பல்கைலைக் கழகப் பேராசிரியர்கள் 84 மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அந்நடவடிக்கை இனி இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்றும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவர அறிக்கையினை, அடுத்த விசாரணை நாளான 25-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும், இதில் நல்லதொரு முடிவு எட்டப்படும்வரை இவ்வழக்கு தொடர்ந்து நடைபெறும்.
நேர்காணலில் பங்கேற்க முழு மனதுடன் ஒப்புதல் தெரிவிக்கும் பேராசிரியர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, புதிய நேர்காணல் குழு விபரத்தை 20-ஆம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்.
27, 28, 30 ஆகிய நாட்களில் நேர்காணல் முழுமையாக நடைபெற உயர் கல்வித் துறையும், பல்கலைக் கழக்கமும் உரிய ஒத்துழைப்பினை அளிக்கவேண்டும்
என்று உயர் கல்வித் துறை இணை இயக்குநர், பல்கலைக் கழகப் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்திரவிட்டார்.
சூழ்ச்சிகள், இடையூறுளை உருவாக்கி, நேர்காணலை தடுத்து நிறுத்தும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற உத்திரவுப்படி நேர்மையான முறையில் பணி நியமனங்கள் நடைபெற பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் செயலாளருக்கு தமிழக அரசு ஆதரவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பச்சையப்பன் கல்லூரிகளில் 132 பணியிடங்கள்
|
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைப் பல்கலைக் கழகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும்.
1. எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மனித உரிமை செயற்பாட்டாளர்
2. வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.
3. பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்
4. பேராசிரியர் பிரபா கல்விமணி, தலைவர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு,
5. பேராசிரியர் சங்கரலிங்கம், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
6. வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
7. கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை
8. பேராசிரியர் மு.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ), மக்கள் விடுதலை
9. பழ.ஆசைத்தம்பி, மாநிலச் செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ் நாடு
10. வே.அ.இரமேசுநாதன், அமைப்பாளர், நீதிக்கான தலித்,பழங்குடி கூட்டமைப்பு
11. பேராசிரியர் அரச முருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை
12. அ.சிம்சன், ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம்.காரைக்குடி.
13. கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
14. காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
15. அருட்தந்தை அ.ரபேல்ராஜ், கவசம், கக்கனூர், விழுப்புரம்
16. எழுத்தாளர் வ.கீதா, சென்னை
17. பேராசிரியர் வீ.அரசு, சென்னை
18. பேராசிரியர் அரங்க மல்லிகா, சென்னை
19. வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் பதிப்பகம், சென்னை
20. பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், சிவகங்கை
21. வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், மக்கள் உரிமைக் கூட்டணி, சென்னை
22. அ.தேவநேயன், தோழமை, குழந்தை உரிமை செயற்பாட்டாளர், சென்னை
23. வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார், உயர்நீதிமன்றம், மதுரை.
24. ஆ.இரவி கார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.
25. கவிஞர் இசாக், சென்னை
26. ஆர்.மோகனசுந்தரம், ஓய்வு பெற்ற ஆசிரியர், விழுப்புரம்
27. பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்
28. இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்
29. முருகப்பன் ராமசாமி, செயலாளர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு.
-------------------
தொடர்புக்கு : பிரபா கல்விமணி, 9442622970.