Tuesday, June 2, 2020

திருப்பூர் மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்டார்கள்..

திருப்பூர் மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்டார்கள்..
-------------------------------------------------------------------------

முந்தாநாள் இரவு தொடங்கிய பணி. 48 மணி நேரத்திற்கு பிறகு இப்போது ஒரு முடிவுக்கு வந்தது.


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே செங்கல் சூளையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டதை, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி.வி.ரமேஷ் அவர்கள் அன்று இரவே இணையம் வழியாக புகார் அனுப்பினார். தொடர்ந்து முகநூலிலும் பதிவிட்டோம்.

நேற்று காலை முதல் பல்வேறு நண்பர்களும் தோழர்களும் அமைப்பைச் சார்ந்தவர்களும் பல முயற்சிகளை எடுத்தனர். தொடர்ந்து ஆதரவளித்தனர்.

இன்று காலை 11 மணி அளவில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய விசாரணை மாலை 6 மணிக்கு மேல் முடிந்தது. சார் ஆட்சியர் திரு பவன்குமார் அவர்களின் ஏற்பாடு செய்திருந்த மூடுந்து வாகனத்தில் மாலை 7 மணிக்கு தாராபுரத்தில் கிளம்பினர்.

5 குடும்பத்தைச் சேர்ந்த 18 பழங்குடி இருளர் மக்கள் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டு தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். மீட்க உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக இன்று காலையிலிருந்து, கிளம்பும் வரை உடனிருந்து உதவிய பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் தோழர் விழுதுகள் தங்கவேல், SASY திரு. பழனிச்சாமி, IJM திரு கிளமண்ட் ஆகியோருக்கும் நன்றிகள்.

இவன்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
விழுப்புரம் மாவட்டம்.

(01.06.2020 முகநூல் பதிவு)

No comments: