Monday, January 4, 2021

கொரோனாவைக் கடந்த 2020

 கொரோனாவைக் கடந்த 2020

-----------------------------------------------------
சிறு வயதிலிருந்தே புத்தகங்களுடன்தான் எனக்கு அதிகம் தொடர்பு.
வெளியூர் செல்லும்போது உணவு, உடைகளை விட புத்தகங்கள் வாங்க அதிகம் செலவழித்துள்ளேன்.
கடந்த வாரம் சென்னை சென்றபோது, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலம் மற்றும் ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் புத்தகமும், ஐன்ஸ்டீன் புத்தகமும் வாங்கி வரும்படி என் மகன் அம்பேத்
Ambedkar Murugappan
சொல்லியிருந்தான்.
காலம் புத்தகம் மட்டும்தான் கிடைத்தது. வாங்கினேன்.
நாளை மற்ற புத்தகங்கள் வாங்கவேண்டும்.
"ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்" புத்தகத்தை நான்
கிண்டில் Mobile App ல் படித்தேன். படித்ததும், "நல்லவேளை ஸ்டீவ் ஹாக்கிங்க இங்கு பிறக்கவில்லை. இங்கு பிறந்திருந்தால் இந்நேரம் ஏதேனும் சிறையில் இருந்திருப்பார். இல்லை கொலை செய்யப்பட்டிருப்பார். அல்லது இந்நாட்டைவிட்டு வெளிநாடு சென்றிருப்பார்" என்றுதான் தோன்றியது.
இதுபோன்ற அறிவியல்ன்நூல்களை படிக்கத் தொடங்கியது, இந்த ஆண்டின் கொரோனா பேரிடரைக் கடந்த முக்கியமானதாகும்.

(31.12.2020 டிசம்பர்)

No comments: