Friday, January 22, 2016

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரியதச்சூர் காவல் நிலைய எல்லையில் உள்ள மேல் கூடலூர் கிராமம். 200 க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் உள்ள இக்கிராமத்தில் பலராமன், முனுசாமி என்கிற இரண்டு இருளர் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். இருவருக்கும் கொஞ்சம் நிலமுள்ளது.
விவசாயம் செய்து வாழ்ந்து வந்த இவர்களை ஊர்ப்பஞ்சாயத்தில் அவமானப்படுத்தி, இழிவு செய்து இரு குடும்பத்திற்கும் தலா 50,000/- அபராதம் விதித்துள்ளனர்.
ஊர்ப் பஞ்சாயத்தார் முன்னிலையில் அனைவர் காலிலும் இரு இருளர்களும் விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கோரிய பிறகு அபராதத் தொகையை தலா 25,000/- என குறைத்துள்ளனர்.
அதன்பிறகு பேசி ஒரு குடும்பத்திற்கு 10,000/- இன்னொரு குடும்பத்திற்கு 15,000/- என அபராதம் விதித்து ஜனவரி 15-ஆம் தேதிக்குள் கட்டவேண்டும் என்றும், இல்லையென்றால் ஊரைவிட்டு வெளியேறவேண்டும் என்று பஞ்சாயத்து தீர்ப்பாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் மூலம் பேரா. கல்யாணி புகார் தயாரித்து 26-ஆம் தேதி அனுப்பிய பிறகு.. நேற்று காலை முதல் ஊரில் இருளர் குடும்பங்களுக்கு கடைகளில் பொருள் தரமறுத்தும், தண்ணீர் தடை செய்தும், யாரும் பேச கூடாது என்றும் சமூக புறக்கணிப்பு செய்துள்ளனர் ஊர்பஞ்சாயத்தாரும், சாதி இந்துக்களும்.
இது தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விழுப்புரம் டி.எஸ்.பி திரு சுயம்பு அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய பிறகு இரவு பெரிய தச்சூர் காவல் நிலையத்தில் மேற்படு ஊர்பஞ்சாயத்தார் மீது கு.எண் 244/2015 பிரிவு 147, 294(பி) இதச மற்றும் 3(i)(x) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு விழுப்புரம் டி.எஸ்.பி அவர்களில் நடவடிக்கை எடுக்குமாறு பேசும்போது அவர் ‘’கேஸ் போடவேண்டுமா, பேசிக்கலாம் என்று சொல்கின்றார்களே’’ என்று கேட்கிறார். ‘’வழக்கு பதிவு செய்வதுதான் இருளர் மக்களுக்கு பாதுகாப்பு. வழக்கு பதிவு செய்யுங்கள் என்று பதில் கூறினோம்.
பெரிய தச்சூர் காவல் நிலையம் 04146-230300
டி.எஸ்.பி விழுப்புரம், திரு.சுயம்பு - 9442259604
(28.12.2015 முகநூல் பதிவு)



No comments: