Friday, January 22, 2016

மாதாகோவிலில் அடைத்து வைக்கப்பட்ட குறவர் சமூகத்தினர்

மாதாகோவிலில் அடைத்து வைக்கப்பட்ட குறவர் சமூகத்தினர்
---------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர் பகுதியில் குறவர் சமூகத்தினர் மீது காவல் துறையின் அத்துமீறல்கள் தொடர்பாக ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன்..மொன்னையம்பட்டி கிராமத்தில் குறவர் சமூக மக்கள் மீது நடந்த தற்போதைய இரு சம்பவங்கள்..
1. வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் இரு சக்கர வாகனங்களில் கிராமத்திற்கு சுமார் 15 போலீசார் சென்றுள்ளனர். போலீசாரின் அத்துமீறலில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை போலீசார் மிகவும் இழிவு படுத்தி ப் பேசியுள்ளனர். இறுதியில் முருகேசன் த\பெ குஞ்சப்பன் என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுவரை அவரை எங்கு வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை. தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பகுதியிலேயே போலீசாராக உள்ள செழியன் என்கிற போலீசார்தான் அழைத்துச் சென்றதாக மக்கள் அனைவரும் கூறுகின்றனர். இது குறித்து செழியன் போலீசாரிடம் விசாரித்த ''நான் அழைத்து வரவில்லை. வேறு யார் அழைத்துச் சென்றார்கள் என விசாரித்துச் சொல்கிறேன்" எனறார். அதன் பிறகு செல்பேசியில் அழைத்தால் எடுக்கவேயில்லை. குறவர் சமூக மக்களின் மீதான காவல் துறையின் அத்துமீறலில் 90% இவர்தான் காரணம் என மக்கள் கூறுகின்றனர். நாங்கள் செய்த ஆய்விலும் இதனை அறிய முடிந்தது. செழியன் போலீசாரின் எண் 9442440291.
சம்பவம்-2.
போலீசார் கிராமத்திலிருந்து சென்ற கொஞ்ச நேரத்தில் ஊர்ப் பகுயில் இருந்த ஒரு வீட்டில் 1500/- ரூபாய் பணமும், ஒரு மளிகை கடையில் பொருளும் திருடு போயுள்ளது. மறுநாள் வெள்ளிகிழமை காலை 6 மணிக்கு குறவர் மக்களின் குடியிருப்பிற்குள் நுழைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் குறவர் இழுத்துச் சென்று ஊரிலுள்ள மாதா கோவிலில் அடைத்து வைத்துள்ளனர். 7 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்டோர் பெண்கள், குழந்தைகள் உட்பட அடைக்கப்பட்டிருந்தனர். ஊருக்கள் நடந்த திருட்டினை ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும், இல்லையென்றால் ஆட்கள் தரவேண்டுமென்றும், இனிமேல் ஊருக்குள் எதுவும் திருடு போனால் தாங்கள்தான் பொறுப்பு என எழுதி அனைவரும் கையெழுத்து போடவேண்டும் என்றும் இல்லையென்றால் யாரையும் வெளியில் அனுப்ப முடியாது எனக்கூறி அடைத்து வைத்துள்ளனர். தகவல் அறிந்து தஞ்சாவூர் எஸ்.பி அவர்களிடம் பேச முயன்றால் பந்தோபஸ்து பணியில் இருப்பதாக கூறினார்கள். பிரச்சனையை கூறி கோபமாக பேசியபின்பு டி.எஸ்.பி மற்றும் ஆய்வாளர் எண் கொடுத்தனர் எஸ்.பி அலுவலகத்தில். இருவரிடமும் பேசி தகவலைக் கூறியதும் உடனடியாக ஒரு பெண் காவலர் உட்பட மூன்று காவலரை அனுப்பி மாதா கோவிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறவர் மக்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட சமூகத்தையே குற்றவாளியாக்கும் இந்த கொடுமைக்கு.. உண்மைக் குற்றவாளியான போலீசார் தண்டிக்கப்பட்டால்தான் ஒரு முடிவுக்கு வரும்...
(10.01.2016 முகநூல் பதிவு)

No comments: