Friday, October 9, 2015

பயணம் ஒன்று போதாது - பயண நூல் - தீபன்

இரு நாட்கள் மதுரையில் இருக்க நேரிட்டது. வழக்கறிஞராக உள்ள தம்பி இராபர்ட்டை தொலைபேசியில் அழைத்து மதுரை வந்திருக்கும் செய்தியைக் கூறினேன். இரு நாட்களும் வந்து சந்தித்தான். பயணம் ஒன்று போதாது என்ற இந்தப் புத்தகத்தை அளித்தான். நேற்று திண்டிவனம் திரும்ப மாலை 7.00 மணிக்கு மதுரை மாட்டுதாவணியில் பேருந்து ஏறினேன். அப்போது படிக்கத் தொடங்கியது. 359 பக்கம். சற்று முன்பு 6.15 மணிக்கு முடித்தேன். பேருந்தில் இரவு 8.30 விளக்கை அணைத்துவிட்டார்கள். விடியற்காலை 3.00 மணிக்கு வீடு வந்து மீண்டும் படிக்கத் தொடங்கி, அதிகாலை 5.30 முதல் 7 வரையில் தூங்கி எழுந்து மீண்டும் படிக்கத்தொடங்கி 11.00 மணிக்கி ஒரு அரைமணி நேரம் தூங்கி மீண்டும் படிக்கத் தொடங்கி முடித்தேன்.
இதனை எழுதிய தீபனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழில் ஏ.கே.செட்டியார் தொடங்கி பலர் பயண நூல் எழுதியுள்ளனர். அனைத்திலிருந்தும் இது வேறுபட்ட பயண நூல். அவ்வளவு சுலபமாக இதனை பயணநூல் என்ற அடையாளத்திற்குள்ளும் அடக்கிவிட முடியாது.
வாழ்க்கையின் அர்த்தங்கள், வாழ்க்கையின் பிடிப்பு, வாழ்வில் பிறரைச் சார்ந்துள்ள நிலை, அத்போன்ற இக்கட்டான நிலை, மனமொட்டாத சூழலில் அதிலிருந்து வெளியேறும் துணிச்சல் இயல்பு ஆகியவையெல்லாம் மிகவும் கவனத்திற்குரிய ஒன்றாகும்.
உண்மையில் தீபனுக்கும் முத்துகுமாருக்கும் மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கும், படைப்புலகத்திற்கும் இந்த ஒரு பயணம் போதாதுதான்...
நூல் குறித்து இன்னும் விரிவாக பிறகு எழுதுகின்றேன்.
படித்து முடித்ததும் உடனடியான உணர்வுகளை வெளிப்படுத்தவே இது..

(27.09.2015 முகநூல் பதிவு)

1 comment:

ப.கந்தசாமி said...

இந்த மாதிரி நூல் விமரிசனங்களைப் படித்தவுடன் மனதில் தோன்றும் முதல் எண்ணம் - இந்தப் புத்தகத்தின் விலை என்ன ? நம்மால் வாங்க முடியுமா ?

இரண்டாவது எண்ணம் - எங்கு கிடைக்கும் ?

இந்த இரண்டிற்கும் விடை இப்பதிவில் இல்லையே.