Thursday, September 10, 2015

1956 இல் அய்யர் இல்லாத திருமணம்

1956 இல் அய்யர் இல்லாத திருமணம்
--------------------------------------------------------

இன்றும் கூட சரியான பேருந்து வசதியில்லாத சிறிய கிராமம் எங்களுடையது. 
1956 போக்குவரத்து வசதி என்பது? 


இதே நாளில் 59 வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்திலேயே நடைபெற்ற எனது தாய்-தந்தையின் திருமணத்தின் வாழ்த்து, திருமணத் தம்பதியரான எனது பெற்றோருக்கு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வி.வா.சுந்தரம் என்பவர் என்பவர் வழங்கிய மு.வ வின் நண்பர்க்கு என்கிற அன்பளிப்பு நூல்.


இத்திருமணத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் 59 வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறு கிராமத்தில்  அய்யர் இல்லாமல், திருமண புரோகித சடங்குகள் இல்லாமல் நடைபெற்ற ஒரு திருமணம்.

அருகே உள்ள பரவளூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் பூமாலை என்பவர் தாலியினை எடுத்துக்கொடுக்க திருமணம் நடைபெற்றுள்ளது.


இப்படி திராவிட இயக்கம், அதன் கொள்கைகளை உள்வாங்கி, எங்கள் மீது எவ்வித ஆதிக்கமும் செய்யாமல் எங்கள் விருப்பத்திற்கு எங்களை வளர்த்தனர் பெற்றோர்.

வளர்ந்து, நாமும் பெற்றோரான பிறகு நமது பெற்றோரின் சிறப்பினை உணரமுடியும். அப்படி உணரும்போது அவர்களை அருகிருந்து கவனிக்கவோ, அவர்களுடன் நேரம் செலவழிக்கவோ முடியாத சூழலும், வருத்தமும் மிகும். 2001 இல் தந்தை இறந்தபோனபிறகு ஓரளவு விடுமுறை தினங்களில் கிராமத்திலுள்ள தாயாருடன் சில நாட்கள் தங்கியிருக்க முடிந்தது.

இன்று குழந்தைகள் வளர்ந்து, வேலை மிகுந்து, நேரம் குறைந்து போனது. 
கிராமத்திற்கு சென்று தாயாருடன் முன்பு போல் அடிக்கடி இருக்கமுடியாத வருத்தமான சூழலிலும்..

பெற்றோரின் சடங்குகள் இல்லாத திருமணமும், அவர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் சமூக உணர்வும் முக்கியமான ஒன்றாகும்.

(முகநூல் பதிவு 07.09.2015)





1 comment:

Mahendra Raja said...

Thank you for writing this chitapa.