Wednesday, July 2, 2025

போலீசார் எப்படியெல்லாம் சித்திரவதைகள் செய்வார்கள்? 40 வகையான சித்திரவதை வடிவங்கள்

 போலீசார் எப்படியெல்லாம் சித்திரவதைகள் செய்வார்கள்?

இந்த 40 வகையான சித்திரவதை வடிவங்களும், பாதிக்கபட்டவர்களும் அவர்களது உறவினர்களும் நேரடியாக கூறியது. இன்னும் கூட இருக்கலாம்.
------------------------------------------------------


1. அழைப்பதற்காக செல்கின்ற போலீசார் பார்த்த இடத்திலேயே கைகளை பின்புறமாக வைத்து கட்டிவிடுவது.
2. காவல் நிலையத்தில் உடைகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக்குவது.
3. கால்களிலும், கைகளிலும் சங்கிலி போட்டு கட்டி வைப்பது.
4. போதிய உணவு அளிக்காமல் இருப்பது.
5. சோதனை என்ற பெயரில் வீட்டினை அலங்கோலப்படுத்துவதை கேட்கும் பெண்களை எட்டி உதைப்பது. ஷூ காலால் மிதிப்பது.
6. லத்தியால் கடுமையாக முதுகு, இடுப்பிற்கு கீழ் பின்புறம், தொடைகளில் அடிப்பது.
7. கையை நீட்டச் சொல்லியும், மேஜை மீது வைக்கச் சொல்லியும் இரும்பு பூன் போட்டிருந்த லத்தி / தடியால் கடுமையாக அடிப்பது.
8. உட்காரவைத்து காலை நீட்டச் சொல்லி, நீட்டிய கால்மீது இருபக்கமும் இரு போலீசார் ஏறி நின்றுகொண்டு கால்பாதத்தில் லத்தியால் அடிப்பது.
9. பெண் போலீசார் ஆண்களின் முடியை பிடித்து இழுத்து கழுத்து, முதுகு, கன்னத்தில் அடிப்பது.
10. ஆண் போலீசார் பெண்களின் ஜாக்கெட்டிற்குள் கையை விட்டு என்னடி வச்சிருக்கீங்க என்று கூறியபடி பாலியல் சித்திரவதை செய்வது.
11. பெண்களை புடவையை அவிழ்த்து விட்டு பாவாடை ஜாக்கெடுடன் நிற்க வைப்பது.
12. பாவாடை ஜாக்கெட் உடன் இடுப்பிற்கு கீழ் பின்புறம் அடிப்பது.
13.கைகளைக் கட்டி, மேலே தூக்கிக் கட்டி தொங்கவிடப்பட்டு அடிப்பது.
14.வேனிலேயே அடைத்து வைத்து பகல் முழுவதும் சுற்றுவது. இரவு நேரங்களில் தனி இடங்களில் இறக்கி வைத்து கடும் சித்திரவதை செய்வது. .
15.கீழே தரையில் உட்கார வைத்து, இரு கால்களையும் நீட்டச் சொல்லி, கால் தொடை மீது ஏறி நின்று, கால் பாதத்தில் அடிப்பது கையை கட்டிவிட்டு, குண்டு ஊசியால் விரல்களில் குத்துவது.
16.உடல் உறுப்புகளில் முழுவதும் குண்டூயால் குத்துவது.
17.கை விரல்களை வளைத்து இழுத்து கட்டுவது.
18.இரண்டு கால்களையும் நீட்டச் சொல்லி தொடைமீது உலக்கை போன்று பெரிய தடியை வைத்து இருபுறமும் காவலர்கள் ஏறி நின்று கால் பாதம் வரை உருட்டிக்கொண்டே வருவது. மீண்டும் தொடை உருட்டிக்கொண்டே போவது.
19.தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடிப்பது.
20.அதே வலியுடன் ஆட வைத்தும், பாடவைத்தும், குரங்கு போல குட்டிகரனம் போட வைத்தும் சித்திரவதை செய்வது.
21.முதுகு, இடுப்பிற்கு கீழ் பின்புறம், தொடை, கால் சதைகள் போன்ற இடங்களில் அடித்து ரத்தக்காயங்கள் உருவாக்குவது.
22.அவ்வாறு லத்தியால் அடிப்பதில் உதடுகள் மற்றும் உடல் சதை கிழிந்துபோவது.
23.கை, கால் விரல் நகங்களை கொரடு வைத்து நசுக்குவது, இழுப்பது அல்லது பிடுங்கப்படுவது.
24.பச்சைமிளகாயை அரைத்து அந்த சாறை எடுத்து கண்ணில் விடுவது. மிளகாயத் தூளை கண் / வாயில் வைத்து தேய்ப்பது.
25.இடது கால், வலது கையை கயிற்றில் மாட்டி இறுக்கமாக இழுத்து மேலே கட்டிபோட்டு, ஒரு காலில் மட்டும் அதுவும் பெருக்கல் குறி போன்ற வடிவத்தில் பல மணி நேரமாக நிற்க வைப்பது.
26.குனிய வைத்து பின்புறம் அடிப்பது.
27.நாற்காலியோடு சேர்த்து கட்டிவிட்டு, கைகளின் இரு கட்டைவிரலிலும் உறுதியான, மெலிசான கயிறு அல்லது மொத்தமான நூலினை மாட்டி இருபக்கமும் சன்னல் கம்பிகளில் இறுக்கமாக கட்டிவிட்டு நாற்காலியை அப்படியே பின்புறம் இழுத்து, கை விரல் துண்டித்திவிடும் அளவிற்கு இழுத்தபடி, நாற்காலியை அப்படியே வைத்து பலமணி நேரம் அப்படியே வைத்திருப்பது.
28.உடல் முழுவதும் ஊசியால் குத்துவது. லத்தியால் அடிப்பது. செருப்புக் காலால் மிதிப்பது.
29.ஆண்களின் பிறப்புறுப்பில் கயிற்றில் கட்டப்பட்ட செங்கற்களை தொங்கவிடுவது.
30.பிறப்புறுப்பில் ஊசியில் குத்துவது.
31.ஆண் உறுப்பினை, இன்னொரு ஆணின் வாயில் வைத்து இருவரையும் மாற்றி மாற்றி சப்பச் செய்வது.
32.சில நாட்களுக்கு இரவு பகல் என ஒரு நிமிடம் கூட தூங்க விடாமல் நிற்க வைத்து சித்திரவதை செய்து, மனப் பிறழ்ச்சிக்கு ஆளாக்கி, சுய நினைவு / உணர்வு இல்லாத நிலையில் ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்துப் பெறுவது.
33.திருட்டு வழக்கினை ஒப்புக்கொள்ளச் செய்வது அல்லது வழக்கிலிருந்து விடுவிக்க நகை கேட்பது. மறுத்தால் காவல் நிலையத்திற்கு வரும் குடும்ப உறுப்பினர்களை இழிவு படுத்துவது, அடிப்பது, பொய் வழக்குப் போடுவோம் என மிரட்டுவது.
34.கிணற்றில் தண்ணீர் எடுப்பது போன்று, கயிற்றில் கட்டிவிட்டு ஏற்றி, ஏற்றி இறக்குவது.
35. உணவு அளிக்காமல், தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு சித்திரவதை செய்வது.
36. கைகளை கட்டிவிட்டு பெண்களின் பிறப்புறுப்பில் மிளகாய்த் தூள் திணித்து அப்படியே உட்கார வைப்பது.
37. பெண்களின் பிறப்புறுப்பில் லத்தியை நுழைத்து குத்துவது.
38. பிறப்புறப்பில் நகை மறைத்து வைத்துள்ளீர்களா என கைகளாலும், லத்தியாலும் நுழைத்துப் பார்ப்பது.
39. குடும்பத்து பெண்கள் மீது விபச்சார வழக்குப் போடுவோம் என மிரட்டுவது.
40. தலைகீழாகக் கட்டிப்போட்டு, கீழே முகத்திற்கு நேராக காய்ந்த மிளகாய்களை தீ வைத்து எரிப்பது.

(02.07.2025 முகநூல் பதிவு)



No comments: