’’மாஞ்சோலை’’ ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின்பு, கடந்த சில மாதங்களாக தமிழக ஊடகங்களிலும், நீதிமன்றத்திலும் பேசப்படும் பெயர்.
இதற்கு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு உள்ளது. அதைத்தான் இந்த ஆவணப்படம் சொல்கிறது.
ஆனால் இந்த ’’மாஞ்சோலை” ஒரு ஆவணப் படம் என்பதையும் தாண்டி நிற்கிறது. கொஞ்சம் கூட நகரவிடாமல், அடுத்து என்ன என நம்மையும் கூடவே அழைத்துச் செல்கிறார்கள். இதுதான் ஒரு ஆவணப்படத்தின் வெற்றி.
மாஞ்சோலை என்பது என்ன, எப்படி உருவானது, இன்று என்ன சிக்கல், எப்படி தீர்ப்பது என்பதை மக்களே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி வருகிறார்கள்.
பல விஷயங்கள் ஒரு கதைபோன்ற தொணியில் சொன்னால் எளிதில் எதிரில் உள்ளோரின் மனதில் போய் ஒட்டிக்கொள்ளும். நிற்கும். அப்படித்தான் இதில் ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.
இதனை ஒரு கதை சொல்லும் உத்தி போன்று, ஒரே நேர்கோட்டில் எடுத்துச் சென்ற இயக்குநர் சாம் பெரிதும் பாராட்டிற்குரியவர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலான ஒரு ஆவணப்படத்தை கொஞ்சமும் அலுப்பூட்டாமல், மக்களின் கூடவே பயணிப்பது போன்ற மனநிலை மட்டும் இல்லாமல், மக்களுக்கு துணையாக நிற்க வேண்டும் உறுதியையும் உந்துதலையும் உருவாகியுள்ளார்கள் சாம் குழுவினர்.
மொத்த குழுவினரும் மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள். அவர்களின் கடும் உழைப்பும், அக்கறையும் ஒவ்வொரு காட்சியிலும் ஆழமாக வெளிப்படுகிறது.
மாஞ்சோலை சிக்கலைப் பேசுகின்ற நிலையில் மட்டும் இல்லாமல், ஆவணப் படங்களின் வரிசையிலும் இது முக்கியமானது. இதற்கான சிறப்பிடத்தை நிச்சயம் பெறும்.
ஒரு ஆவணப்படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு ஆவணம். உதாரணம்.
மொத்த குழுவினருக்கும், உறுதியாகப் போராடும் மக்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி Robert Chandrakumar
https://www.youtube.com/watch?si=uIWay3UiexLIHcZ6&fbclid=IwY2xjawGVYv1leHRuA2FlbQIxMQABHXEQp70kpM1ngVHkyihFCwWBdLnn6x58KCnMn_9EUp3Lr9TS_Gd18KwiPw_aem_NlQKg_WKG-7mNBneQIaadA&v=vM18u58rwhk&feature=youtu.be
No comments:
Post a Comment