ஆளுங்கட்சிகள் கூட, தங்கள் கட்சி மாநாட்டிற்காக தேசிய நெடுஞ்சாலையில்
சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுப் போக்குவரத்திற்கு தடை விதித்ததில்லை.
முன்கூட்டியே இதனை அறிவித்திருந்தால் யாரேனும் நிச்சயம் நீதிமன்றம் சென்றிருப்பார்கள்.
அதற்கான நேரமோ, வாய்ப்போ அளிக்காமல் இப்போது தடை
குறித்து அறிவிக்கப்படுகிறது.
உண்மையில் அரசு எச்சரிக்கையோடு செயல்படுகிறதா அல்லது பிற்கால தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து சலுகையாக அளிக்கிறதா என்பதை காலம்தான் வெளிப்படுத்தும்.
கட்சியின் தலைவர் விஜய் அவர்களுக்கு இந்த 40 கி.மீ தூரத்திற்கான பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும் என்ற விவரம் முன்கூட்டியே தெரியாமல் இருந்திருக்காது. இதனை விஜய் தவிர்த்திருக்க வேண்டும்.
செஞ்சி அல்லது புதுச்சேரி வழியாக மாற்றப்பட்டு சுற்றிச் செல்வது, பெரும் அலைச்சலுடன், அதிக செலவும் நேரம் ஆகும் இழப்பாகும்.
No comments:
Post a Comment