ஆலன் ஆக்டேவியன் ஹியூமின் பிற்கால வாழ்க்கை வியத்தகும்வகையில் வித்தியாசமாக இருந்தது. எவ்வளவென்றால் அவரது வாழ்கை வரலாறு இந்திய விடுதலைப் போராளிகளின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அவருக்கு தியோசபியில் ஆர்வம் வந்தது. அது இந்து மற்றும் புத்த மதங்களின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட மதம். இந்திய கலாச்சாரத்துக்கும், கனவுகளுக்கும் அது ஆதரவாக இருந்தது.
1883ல் அவர் ஒரு மனம்திறந்த மடல் ஒன்றை "கல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டதாரிகளுக்கு' எழுதினார். கல்வி கற்ற இந்தியர்களை அரசியல் நோக்கி ஒருங்கிணைக்கும் குழு ஒன்றை அமைக்கும்படி அறைகூவினார்.
இந்தியர்களே அதை துவங்கவேண்டும் என்றும் அதற்கு ஆதரவு தந்த ஐரோப்பியர்கள் அவர்களின் கீழே செயல்படவேண்டும் என்றும் அவர் ஆர்வமுடனிருந்தார்.
இருந்தாலும் அவரே 1885ல் முதல் தேசிய கூட்டத்தை ஒருங்கிளைக்கவேண்டியதாய் இருந்தது. அதில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. ஹியூமே அதன் முதல் பொதுச்செயலாளரும் ஆனார்.
அடுத்த இருபத்தைந்து ஆண்டுகள் அவர் அதை வழிநடத்தினார். அது பின்னர் மகாத்மா காந்தியின் தலைமையில் விடுதலையை பெற்றுத்தந்த கட்சியாகியாகவும், சுதந்திர இந்தியாவை நெடுங்காலம் ஆட்சி செய்த அரசியல் கட்சியாகவும் மாறியது.
- ராய் மாக்சம் எழுதி, சிறில் அலெக்ஸ் தமிழில் மொழி பெயர்த்துள்ள 'உப்பு வேலி' நூலில்.
No comments:
Post a Comment