Wednesday, September 27, 2023

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் - சுருக்கமான குறிப்புகள்.

 

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்

சுருக்கமான குறிப்புகள்.



தலித் மற்றும் பழங்குடி மக்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித மாண்பு  ஆகியவைகள் உள்ளடங்கிய மனித உரிமைகளை பாதுகாப்பது, உறுதிபடுத்துவதற்காக புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் கொள்கை மற்றும் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு 1983 ஆம் ஆண்டு  இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் (Social Awareness Society for youth-SASY) தொடங்கப்பட்டது.   டாக்டர் வே.அ.இரமேசுநாதன் SASY அமைப்பின் இயக்குநராக உள்ளார்.

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் தலித் மற்றும் பழங்குடியினருக்கான  நீதியைப் பெற்றுத் தருவது, தூய்மைப் பணியாளர்கள் உரிமைகள், உள்ளாட்சி அரசாங்கத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, குழந்தை உரிமைகளை உறுதி செய்தல், தலித் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பேரிடர் உரிமை பாதுகாத்தல் ஆகிய ஏழு பகுதிகளில் SASY அமைப்பு முதன்மையான கவனம் செலுத்தி செயல்படுகிறது.

தலித் மனித உரிமைகள் கண்காணிப்புப் பணிகளில் SASY தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை தலித் & பழங்குடியினர் மீதான 2500 க்கும் மேற்பட்ட சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், கொலை, கொலை முயற்சி, சொத்துகள் அழிப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வகையிலான   உரிமை மீறல்களில் தலையீடு செய்து, பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக சட்ட உதவிகள் செய்து வருகின்றது. இதன் விளைவாக, தலித் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (SC/ST PoA Act) சட்டத்தின் படி சுமார்  16 கோடி ரூபாய் இழப்பீடாக பாதிக்கப்பட்டோர் பெற்றுள்ளனர்.  

குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான POCSO போன்ற சட்டங்களின்  மூலமாக குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகளை கண்காணித்து நீதி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  பாகுபாடுகள் இல்லாத பள்ளிகள் எனும் பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகின்றது.

2005 முதல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதிலும் SASY செயல்படுகிறது. கடலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் செயல்படும் 45 குழந்தை வள ஆதார (CRC) மையங்கள் மூலம் 1050க்கும் மேற்பட்ட தலித் மற்றும் பழங்குடியின குழந்தைகள் பயில்கின்றனர். இம்மையங்களின் மூலமாக கல்வி, பல் திறன், பங்கேற்பு, பங்களிப்பு மற்றும் தலைமைத்துவம் பெற்றுள்ளனர்.  

பாகுபாடுகள் இல்லாத கல்வியைப் பெறுவதுடன், அவர்களின் வழக்கமான பாடத்திட்டத்துடன் குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான வழிமுறைகள் மற்றும் சமத்துவக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இணைந்த கைகள் மகளிர் கூட்டமைப்பை கடலூர் மாவட்டத்திலும், ஜெய்பீம் தலித் பெண்கள் கூட்டமைப்பை கோவை மாவட்டத்திலும் வழிநடத்தி வருகின்றது. 3300 தலித் பெண்களின் உறுப்பினர்களாக உள்ள இக்கூட்டமைப்பைபுகளை SASY ஊக்குவித்து வழிகாட்டி வருகிறது. மேலும் தலித் பெண்களின் தலைமைப் பண்பினை வளர்த்தெடுத்து, பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் இக்கூட்டமைப்பு வழியாக உரிமை மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செயல்படுகிறது.  

சுனாமி போன்ற பேரிடரால் பாதிக்கப்பட்ட 25000 க்கும் மேற்பட்ட தலித், பழங்குடியினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன், கடலூர் மாவட்டத்தில் 803 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

 

கோயம்புத்தூர் மாவட்டம்.

              தலித் மனித உரிமைக் கண்காணிப்பு செயல்பாடுகள் மூலமாக கோவை மண்டலத்தில், (கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளடங்கிய மாவட்டங்கள்) செயல்பட்டு வந்த SASY அமைப்பு, கடந்த இரு ஆண்டுகளாக (2021 முதல்) கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் 30 கிராமங்களில் தலித் பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கி, அதன் வழியாக தொழில் முனைவோராக வளர்த்தெடுக்கவும், பொருளாதார மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. மேலும், அரசு நலத்திடங்களை பெறுவது, குழந்தைகள் கல்வி, உரிமை மற்றும் நலன்களைப் பாதுகாப்பது போன்றவைகளையும் செய்துவருகிறது.

              இதற்கான திட்டப் பணிகளின் ஒருங்கிணைப்பாளராக க.பழனிச்சாமி, ஒன்றிய அளவில் சமூக ஒருங்கிணைப்பாளர்களாக திருமதி ரத்னா, செல்வி லோகநாயகி, மற்றும் உதவி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக செல்வி லலிதா, திருமதி திவ்யா ஆகியோர் உள்ளனர். மேலும், 20 குழந்தை வள ஆதார மையங்களின் வழிநடத்துராக 20 பேர் உள்ளனர்.

              இந்நிலையில்தான், தலித் பெண்களின் சமூக, பொருளாதாரக் வளர்ச்சி, மேம்பாட்டிற்காக ஜெய்பீம் பெண்கள் தலித் பெண்கள் கூட்டமைப்பு மூலமாக செயல்பட்டுவருகின்றோம்.


உறுதிமொழி

கோவை மாவட்டத்தில் உள்ள ஜெய்பீம் தலித் பெண்கள் கூட்டமைப்பில்        ஒரு அங்கமாக உள்ள ___________________________________ கிராமத்தைச் சேர்ந்த _______________________________________________________ குழுவின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தைப் பெரியார் வழிநின்று சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடுகளைக் களைந்து, சமத்துவத்தை நிலைநாட்ட, மனித மாண்பை மீட்டெடுக்க இணைந்து செயலாற்றுவோம் எனவும்..

தலித் மற்றும் பழங்குடியின மக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது நடைபெறும் வன்கொடுமைகளை ஒழித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுப்போம் எனவும்..

நாங்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற்று, தொழில் முனைவோராக வளர்ந்தும், சுய தொழில் செய்தும் எங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான பொருளாதார தற்சார்பு வளர்ச்சியடையவும், தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் பொறுப்பேற்று ஒற்றுமையாக  செயல்படுவோம் எனவும், இதற்காக மாதந்தோறும் _____________________ அன்று குழு கூட்டமும், __________________ அன்று கூட்டமைப்பு கூட்டமும் நடத்துவோம் என்றும் உறுதியளிக்கின்றோம். 

 

No comments: