Thursday, September 21, 2023

 

மாநிலக் கல்விக் கொள்கை

பள்ளி உள்ளிட்ட அனைத்துவகை கல்வி நிறுவனங்களிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இருக்கக்கூடாது.

·  பள்ளிகளில் வகுப்பறை, மைதானம், கழிவறை போன்றவைகளை தூய்மை செய்யும்  பணிகளில் தலித் குழந்தைகளை  ஈடுபடுத்தக் கூடாது.

2.     அங்கன்வாடி மையங்களில் தலித் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பது நிறுத்தப்படவேண்டும்.

3.     மேற்கு மண்டலங்களில் குறிப்பாக அருந்ததியர் குடும்பங்களில் நிலவும் வறுமை, அறியாமை போன்ற காரணங்களால் அருந்ததியர் குடும்ப குழந்தைகளில் இடைநிற்றல், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்கள் நிகழ்கின்றன.

·       பாடத்திட்டங்களிலும், பள்ளிகளிலும் இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை இருக்கவேண்டும்.

·       இப்பகுதிகளில் இதுகுறித்து பள்ளிகளில் அதிகம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தனித் திட்டம் வகுக்கப்படவேண்டும்.

4.     ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கான உதவித் தொகைகள் சரியாக சென்றடைவதில்லை.

5.     ஆதிதிராவிட விடுதிகளில் அடிப்படை வசதிகள், உணவு போன்றவைகளில் 10% கவனம் கூட செலுத்தப்படுவதில்லை.

6.     வறுமை, அறியாமை, ஊட்டச் சத்துக் குறைபாடு காரணமாக விடுதியில் உள்ள தலித் மாணவர்களிடம் கல்வி முன்னேற்றம் நிகழ்வதில்லை.

7.     ஆதிதிராவிட நலப்பள்ளிகளிலும் (வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால்) கட்டிடம், ஆய்வகம், கழிவறை, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இருப்பதில்லை.

8.     தலித் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சிகள் அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.

9.     தலித் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அடிப்படை வசதி மட்டுமில்லாமல் ஆசிரியர் பற்றாக்குறையும் கவனிக்கப்படாமல் உள்ளது. இதனை சரி செய்யவேண்டும்.

10.  கல்வி கற்பிக்கும் தற்போதையில் கரும்பலகைத் திட்டத்திற்கு மாற்று கண்டுபிடிக்கவேண்டும். குறிப்பாக எளிதில் புரியும் வகையில், சிந்தனையை வளர்க்கும் வகையில் பல்வேறு வகையிலான கலைவடிவங்களில் கற்பித்தல் பணி நடைபெற வேண்டும்.

11.  ஆசிரியர்களின் துன்புறுத்தல் கூடாது.

12.  வீட்டுப்பாடங்கள் குறைக்கப்படவேண்டும்.

13.  போதிய பேருந்து வசதிகள் இல்லாமலும் நிறைய தலித் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் நிகழ்கிறது. பேருந்து வசதிகள் உருவாக்கப்படவேண்டும்.

14.  பள்ளிகளில் விளையாட்டுப் பொருட்களும் இல்லை. பாடவேளையும் இல்லை. பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களும் இல்லை.

15.  இருக்கும் விளையாட்டு ஆசிரியர்களும் போதிய அனுபவம் இன்றி அறிவியல் போன்ற பாடங்களை எடுப்பது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

16.  விளையாட்டுப் பொருகள், விளையாட்டு ஆசிரியர்களுடன் விளையாட்டுப் பாடவேளைகள் கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.

17.  ஆசிரியர்களுக்கான வேலைகளை (பேக் தூக்குவது, சாப்பாடு எடுத்து வருவது, தட்டு மற்றும் உணவு பாத்திரங்களை கழுவுவது போன்றவைகள்)  தலித் குழந்தைகள் மீது திணிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.

18.  பல்வேறு கிராமப்புற பள்ளிகளில் சுற்றுச் சுவர் கிடையாது. இதனால் பல்வேறு சிக்கல்கள், இன்னல்கள், இடையூறுகள், ஆபத்துகள் நிகழ்கின்றது. எனவே அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றுச் சுவர் கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.

19.  உதவித் தொகை பெறும் தலித் குழந்தைகள் பிற குழந்தைகளுக்கு முன்னாள் அவமானம் / இழிவு படுத்தப்பபடுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

20.  சிறுவயதில் புரிதலின்றி பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தடுத்து நிறுத்த, புரிதல்கள் ஏற்பட பாலியல் கல்வி அளிக்கப்படவேண்டும்.

21.  சிறுவயதில் நிகழ்வும் குழந்தைத் திருமணங்களால் நிகழ்வு ஆபத்துகள் குறித்து விரிவாக குழந்தைகள் புரிந்துகொள்ள வளரிளம் பருவத்தில் உரிய பயிற்சிகள் அளிக்கவேண்டும்.

22.  இன்னும் கூட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெயரில் பல்வேறு வகையிலான பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

23.  பள்ளி கல்லூரிகளில் தலித் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படவேண்டும்.

24.  கல்லூரி உள்ளிட்ட பட்டப் படிப்புகள் முடித்தபிறகு, தலித் இளைஞர்களுக்கு பெரும்பாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பள்ளி, கல்லூரிகள் நிகழும் சாதிய பாகுபாடுகள் காரணமாக திறன்கள் அறிவது / வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால், படிக்கும் காலத்திலேயே தலித் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்கள் அளிக்கப்படவேண்டும், வேலைவாய்ப்புகள் குறித்து தகவல்களை அளிக்க்கவேண்டும்.

25.  தலித் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதியப் பாகுபாடு மற்றும் வன்கொடுமைகளில் இருந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும்.

26.  பள்ளி, கல்லூரி செல்லும் தலித் மாணவர்களுக்கு வழியில் உள்ள பிற ஊர்களிலிருந்து நிகழும் ஆபத்துகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

27.  உயர்கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு, உயர் கல்வியில் எடுக்கும் பாடம் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து அறிமுகம் வேண்டும்.

28.  திறன் வகுப்புகள் (Smart Class) அனைத்துக் கிராமங்களிலும் வேண்டும்.

29.  மாணவர்களின் கற்றல் திறனை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிந்துகொள்ளவேண்டும். இதற்காக அதிகாரிகள் காலமுறை இடைவெளியில் (Periodical Visit) ஆய்வு செய்யவேண்டும்.

30.  கற்றல் திறனை உருவாக்காத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை, குறைந்தபட்சம் விசாரணையாவது மேற்கொள்ளவேண்டும்.

31.  பல்வேறு தடைகளை மீறி கல்வி பயிலும் தலித் பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக நலத்திட்ட உதவிகள் உருவாக்கபடவேண்டும்.

32.  மேற்கு மண்டலத்தில் அருந்ததியர்கள் அதிகமாக உள்ளதால், கல்வி நிறுவனங்களின்  மாணவர் சேர்க்கையின்போது, அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.

33.  மேல்நிலைக் கல்வியில் குறிப்பாக 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது தலித் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் உள்ளிட்ட முதன்மையான பாடப்பிரிவுகள் கொடுக்கப்படுவதில்லை. “உங்களுக்கு அறிவியல், கணிதம் வராது” எனக்கூறி ஆசிரியர்கள், பிற தொழில்கல்வி பிரிவுகளில் சேர்த்துவிடுகின்றனர். ஆசிரியர்கள் இந்தப் பார்வை / மனநிலையை மாற்றவேண்டும். மாணவர்கள் சேர்க்கயில் உரிய பிரிவுகள் வழங்கப்படவேண்டும்.

34.  +1 மாணவர் சேர்க்கையின்போது ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தமிழகத்திலுள்ள 69% இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படவேண்டும். குறிப்பாக தலித் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பாடப் பிரிவுகள் வழங்கப்படவேண்டும்.

35.  கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இருக்கும் சாதிய பாகுபாடுகள் நடைமுறைபடுத்தும் நிலை மாற்றப்படவேண்டும்.

36.  அரசு அளிக்கும் கல்வி உதவிப் பொருட்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி போன்றவை தரமானதாக இருப்பதில்லை. குறிப்பாக சீருடை, செருப்புகள் கொஞ்சம் மாணவர்களுக்கான அளவில் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் செல்வு செய்து அவை மாணவர்கள் பயன்படுத்த முடியாத  நிலை தவிர்க்கப்படவேண்டும்.

37.  பாடத்தினை உரிய காலத்தில் முடிக்கவேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், புரியும் வகையில் நடத்துவதற்கான வாய்ப்புகள்/நேரம் வழங்கப்படவேண்டும்.

38.  Single Parent குழந்தைகளின் கல்வி நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். இதுபோன்ற குழந்தைகள்தான் சமூகத்தை மீறீய குழந்தைகளாக மாறுவதற்கான சிக்கல்களில் போய் மாட்டிக்கொள்கின்றனர்.

39.  ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டுவது ஒழிக்கப்படவேண்டும்.

40.  மாணவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

41.  மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிப்பது நிறுத்தப்படவேண்டும். அதனை பள்ளிகளிலேயே செய்வதற்கேற்ப பாடவேளைகள் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

42.  மாணவர்களின் வீட்டுச் சூழல், வறுமை உள்ளிட்ட காரணங்களை ஆய்வு செய்து தேவைபடும் குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவும் வழங்கப்படவேண்டும்.

43.  நவீன தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை அறிவு, திறன், கற்பித்தலில் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

44.  கொரொனா காலத்தில் தொடங்கிய இணைய வழி வகுப்புகளின் காரணமாக மாணவர்களிடம் செல்போன் பழக்கம் அதிகரித்துள்ளது. இது பல்வேறு வகையிலான குற்றம், வரம்பு மீறுதல் மற்றும் சிக்கல்களுக்கும் ஆளாக்கியுள்ளதுடன், விளையாட்டு போன்றவைகளுக்கு அடிமையாகியுள்ளது. செல்போன் என்பது நவீன காலத்தில் தவிர்க்கமுடியாது என்றாலும் கூட பயன்படுத்துவது மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். கவுன்சிலிங் வசதிகள் செய்யப்படவேண்டும்.

45.  மனித கழிவு அகற்றுதல், பாதாளச் சாக்கடை தூய்மை செய்தல் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் பெருமளவில், பெற்றோர்களைத் தொடர்ந்து அதே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை அரசு முற்றிலும் கண்காணித்து, குலத்தொழில் போன்று நிகழ்வும் இதுபோன்றவைகளை தடுத்து நிறுத்தவேண்டும்.

 


No comments: