Friday, March 6, 2020

இந்தியா 74-வது இடம்

அறிவியல், கணிதம் மற்றும் வாசிப்பில் மாணவர்களின் அறிவை அறியும் சர்வதேச மாணவர் அறிவுத் திறன் சோதனை தேர்வின் அடிப்படையில்,
74 நாடுகளின் பட்டியலில்
இந்திய மாணவர்கள்
73 - ம் இடத்தில் உள்ளனர்.

கிர்கிஸ்தான் மட்டுமே நம்மை விட பின்தங்கி இருக்கிறது.

- இன்றைய நாளிதழ் செய்தி


பீப்ஃ கவிதைகள் - பச்சோந்தி

"பண்ணை அடிமையாக மாறி விடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு பிள்ளைகளாக ஊரிலிருந்து வெளியேறினர். உதவியாக இருந்தார் அப்பா" என்று முன்னுரையில் அப்பாவை நினைவு கூர்கின்றார்.

நிலமாக இருந்த தாய் இயலாமல் விழுந்ததும் இவருக்கு பெரும்
பாதிப்பாக அமைந்தது. அது அவரவருடைய தாயாரை நினைவுபடுத்துவதாகவும் வருத்தங்களை உருவாக்குவதாகவும் உள்ளது.

முதல் நூலை வெளியிட்ட அன்பு நண்பர் தமிழ் அலை இசாக் இசாக் Ishaq அவர்களை கவிஞர் பச்சோந்திஅவர்கள்
அன்புடன் நினைவு கூறுகிறார்.

கட்டுரைகள், கதை, ஆய்வுக் கட்டுரை, ஆராய்ச்சி உள்ளிட்டவை எழுதுவதற்காக மட்டுமே இதுவரை கள ஆய்வுகளும் பயணங்களும் நடைபெற்றுள்ளது. மாறாத கவிதை எழுதுவதற்காக பெரும் பயணங்களும் கள ஆய்வுகளில் செய்திருப்பது இவர்தான்.

இந்தக் கவிஞர்தான்,
கவிதை எழுதுவதற்காக
முதன் முதலாக ஊர் ஊராகச் சென்று, நிறைய புத்தகங்கள் படித்ததையும் அதுவும் குறிப்பாக மாடு வெட்டுவது தொடர்பாக நேரில் கண்டறிந்து பல இடங்களுக்கு நேரில் சென்று காத்திருந்து கவனித்து எழுதியுள்ளார்.
எவ்வளவு பெரிய கொடுப்பினை.

கவிதை ஆழமாக வரவேண்டும் என்ற எண்ணம் மட்டும் அல்ல மிகப்பெரிய உணர்வும் அதில் உள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.

குறிப்பாக "வேள்வியில் எஞ்சிய கவியமுதம்" என்கிற ஒரே ஒரு கவிதை எழுதுவதற்காக மட்டுமே சென்னை பாண்டிச்சேரி மார்த்தாண்டம் திண்டுக்கல் கேரளத்திலுள்ள கொச்சி ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்து அலைந்து திரிந்து உள்ளார் என்பதை பதிவு செய்துள்ளார்.

ஒரு தேர்ந்த பயணமும் அலைச்சலும் காத்திருத்தலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு செய்தது வருடக்கணக்கில் பலருடன் பேசியதில் இந்த பீஃப் என்ற கவிதை நூல் ஆழமாகவும் பெரும் ஆவணமாகவும் அடையாளமாக உள்ளது.

'நினைவுகளில் அவியும் மாட்டுக்கறி;
தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்; அக்கிரகாரத்து மாடுகள்;
வழிப்போக்கனின் புலால் நாற்றம்; கோசாலை கோயில் மாடுகள்;
கடைசி பச்சையம் தேசியக் கொடியில்;
தலைகீழ் சந்தை;
அரளிக்காற்றெங்கும் ரத்தநெடி;
எரியூட்டப்பட்ட காம்புகள்;
நிழல்பட்ட மரணம்;
வேள்வியில் எஞ்சிய கறியமுதம்'
ஆகிய தலைப்புகளில் நீண்ட கவிதைகள் உள்ளன.

நீலம் பதிப்பகத்தின் முதல் வெளியீடுகளில் ஒன்றாக வந்துள்ள இந்தக் கவிதை புத்தகம், சம கால அரசியல் மற்றும் மக்களின் வாழ்வனுபங்களை உள்ளடக்கியுள்ளது.

பச்சோந்தி பச்சோந்தி

Thursday, March 5, 2020

தற்கொலைக் குறிப்புகள் : தேசிய குற்ற ஆவணக் காப்பகமும் தமிழக அரசும்.

மூன்று நாட்களுக்கு முன்பு, கவிஞர் சபிதா மறைவையொட்டி முகநூலில் தற்கொலை தொடர்பான தகவல்கள் நிறைய வெளிவந்தது.
நேற்று முதல்நாள், விழுப்புரம் செஞ்சி காவல் நிலையத்தில், பணியில் சேர்ந்து ஒரு வருடமே ஆன காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியும் பரவலாக வெளியானது இரு நாட்களில் 5 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்தி வரும் அதே நேரத்தில், நேற்றும் ஒரு காவல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பணிச்சுமை மற்றும் உயரதிகாரிகளின் அழுத்தம் ஆகியவை இந்தத் தற்கொலைகளுக்கு காரணம் என்பது வெளிப்படையானது.
0
இந்த நிலையில் தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும், ’’பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனி கவனம்” என்ற தலைப்பில் பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சிக்கான செலவினத் தொகை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று கல்வித்துறையால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க..


0
இரு நாட்களுக்கு முன்பு, தேசிய குற்ற ஆவண காப்பகம் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் நிகந்த தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது;
இதில் 6656 பேர் 2018ல் தற்கொலை செய்துகொண்டதாக, மகாராஷ்டிரா முதலிடத்திலும், 4552 பேர் தற்கொலையானதாக தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இத்தகவல்கள் தொடர்பாக தினமணி நாளிதழ், ‘’தற்கொலை ஒரு சமூக அவலம்” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது
0
2018ம் ஆண்டு மொத்தம் 1,34,516 தற்கொலைகள் இந்தியாவில் நடந்ததாக பதிவாகியுள்ளது இது 2016 ஆம் ஆண்டில் நிகழந்ததைவிட 3.6 சதவீதம் அதிகம். இதுவும் கூட பதிவான தகவல்கள் மட்டுமே. பாதிக்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
தற்கொலை செய்துகொண்டதில், வேலை இல்லாதவர்கள் சுயதொழில் புரிபவர்கள் 26, 085 பேரும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டு குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருந்த பெண்கள் 42,319 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த தற்கொலைப் பதிவுகளில் 9.7% வேலை இல்லாதவர்கள்; 7.7 பேர் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் ஆவர். 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 45 நிமிடத்திற்கு ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
0
பணியிடங்களில் நிகழும் சிக்கல்கள்; தனிமை; திட்டுவது மற்றும் அவமானத்தால் ஏற்படும் மன அழுத்தம்; வன்முறைக்கு ஆளாவது; குடும்ப பிரச்சினை; மனநல பாதிப்பு; போதைப்பழக்கம்; பொருளாதார இழப்பு; உடல் பிரச்சினைகள்; காதல் தோல்வி போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்வதாக குற்ற ஆவண காப்பகம் பதிவு செய்துள்ளது
தற்போது அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வரும் ஆண்டில் தற்கொலைகள் அதிகரிக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது
0
மனநல ஆலோசனை பெற்றுக்கொண்டால், பெரும்பாலான தற்கொலைகள் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலையில் மனநல ஆலோசனை பெறுவதில் பெரும் தயக்கமும் அச்சமும் சமூகத்தில் நிலவுகிறது.
ஒரு ஒருவேளை தயக்கமின்றி மனநல ஆலோசனை அல்ல சிகிச்சை பெற்றுக்கொண்டால் அவர்களை இழிவாக பார்க்கின்ற நிலை உள்ளதால், இச்சிகிச்சை பெறுவதும் கூட ஒரு மனச் சிக்கலாக உள்ளது.
மேலும், நமது நாட்டில், மனநல ஆலோசனைகள் வழங்கவும், மன நல சிகிச்சை அளிப்பதற்கும் போதிய மருத்துவர்கள் இல்லை என்பதும் பெரும் கவலைக்குறிய ஒன்றாகும்.