Tuesday, December 7, 2010

கையால் மலம் அள்ளும் தொழில் : நீதி மன்ற அவமதிப்பு வழக்கு

நாகரிக சமூகம் என்றும், அறிவியல் முன்னேற்றம் என்றும், வல்லரசு என்று மார்தட்டினாலும், இந்தியச் சமூகம் இன்றும் இந்துத்துவ அடிப்படையில் மனிதர்களை நடத்துகின்றது என்பதையும், அரசுகளும் அதன்படிதான் செயல்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்தவைகள்தான்.  இப்படியான ஒன்றுதான்   மனித மலத்தை மனிதர்களையே கையால் அள்ளளும் கொடுமை. இந்த இழிதொழில்களிலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே ஈடுபடுத்தும் வன்கொடுமையும் நிகழ்கின்றது.  இந்தநிலையில்தான் சென்னையில் பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் விவகாரத்தை பாடம் இதழின் ஆசிரியர் நாராயணன் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அசோக் வர்தன் ஷெட்டி, ராஜேஷ் லக்கானி ஆகியோர் திங்கள்கிழமை சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆஜரானார்கள்.
மேற்படி நாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியாக நிறைவேற்றவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நீதிமன்றம் கடந்த 24-ம் தேதி பிறப்பித்த உத்தரவுப்படி, நகராட்சி நிர்வாகத்தின் செயலர் அசோக் வரதன் ஷெட்டி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராயினர்.
விசாரணையின்போது மனுதாரர் நாராயணன் கூறியதாவது: கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாணை இயற்றப்பட்டுள்ளது. அந்த அரசாணையால் பலனில்லை.
தமிழகத்தில் திடக் கழிவு மேலாண்மை கொள்கையோ, சுகாதாரக் கொள்கையோ இல்லை. சுகாதாரக் கொள்கையை உருவாக்குவதற்கான திட்ட வரைவு தொடக்க நிலையிலேயே உள்ளது என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தன

No comments: