Wednesday, August 4, 2010

கவிப்பேரரசு(!) வைரமுத்துவின் தம்பி பாண்டியன் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு







கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் கடலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவை விசாரனைக்கு ஏற்ற நீதிமன்றம் வழக்கு பதிய உத்திரவிட்டுள்ளது.

ராஜேந்திரன் தனது மனுவில், ‘‘நத்தமேடு கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் உள்ளது. என் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதபிள்ளை என்பவர் அந்த இடத்தை வாங்கிவிட்டதக போலி பத்திரத்தை காட்டினார். இது தொடர்பாக பண்ருட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் அந்த இடம் எனக்குச் சொந்தமானது என்றும், காசிநாதன்பிள்ளை கட்டிய வீட்டை அப்புறப்படுத்தவேண்டும் என 24-04-2010 ல் தீர்ப்பு அளித்தது.
காசிநாத பிள்ளை வீட்டை அப்புறப்படுத்த மறுத்ததோடு அங்கிருந்த மரங்களை வெட்டினார். இது தொடர்பாக நெல்லிக்குப்பம் ஆய்வாளர் பாண்டியனிடம் புகார் மனு அளித்தேன். ஆனால், அவர் என் புகார் மனு மீது எந்தவித விசாரனையும் நடத்தாமல் நான் கொடுத்த புகார் மனுக்களை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரனைக்கு ஏற்று, வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகநாதன், தனது தீர்ப்பில், ராஜேந்திரனின் புகாரை ஏற்க மறுத்து, வாபஸ் பெற வற்புறுத்திய ஆய்வாளர் பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட 17 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்திரவிட்டுள்ளார்.

ஆய்வாளர் பாண்டியன், கவிப்பேரரசு(?) வைரமுத்துவின் உடன்பிறந்த தம்பி என்பதுதான் இங்கு மிக முக்கியமான செய்தியாகும்.

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்போ இந்த உத்தரவு குப்பையுள் போக "கருணை" பொழிவார் என நம்புவோம்.

Anonymous said...

திட்ட வேண்டுமானால் வேறு ஏதாவது காரணங்கள் கண்டு பிடியுங்கள்.அவர் என்ன அவர் தம்பியிடம் இப்படி நடந்துகொள்ளச் சொன்னாரா?