Saturday, January 5, 2008

தாழ்த்தப்பட்டவர் சமைக்க வேண்டாம்

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி வட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், முத்துசாமியாபுரம், காலனித்தெருவில் ஆறுமுகத்தாய் என்பவர் சுபா, அமுதா என்கிற இரு பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கணவர் வெள்ளைப்பாண்டி சில வருடங்களுக்கு இறந்துவிட்டார். விதவை என்கிற கருணை அடிப்படையில், கடந்த 2007 செப்படம்பர் 7 ஆம் தேதியன்று நெல்லை மாவட்ட ஆட்சியரால் ந.க.ங 9/8744/2007 நாள் 09.07.07 என்ற உத்தரவின்படி, முத்துசாமியாபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் யாதவா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஆறுமுகத்தாய் பணியில் சேரச்சென்றபோது, பள்ளி நிர்வாகி இராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர், மற்றும் சத்துனவு அமைப்பாளர் இராமதாசு, மற்றும் பள்ளி நிர்வாகியின் உறவினர்களும், நண்பர்களுமான எல்.ஐ.சி முகவர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் இராஜேந்திரன் ஆகியோர் மேற்படி ஆறுமுகத்தாயின் பணி நியமன ஆணையை வாங்க மறுத்துள்ளார்கள். ‘‘தாழ்த்தப்பட்ட சாதியான நீ சமைச்சி எங்க பிள்ளைகள் சாப்பிட வேண்டாம். உனக்கு இங்க வேலை இல்லை.’’ என்று கூறி அவரை பணியில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்கள். இதனிடையே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மேற்படி ஆறுமுகத்தாயை பணி நீக்கம் செய்யவேண்டும் என மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி கே.சந்துரு, பள்ளி நிர்வாகியை கண்டித்து, பணி நியமன ஆணையை ரத்து செய்ய மறுத்து, உடனடியாக பணியில் சேர்க்குமாறு உத்தரவிட்டார். ஆனாலும் அதன்பின்பும் பள்ளி நிர்வாகத்தினர் அவரை பணியில் சேர்க்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக உயரதிகாரிகள் அனைவருக்கும் மேற்படி ஆறுமுகதாய் புகார் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 28.12.07 அன்று மேற்படி பள்ளி நிர்வாகத்தினர் மேற்படி ஆறுமுகத்தாயை அழைத்து, ‘‘தினமும் பள்ளிக்கு வந்து, பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு ஓரமாக உட்கர்ந்திரு. நீ சமைக்க வேண்டாம். யாரும் வந்தால் எதுவும் சொல்லக்கூடாது’’ என்று கூறி பதிவேடுகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள். அதன்பின்பு, மேற்படி சத்துணவு அமைப்பாளர் தினமும் ஆறுமுகத்தாயின் வீட்டிற்குச்சென்று பதிவேட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டு ஆறுமுகத்தாயை வேலைக்கு செல்லவிடாமல் தடுத்து வருகிறார்.

மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவுக்குப் பின்பும், தாழ்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆறுமுகத்தாய் என்பவரை வேலையில் சேர்க்க மறுத்துவருபவர்கள் மீது இதுவரை அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

1.உயர்நீதிமன்ற உத்திரவை நடைமுறைபடுத்தாத பள்ளி நிர்வாகத்தினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து சமூக அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் திட்டமிடுகின்றன.

2.ஆறுமுகத்தாய் அவர்கள் உடனடியாக பணியில் சேர்க்கப்பட்டு, 5 மாத ஊதியமும் வழங்கப்படவேண்டும்.

3.அரசு ஆணை மற்றும் நீதி மன்ற உத்திரவுகளை பின்பற்ற மறுக்கும் யாதவா தொடக்கப்பள்ளியின் அங்கிகாரத்தை ரத்து செய்து, அரசு வழங்கி வரும் உதவித் தொகைகள் உடனே நிறுத்தப்படவேண்டும்.

4 comments:

G.Ragavan said...

அடப்பாவி மனிதர்களா....சகமனிதன் சமைச்சிச் சாப்பிடக் கூட முடியாதாக்கும். வெளியில கடையில திங்குறவன் சமைக்கிறவன் கொலங் கோத்திரந் தெரிஞ்சிதான் திங்குறானுகளோ...இவனுகளையெல்லாம் வன்கொடுமைச் சட்டத்துல அடைக்கனும்.

Anonymous said...

I understand the school management is from a caste Konar. This caste itself is a very low caste.They are also called Eedaiyarkal, a sarcastic remark for this unclean shabbily dressed ugly looking people.Only consolation for this caste is that the Hindus believe that Lord Krishna has some connection with this caste. Whatever it is, its really painful that a low caste is troubling a lower caste.
Palavesa thevar, Singapore

Mangai said...

கண்டிக்கத் தக்கது. இதற்கு துப்பட்டா, மும்பை சமாச்சாரங்கள் மாதிரி பரபரப்பு கிடைத்ததா?
அடிப்படை பிரச்சனைகளை பார்க்கவோ அதற்கு குரல் கொடுக்கவோ பத்திரிக்கைகள் எந்த அளவு பங்கு ஆற்றுகிறது? ஏதோ ஒரு மூலையில் ஒரு செய்தியாக போட்டு விட்டு கவர்ச்சி விஷயங்கள் பின்னால் போய் விடும்.

அந்த பெண்ணிற்கு சீக்கிரம் உதவி கிடைக்க என் வாழ்த்துக்கள்

மாசிலா said...

மடையர்கள்.

இந்த முட்டாள்கள் இன்னும் எத்தனை காலங்கள் மாறினாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று காலெனும் முட்டாள்களாகவே இருப்பார்கள்.

இவர்கள் சவடால்கள் எல்லாம் ஏழை எளியவர்களிடம் மட்டும்தான் செல்லும். மத்தபடி, ச்சும்மா வெத்துவெட்டு ஆசாமிகளே!

இதுபோன்று படிக்கிற பிள்ளைகள்தான் நாளைக்கு பன்றிக்கறி, மாட்டுக்கறி தின்கிற வெள்ளைக்காரனுக்கு உயர் தொழில்நுட்ப கூலி வேலை செய்ய போகும். அயல் நாடுகளில் பூர்வீகம் ஏதும் தெரியாத அனைத்துலக நாட்டு மக்களுக்கு சராசரியாக மேலும் அடிமையாக கூழை கும்பிடு போட்டு வேலை செய்யும். ஏன் குப்பையும் வாரும். கக்கூஸ் கூட கழுவும். விபச்சாரம் செய்யவும் தயங்காது. பிச்சையும் எடுக்கும்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.