நானும்
என் எழுத்தும் – தீபம் எஸ்.திருமலை.
நானும்
என் எழுத்தும் என்ற தலைப்பில் தீபம் திருமலை என்பவர் இந்த இரு தொகுதியையும் தொகுத்துள்ளார்.
பல்வேறு எழுத்தாளர்கள் தங்களுடைய வாழ்க்கை குறிப்புகளையும், தங்களின் படைப்புகளையும்,
தாங்கள் எப்படி எழுத்தாளராக மாறினோம் என்பதைக்
குறித்து சில பக்களில் ழுதியுள்ளனர்.
முதல்
தொகுதியில் இளையவன், கவிஞர் குருசாமி, கவிஞர் ஜெயபாஸ்கரன், நெல்லை சு.முத்து, கடலூர் சுந்தரமூர்த்தி மற்றும்
காவலன் உள்ளிட்ட 14 பேரின் வாழ்க்கைக் குறிப்புகள் உள்ளது.
இரண்டாம்
தொகுதியில் கவிஞர் நா.வேந்தன், ராமசாமி, பெரணமல்லூர் சேகரன், வான்முகில் பாலதிரிபுரசுந்தரி,
கவிஞர் சுப்பு ஆறுமுகம், அய்யாசாமி, மணிவாசகம், பாவலர் திரு உள்ளிட்ட 25 பேர் தங்கள்
பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியுள்ளனர்.
படித்து
முடித்ததும் சில விஷயங்கள் மனதில் தோன்றியது.
முதலில் நம்முடைய வாழ்க்கைக் குறிப்புகளை இதுபோன்ற எழுதிப் பார்க்கலாம் என்ற ஆர்வத்தைத்
தூண்டுகின்றது. அது மட்டுமில்லாமல் நம்முடைய பகுதியில் உள்ளவர்கள் குறித்தும், நமக்குத்
தெரிந்தவர்களிடமும் இதுபோன்ற வாழ்க்கைக் குறிப்புகளை கேட்டு எழுதி வாங்கித் தொகுக்கலாம்
என்று தோன்றியது. இதுபோன்ற பதிவுகள் மிகவும்
அவசியமான ஒன்றாக உள்ளது. சில நேரங்களில் நல்ல கதை மற்றும் கவிதைகளை படித்துப் பேசுவோம்.
ஆனால் அதனை எழுதியவர்கள் குறித்த குறிப்புகள்
எதுவுமே கிடைக்காது. நூலாக்கத்தில், வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
09.10.2019
No comments:
Post a Comment