குழந்தைக் கல்வி – மரியா மாண்டிசோரி
சமுதாயத்தில் குழந்தையின் பிரச்சனை
கடந்த சில வருடங்களாக குழந்தைகளுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நிலை நம் சமுதாயத்தில் உருவாகிக்கொண்டிருக்கின்றது.
சிறு குழந்தைகள் இறப்பதற்கு சுகாதாரச் சீரழிவே காரணம் என்று அறிவியல் மூலம் தெளிவானது. எனவே இறப்பினைத் தடுக்க அறிவியில் தலையிட்டது.
பள்ளிகள் அளவுக்கதிகமான நேரம் பணி புரிகின்றன, அடிமைபடுத்தின என்று சுகாதாரம் குற்றம் சாட்டியது.
பள்ளிப்பருவம் முடியும்போது குழந்தைப் பருவம்
முடிவடையும்.
குழந்தை என்பவன் யார்? வயது
வந்தவர்களின் முக்கிய அலுவல்களுக்குக் குறுக்கே வருபவன். வெகு அவசரமான அத்தியாவசிய செயல்களுக்குக் குறுக்கே வருபவன். பெரியவர்களுக்கு
மத்தியின் வாழும் குழதையின் நிலைமை இதுதான். அவன் எல்லோருக்கும் தொந்திரவு செய்பவன். தனக்கு ஏதோ வேண்டுமென்று கேட்பவன்.
விரட்டியடிக்கப்படுவதற்காக உள்ளே நுழைபவன்.
குழந்தைகளுக்கான மனித உரிமைகள் இல்லை.
ஒதுக்கப்பட்ட பிரதேசங்கள் இல்லை. நாடுகடத்தப்பட்ட ஒருவனைப் போல, யாருடைய வணக்கத்தையும் பெறாதவனாக வாழ்பவன்.
குழந்தையை எப்படி வேண்டுமானாலும்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருத்து எல்லோரிடமும் உலவுகின்றது. வயது வந்தவர்கள் தங்களுக்கு குழந்தைகள் மீது அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக உணருகிறார்கள்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தைகளின் வாழ்க்கை புதிய பரிமானத்தில் பார்க்கப்படுகிறது. குழந்தைகளுடன்
மிருதுவாக பரிமாறுதல், பொறுமையாக இருத்தல் முதலிய கருத்துக்கள் உருவானது. அது குழந்தைகளின் வீடுகளிலும் பழக்கத்திற்கு வந்தது.
அறிவியல் துறை முன்னேற்றம் காரணமாக நாம் கண்பதைத் தவிர ஒரு புதிய கருத்து உதயமாகியுள்ளது.
குழந்தையின் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. அவனது நிலைமை உயர்ந்துவிட்டது. அவனுக்கு முக்கியத்துவம் வந்துள்ளது. மனித இனத்தின் சமூக வாழ்க்கையிலும் அவனுக்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டது.
சூட்சும காலகட்டங்கள்
சூட்சும காலகட்டங்கள் என்பதை முதன் முதலாக பூச்சிகளில் கண்டுபிடித்தவர் டிவ்ரீஸ். அவற்றில் வெகு கச்சிதமாக தெரிந்தது. ஏனெனில் ஒவ்வொரு கட்டத்திலும் அவைகள் உருமாறின. முட்டையை தானே
உடைத்து, வெளியாகி, நகர்ந்து, பறந்து, ஊர்ந்து சென்று உணவு தேடி, உண்டு, இருப்பிடம் தேடி உருமாறும். இந்த ஒவ்வொரு கட்டத்தையும் அதுவே தன்னைத்தானே சமாளித்து உருவாகின்றது. இது இயற்கை வழங்கியுள்ள கொடை. இதுதான் குழந்தைக்கும் பொருந்தும். இந்த சூட்சும காலகட்டத்தில் வஞ்சிக்கப்பட்டால் அவனுள் இருக்கும் தூண்டுதல்களுக்கிணங்க செயல்பட இயலாமல் இயற்கையான மேம்பாட்டை அடைய முடியாமல் முழுமையாக இழந்துவிடுகிறான்.
குழந்தைகள் தன் மனவளர்ச்சியின் அங்கமாக சாதிப்பதை நாம் சகஜமாக ஒருவித வியப்பும் இன்றி காண்கிறோம். ஏன்? இவை, நமக்கு பார்த்துப் பார்த்துப் பழகிப் போனவை. எங்கிருந்தோ வந்த இந்தக் குழந்தை இந்தக் குழப்பம் மிகுந்த உலகில் வாழக்கற்றுக்கொள்கிறான்.
பொருள்களிலுள்ள வித்தியாசத்தை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள். மொழிகளிலுள்ள சிறு சிறு வேறு பாடுகளை தன்னுள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறான். பாடம் இல்லை. அவனுள் எந்தப் பாதிப்பும் இல்லை. வெகு ஆனந்தமாக, அயற்சி எதுவுமின்றி எப்படி கற்கிறான்?
குழந்தை அவனுள் உள்ள நுண்ணுணர்வின் பயனாக தன்னைச் சுற்றியுள்ளை தொடர்பு ஏற்படுத்திக்கொள்கிறான்.
குழந்தைப் பருவமானது ஒரு வெற்றியிலிருந்து மற்றொரு வெற்றிக்கு தாவிக்கொண்டேயிருக்கிறது.
கோபம், குறும்புத்தனம் வெறித்தனம் இவைகளும் உண்டாகும். இதற்கு காரனம் என்னவென்றால் அவனுள் உணரும் தேவைகள் குழந்தையில் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது. அதிலும் எதிர்ப்பு இருந்தால் நிலைமை இன்னும் இறுக்கமாகிவிடும். எதிர்ப்பை சந்திக்கும் உள்ளமானது தற்காப்பிற்காகவும், தன் தேவையை விண்ணப்பித்துக்கொள்ளவும் இந்த செய்கைகள் செய்யப்படுகின்றன.
மனித வாழ்க்கையானது இடரின்றி அமைதியாக முன்னேறிக்கொண்டிருக்குமானல் யாரும் குழந்தையின் படைப்பாற்றலின் வெளித்தோற்றத்தைக் கவனிப்பதில்லை.
குழந்தைக்குள் ஓர் இணையும் மனோதிடம் இருக்கிறது என்பதை நாம் கவனிப்பதே இல்லை.
குழந்தை ஆனந்தமய வாழ்க்கயிலிருந்து வெளித்தள்ளப்பட்டிருக்கிறான்.
இரண்டு வயது வரையிலான சூட்சும காலகட்டங்களில் முக்கியமானதாகவும் விளங்காபுதிராகவும் இருபது என்னவெனில் குழந்தை தன்னியல்பாக ஒழுங்குமுறையை பின்பற்றுவதுதான்.
ஏதாவது ஒரு பொருள் அது இருக்கவேண்டிய இடத்தில் இல்லையானால் அதனைக் கவனித்து மீண்டும் சரியான இடத்தில் வைப்பது இரண்டு வயது குழந்தைதான்.
குழந்தைகள் பொருள்களை அதனதன் இடத்தில் காண்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி.
குழந்தைகளைப் பொறுத்த மட்டில் ஒளிந்துகொள்வது என்பது பொருள்களை மறைத்து வைத்து பின்னர் அவற்றைக் கண்டுபிடிப்பது. அதாவது பொருள்கள் கண் மறைவாக இருக்கும்போது அவைகளை வெளிக்கொணரவேண்டும்.
குழந்தையிடன் இந்த ஒழுங்கு என்னும் உணர்வை இயற்கை எவ்வாறு பதித்துவிடுகிறது என்பதை நாம் உணர முடியும்.
குழந்தைக்கு ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்தி அறியும் திறன் மட்டுமல்ல சுற்றுப்புறத்தில் உள்ள பொருள்களில் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினையும் கண்டுகொள்ள முடிகிறது.
குழந்தைக்கு அறிவுத்திறன் வருவது வெறும் வெட்ட வெளியிலிருந்து அல்ல. அது குழந்தையின் கூருணர்வுத் திறன் உள்ள காலத்தில் மனதின் அடித்தளத்தில் உருவாகப்படுகிறது.
உள்ளிருக்கும் ஒழுங்கு
முறை :
முதல் அடியை எடுத்து வைப்பது மிகுந்த சிரமம்மானது. வெறுமையிலிருந்து ஏதாவதொன்றை தொடங்குவதென்பது யார் செய்தது? அந்தக் குழந்தைதான். வாழ்க்கையின் உற்பத்தி நிலை மட்டும் அதன் காரணமாக இருப்பதால் அவன் பணி செய்யும் பொருட்டு அதனைச் செய்கிறான். அது இயற்கையின் திட்டத்தில் உள்ளது. நாமோ உணருவதில்லை. நினைவிலிருத்திக்கொள்வதில்லை.
அறிவுத் திறன்
:
ஐந்து வயது வறை குழந்தை ஒரு நீண்ட கூறுணர்வு கால கட்டத்தில் உள்ளான். அச்சமயம் அவனுக்கு ஓரு அபூர்வமான திறனுள்ளது. அதன் மூலம் வெளியுலகத்தில் உள்ள உருவங்களையும் உள்வாங்கிக்கொள்கிறான். அவன் வெளியுலகத்திலுள்ள பொருள்களின் வெளித்தோற்றத்தை தன் புலன்களின் மூலம் திறமையாக உள்வாங்கிக்கொள்ளும்படி பார்வையாளன் நாம் கவனிக்கவேண்டும். கண்ணாடி போல வாங்கிக்கொண்டு மீண்டும் பிரதிபலிப்பவன் அல்ல. பார்வையிடுவதற்கு உள்ளிருந்து ஏதோ ஒரு பிரத்தியேக விருப்பம் அல்லது ருசியால் உந்தப்படுகிறான். ஆகையால் ஒரு பார்வையாளனாக சில உருவங்களை மட்டுமே உள்வாங்கிக்கொள்கிறான். அனுபவைல்லாதவனாகையால் குழந்தை இவற்றை செய்கைகள் மூலமாக செய்கிறான்.
முதல் வருடத்திலேயே குழந்தை சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களை அடையாளம் கண்டுகொள்வான் என்பது பலரால் பலமுறை நிருப்பீக்கப்பட்டுள்ளது. தன்னை ஈர்க்காத பல உருவங்கள் மீது அவனுக்கு கவனம் இருக்கது.
இரண்டாம் வயதுக்கு வரும்போது அவனுக்கு, முந்தைய கூறுணர்வு காலகட்டத்தில் இருந்தது போல கண்களை பறிக்கும் வஸ்துகளிலோ பளிச்சிடும் வர்ணங்களாலோ ஈர்க்கப்படுவதில்லை. (சத்தம், வெளிச்சம், வண்ணம்)
மிகச்சிறிய பொருளோ பொருள்களெ அவனை ஈர்க்கின்றன. பெரும்பாலும் அவற்றை நாம் கவனிப்பதே இல்லை. காணாத பொருள்களே அவன் கவனத்தை கவரும்.
சின்னஞ்சிறு பொருள்களையும் கவனிக்கும் குழந்தைகள் வயது வந்த நம்மைப் பற்றி என்ன எண்ணுவார்கள்? தேவையானவற்றை மட்டும் நோக்கும் வயது வந்தவர்களாகிய நம்மைப் பற்றி அவர்கள் என்ன எண்ணுவார்கள்? அவர்கள் எண்ணத்தில் நாம் தாழ்ந்தவரல்ல. பொருள்களை சரியான கோணத்தில் பார்க்கத் தெரியாத மூடர்கள் என்று அவர்கள் கணிப்பதில்லை. கவனக்குறைவானவர் அல்லது சரியாக கவனிக்காதவர் என்று நினைக்கக்கூடும்.
தடம் புரண்ட
வளர்ச்சி :
குழந்தை தன் எதிர்ப்பை வெளியிடுவதை குறும்பு செய்வதன் மூலமாகவும் நிராகரிப்பதன் மூலமாகவும் வெளிபடுத்தும்.
தன்னிச்சையாக செயல்படுவது என்பது உலகில் வாழும் எல்லாக் குழந்தைகளிடமும் காணப்படுகிறது என்பது அதியசயத்தக்கது. ஆனால் அது எந்தவொரு விளக்கத்தின் அடிப்படையிலும் ஏற்படுவதல்ல.
குழந்தைகள் எல்லாவற்றையும் ,குறிப்பாக பெரியவர்களின் பொருள்களைத் தொட்டுப்பார்க்க ஆசைபடும். அந்த ஆர்வத்தை எந்த விதத்திலும் தடுக்க முடிவதில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்று அவனுக்குத் தேவையற்ற பொருள்களையே விரும்புவான். அவனுக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பவற்றை எடுக்க மாட்டான். நாம் வெறுக்கக்கூடிய இச்செயலுக்கு ஒரு குறிப்பிட்ட பலனுண்டு. அது குழந்தையின் வாழ்க்கையுடன் தொடர்புள்ளது. பறவைகளுக்கு பறப்பது போலவும், மீன்களுக்கு நீந்துவது போலவும் குழந்தைக்கு இந்தப் பணிகளைச் செய்வது இன்றியமையாதது. உள்ளிருந்து வரும் இந்த் உந்துதலை எதுவும் தடுக்க இயலாது.
இவைகள் எல்லாம், உண்மையில் குழந்தை தன் ஆளுமையின் ஒருங்கிணைப்புக்காக பாடுபடுகிறான். அதற்கு உதவி செய்வது அவனுடைய அங்க அசைவுகள். சுற்றுச் சூழலில் இருக்கும் பொருள்களுடன் அவன் பணி செய்யும்போது அவன் முன்னேறுகிறான். அது போல சுற்றுச்சூழலில் இயங்குவதற்கு அவனுக்கு அனுமதி கிடைக்கவில்லையானால் மூன்றாம் வயதிலிருந்து அவனது மன வளர்ச்சி தடம் புரண்டு போக வாய்ப்புள்ளது.
தினசரி வாழ்க்கையில் முரண்பாடுகல், வயது வந்தவர்கள் அவனது நிலையை புரிந்துகொள்ளாதது என்பவை இன்னும் அதிக அளவில் விலகிப்போகச் செய்கிறது.
நாற்காலியை ரயில் பெட்டியாகவும், ஒரு குச்சியை விமானமாகவும்.. குழந்தையின் அறிவானது உண்மை நிலையை விட்டு கற்பனை உலகில் பறந்து திரியும்.
பிறரைச் சார்ந்தே இருக்கும் குழந்தை தன் சுதந்திரத்தை அடையவில்லை.
ஆளுமையின் ஒருங்கிணப்பு நிகழும் சமயத்தில் குழந்தைக்குத் தடங்கல்கள் ஏற்படுமானால் அவன் வளர்ச்சி தடம் புரண்டுவிடும். அவ்வாறு ஆகும்போது அது சில எதிர்மறை வெளிப்பாடுகளை ஏற்படுத்திவிடும். இவற்றில் பலரகங்கள் உண்டு, பொருள்களை தன்னுடைமையாக்கிக் கொள்வது, பொருள்களை நாசம் செய்வது. பொய் சொல்வது. பிறரை இம்சிப்பது போன்றவை. கெட்ட பையன் என்று சொல்வதற்கான அறிகுறிகள் எல்லாமிருக்கும். வேறு பலவும் உண்டு ஆனால் நம்மால் கவனிக்கப் படுவதில்லை, ஏன், குழந்தைகளின் சுபாவம் என்றே கணிக்கப்பட்டுவிடுகின்றன.
சோம்பேறித்தனம் கீழ்படியாமை , பயங்கொள்ளித்தனம் சலிப்பு , தயக்கம் முதலியவை இதிலடக்கம். இன்னும் சில உண்டு அவை நல்ல குணங்கள் போல போர்வையணித்திருக்கும். ஆகையால் அவை சிறந்த குணங்களாகவே கருதப்பட்டு விடுகின்றன.
மிகுந்த கற்பனைத்திறன்,
அதிக பேச்சுத்திறன், பிறரிடம் நெருக்கமாக இணைந்து கொள்வது, கதைகளைக் கேட்பது முதலியவை. இவற்றைப் பற்றி பெற்றோர்கள் பெருமிதம் கொள்வர். சரியான வளர்ச்சி தடைப்படும்போது கூட இவையெல்லாம் ஏற்படக்கூடும். இந்தக் குறைபாடுகளை எல்லா குழந்தைகளிலும் காணலாம் . சிலருக்கு அதிகமாகவிருக்கும். சிலருக்குக் குறைவாகவிருக்கும். மிகவும் பயந்த சுபாவத்தின் பேரில் ஏற்படலாம். அல்லது தன்னுறுதி அதிகமுள்ளவருக்கும் உண்டாகலாம். ஆனால் இரண்டு தனிப்பண்புகளும் இயல்பு நிலைக்கு அப்பாற்பட்டவை. இவை குழந்தையுடைய சாதாரண செயல்பாட்டினை ஊக்குவிப்பதற்குத் தேவையானவை இச்செயல்பாட்டின் காரணமாக அவனுடைய தவறான குணங்கள் மறைந்து ஒரு புதிய குழந்தை உருவாவதற்கு ஏதுவாகிறது.
குழந்தைக்குள் வழிநடத்தும் திறனொன்று உள்ளது. மிகச் சிறிய குழந்தையாக இருந்தாலும் சில குறிப்பிட்ட செயல்களைச் செய்ய உந்தித் தள்ளுகிறது.
குழந்தையின் கைகளை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குத் தக்கவாறு சூழ்நிலையையும் பொருள்களையும் சித்தப்படுத்தவேண்டும் அல்லது சுற்றுச் சூழலையே குழந்தைக்காக தயார் செய்யவேண்டும்.
குழந்தைகளின் அறையில் அவனை இருத்தி, அதில் விளையாட்டுப் பொருட்களை நிரப்புவதால் அவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுவதில்லை.
குறும்புக்காரக் குழந்தை :
குழந்தையின் செயல்பாடுகளுக்கானத் திறன் நாம் அறியாத ஒன்றாகியுள்ளது. சுற்றுச்சூழலை எந்தவித கருவிகளும் இல்லாமல் ஆராய்கிறான்.
ஆனால் கலைத்துப் போடவும் சீர்குலைக்கவும் காரணங்களுண்டு. வயது வந்தவருக்கு இது பொறுமையற்ற முட்டாள் தனமான சீர்கேடான திறன் அதனால் அதை நிறுத்திவிடவேண்டும் எனத்தோன்றுகிறது . அதனால் அவற்றைத் திருத்துவதற்கான பல முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் பயனில்லை. குழந்தையை கட்டுப்படுத்த இயலுவதில்லை. ஆதலால் அவனை ஒரு குற்றவாளியாகக் கருதுகிறார்கள், அவனை "குறும்புக்காரன்"
என்பர். ஆங்கிலம் போன்ற மொழிகளில் குறும்பு என்பதற்கும் தவறு என்பதற்கும் வேறுபாடு உண்டு.
குழந்தைகள் செய்யும் தவறான செய்கைகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு சொற்களுண்டு.
மனிதன் கெட்டவன் ஆனால் குழந்தை குறும்புக்காரன் மட்டுமே. சில மொழிகளில் இவ்விரண்டு பொருளுக்கும் ஒரே சொல்லை உபயோகிப்பர். ஆனால் அப்படியிருந்தாலும் பொருளில் வேறுபாடிருக்கும். குறும்பு என்பது கெட்டதாக கூறுவதல்ல. முரண் என்பதைக் குறிக்க உபயோகிப்பது. குழந்தை வளர வளர அது மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் உணரவேண்டியது என்னவென்றால் அது அவ்வப்போது இயற்கையினால் உண்டாகும் ஒரு சக்தியாகும். சூட்சும கால கட்டங்களைச் சேர்ந்ததாவிருக்கும். ஆளுமையை உருப்பெறச் செய்யத் தேவையான சிறப்புப் பண்புகள் உண்டாவதற்கு உதவியாகவிருக்கும். சொல்லப்போனால் குறும்புத்தனம் எல்லா தேசங்களிலும் . எல்லா மனித இனங்களிலும் காணப்படுவதுதான்.
கட்டுப்பாடற்ற ஒழுங்கற்ற குறிக்கோளற்ற அசைவுகள் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. அத்தைகிய செயல்பாடு கல்வி வளர்ச்சிக்கு ஏற்றவையல்ல. ஆளுமையை உருவாக்குதற்கும் ஏற்றவை அல்ல.
குழந்தைகள் எதிரிப்புகளை நல்ல முறையில் தயங்காமல் சந்திக்கின்றன. நம் கடமை அவன் என்ன செய்யவேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பது மற்றும் அவன் எதனை உருவாக்கவேண்டும் என்று கண்டறிய வேண்டும். அவனது உள்ளுணர்வுகள் காட்டும் வழியை பின்பற்றத் தேவையானவற்றை அளிக்க வேண்டும். இதனைச் செய்வோமானால் உள்ளே அமைதி உண்டாவதை காண்போம். குழந்தை மகிழ்ச்சியோடு ஒழுங்காக பணி செய்வான். பொருள்களைக் கலைத்துப்போடுவதில்லை. மாறாக தனக்கேற்ற பணியை தேர்ந்தெடுத்து ஆக்கப்பூர்வமாக பணி செய்வான்.
குழந்தைகள் செய்யும் செயல்களெல்லாம் வெளிப்படையாக இருப்பதால் நாம் எளிதில் அவற்றின் விதிகளைக் கண்டறிய முடிகிறது. அவை மீண்டும் மீண்டும் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில உண்மைகளைக் கண்டுகொள்ளலாம்.
குழந்தைகளின் பண்புகளை ஆராய முற்படும்போது வெறும் எண்ணங்களும் அபிப்ராயங்களும் மட்டும் உதவாது. வெறும் எழுத்தறிவை மட்டும் நோக்கி முழுகிவிடக்கூடாது. மனித இயல்புகளிஅ நல்லவை கெட்டவை என பாகுபடுத்தக்கூடாது. நடைமுறையில் செயல்படுத்த வேண்டியதுதான் முக்கியம். இப்போது ஒரு குறும்புக்கார குழந்தையின் செய்கைகளை உண்மையில் ஆராய்வோமானால் அவை முக்கியமாக தற்காப்புக்காக செய்யப்படுபவை என்பதைக் காண்கிறோம்.
குழந்தை தன்னை தயார்படுத்திக்கொள்ளும் முயற்சியானது ஒவ்வொரு வளர்ச்சி
நிலையிலும் காணமுடியும். மழலைப்
பேச்சினை, மிகவும் பயனுள்ளது என நீண்டகாலதிற்கு கண்டிப்பாக ரசிக்கமுடியாது. ஆனால் பேச்சை உருவாக்குவதற்கான முன்னேற்பாடான பயிற்சியாக மழலைப் பேச்சைப் பார்க்கவேண்டும்.
வயது வந்தவர்களுக்கும் குழந்தைக்கும் இடையேயுள்ள போராட்டத்தை தீர்ப்பது எப்படி ? - பெரியவர்கள் சரியான முறையின் குழந்தையை அறிந்துகொள்ளாதபடியால அவனுடய வளர்ச்சி பலவிதத்தில் தடைபடுகிறது.
குழந்தை என்பவன் யார் என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் முக்கிய செய்கைகள் மூலம்தான் அவர்களுக்கு ஆளுமை உருவாகிறது என்பதை நாம் உணரவேண்டும். அதில்தான் அவனது தனித்தன்மை உருப்பெறுகிறது. அவை அவனுக்கு ஒரு வடிவவைப்பைக் கொடுப்பவை.
குழந்தையின் கீழ்படியாமை என்பது நம் எல்லோருக்கும் விளங்கும். செய்யாதே என்று கூறுவதை குழந்தை எதிர்ப்பான்.
குழந்தையின் அத்தியாவசியத் தேவைகள் என்னவென்று உணருவதற்கு காலதாமதம் ஆகிவிடுகிறது. உணர்ந்தபின் அவற்றுக்கு தேவையானதை அளிக்க முற்படுகிறோம்.
மூன்று வயது குழந்தைக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாம் நினைப்பதற்கு மாறாக இருந்தாலும் அழகிய தெளிவான முறையில் நாம் செய்யவேண்டியது என்ன என்று நமக்குத் உகந்த மொழியில் கூறுகிறானே.. “நானே
செய்வதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்” சரியான சொற்கள். அவன் செய்ய வேண்டியதை நாம் செய்து கொடுப்பதில்லை. அவனுடைய அளவு, திறன் மற்றும் அறிவுக்கு ஏற்றவாறு அவனுக்குத் தேவையானதை உருவாக்கிக்கொடுக்கவேண்டும்.
குழந்தைக்குள் இருக்கும் திறனை விருத்தி செய்து கொள்வதற்கு அவனுக்கு செயல்பாடுகள் தேவை.
No comments:
Post a Comment