Sunday, April 19, 2020

முதல் நாளாக 184 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பும் வருமானமும் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கும் பழங்குடி இருளர் மக்களுக்கு பலரும் தாராள மனப்பான்மையுடன் உணவுப் பொருட்களை நிவாரணமாக அளித்து உதவி வருகின்றனர்.
இந்நிலையில் சிலகிராமங்களில் இருந்து இதுவரை தங்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து "பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்" சார்பில் நிவாரண உதவி செய்யலாம் எனத்திட்டமிட்டோம். இதுவரை நிவாரண உதவிகள் கிடைக்காத மக்களுக்கு அளிப்பது என்றும் முடிவெடுத்தோம். நமது சங்கத்தின் தொடர்பில் இல்லாத மக்களுக்கும் உதவி செய்வதுதான் நமது கடமை எனவும் செயல்பட்டுவருகிறோம். நிவாரண உதவிக்கான கோரிகையை 15-ஆம் தேதி முன்வைத்தோம். நண்பர்கள் பலரும் நன்கொடை அளித்து உதவி வருகின்றனர்.
முதல் கட்டமாக இன்று திண்டிவனம் வட்டத்தில் உள்ள 6 கிராமங்களில் 184 குடும்பங்களுக்கு வழங்கினோம்.

சலவாதி 35 குடும்பங்கள்,
வைரபுரம் 44 குடும்பங்கள்,
தாதாபுரம் 28 குடும்பங்கள்,
புலியனூர் 24 குடும்பங்கள்,
பெரப்பேரி – 16,
பட்டணம் சத்தியாநகர் 37 குடும்பங்கள் என மொத்தம் 184 குடும்பங்களுக்கு
10 கிலோ அரிசி, 1 உப்பு பாக்கெட் என நிவாரண உதவி வழங்கப்பட்டது.

18.04.2020 வரை வரவு – ரூ. 2,49,032
இன்று வரை செலவு – ரூ. 53,820

இன்று வரை செலவு விவரம்.
1). அரிசி 2000 கிலோ – ரூ. 49,600
2). வண்டி வாடகை - ரூ. 800.
3). அரிசி போட பை – ரூ. 450
4). உப்பு 200 பாக்கெட் – ரூ. 1120.
5). இன்று நிவாரணம் அளிக்க டாடா ஏஸ் வாடகை – ரூ. 1850.

இன்று சொல்லியிருந்த 25 மூட்டை அரிசி (2000 கிலோ) நாளை காலை வருகிறது. வந்ததும் பைகளில் நிரப்பி, இரண்டாம் கட்டமாக நாளை சில கிராமங்களுக்கு அளிக்க உள்ளோம்.

நிவாரண உதவிகள் வழங்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும் செலுத்துகின்றோம்.
நன்றிகளுடன்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
ப.இளங்கோவன்–தலைவர், சு.ஆறுமுகம்-பொதுச்செயலாளர், மு.நாகராஜன்– பொருளாளர்.
பிரபா கல்விமணி @ கல்யாணி. ஒருங்கிணைப்பாளர்
9047222970 / 9442622970.








No comments: