Tuesday, June 2, 2020

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறுத்தப்படவேண்டும்.


• கல்வி அமைச்சர் முந்தைய அறிவிப்புகளை மாற்றியும் திருத்தியும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுகிறார். இதனால் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதுடன், நிர்வாகச் சிக்கல்களும், குளறுபடிகளும் உருவாவதுடன், ஏராளமான செலவுகள் ஏற்படுகின்றன.

• 19.05.2020 வரை 64 குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

• 24-ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 765 பேராக இருந்த நோய்த்தொற்று இன்று 1162 ஆக பேருக்கு புதிதாக ஏற்பட்டு அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

• குறிப்பாக 37 நாட்களுக்குப் பிறகு 22-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நோய்த் தொற்று உருவாகியுள்ளது. நோய்த் தொற்று எந்தச் சூழலிலு பரவும் என்பதையே இதுகாட்டுகின்றது.

• சென்னையில் மே 22 ஆம் தேதி 569 என நோய்த் தொற்று 10 நாட்களில் 50% அதிகரித்து இன்று 1000 பேரை தாண்டிவிட்டது.

• இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 11 பேர் இறந்துள்ளனர்.

• நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதை உணர்ந்தே, அதனைத் தடுக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூழ் 1 முதல் தொடடங்கிய ஊரடங்கில் கட்டுபாடுகள் தொடர்கின்றன.

• கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலும், வெப்பமும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றில் மட்டுமல்லாமல் sunstroke ஆபத்தும் உள்ளது.

• கல்வி அமைச்சரின் அறிவிப்பின்படி தேர்வு நடந்தாலும், 81 நாட்கள் (மார்ச் 25 முதல் ஜூன் 14 வரை) வீட்டிலியே இருக்கும் மாணவரை / குழந்தையை 82 ஆம் நாள் நேராக பொதுத் தேர்வு எழுதச் சொல்வது குழந்தை உரிமை மீறலாகும். 81 நாளாக வீட்டிலிருக்கும் அவர்களின் மனநிலையில் எழும் மாற்றம், குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும். பல்வேறு உளவியல் சிக்கல்களை உருவாக்கும்.

• இதனால் தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இடை நிற்றல் அதிகரிக்கும்.

• 81 நாள் இடைவெளி குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ள தடைகளைக் களையாமல் நேரடியாக 82 ஆம் நாள் தேர்வெழுதச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.

• ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் முழுவதும் முடிந்துவிட்டது. 3 திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் நோய்த் தொற்று, கடும் வெப்பம்/வெயில், வெப்பக் காற்று, 81 நாள் இடைவெளி போன்ற காரணங்களில் இப்போது தேர்வு என்கிற மதிப்பீடு தேவையா என்ற கேள்வி எழுகின்றது.

• கடந்த சில ஆண்டுகளாகவே, 10-ஆம் தேர்ச்சி விகிதம் அதிகரித்தபடியே உள்ளது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி மார்ச்சில் நடைபெற்றிருந்தால் 97% தேர்ச்சி விகிதம் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போதுள்ள பேரிடர் மற்றும் மாணவர்களுக்கு ஆண்டுக்குறிய கற்றல் கற்பித்தல் முடிந்த நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும்.

• மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு மதிப்பெண்களின் சாராசரியை மதிப்பிட்டு, அதனைக்கொண்டு மதிப்பெண் பட்டியல் வழங்கலாம். அல்லது அரையாண்டு மதிப்பெண்ணை மட்டுமே வழங்கலாம். அல்லது வல்லுநர் குழு அமைத்து, மதிப்பெண் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து ஆலோசனைகளைப் பெறலாம்.

• அனைவரும் தேர்ச்சி என அறிவித்துவிட்டு, மதிப்பெண் பட்டியலில் A, B, C என Grade எனக் குறிப்பிடலாம். பிற்காலத்தில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட எந்தவொரு சூழலிலும், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படுமெனில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மதிப்பெண் பட்டியலில், கொரோனா பேரிடர் காலம் எனக் குறிப்பிட்டு குறிப்பிட்ட % த்தையும் தெரிவித்து, இதனைக் கணக்கிலெடுத்து மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும் என, மதிப்பெண் பட்டியலில் அச்சிடலாம்.

• நோய்த்தொற்று எச்சரிக்கை காரணமாகவே, அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவில்லை, சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவில்லை, கட்சி நிர்வாகிகள் கூட்டமும் காணொலி மூலம் நடைபெறுகின்றது. இந்நிலையில் ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் மாணவர்களை பள்ளிகளில் வரவழைப்பது ஆபத்துக்குறிய ஒன்றாகும்.

• தனியார் பள்ளிகள் 11-ஆம் வகுப்பு சேர்க்கையினை முடிக்கவேண்டும் என்பதற்காகவும், கூடவே நீட், ஜே.இ.இ உள்ளிட்ட பயிற்சிக் கட்டணத்தை வசூலிக்கவும், தனியார் பள்ளிகள் அளிக்கும் அழுத்தம் காரணமாகவே, கல்வி அமைச்சர் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துதில் அவசரம் காட்டுவதுடன், பிடிவாதமாக உள்ளார் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகளையும் கவனிக்கவேண்டியுள்ளது

No comments: