21.04.2022
பத்திரிகை செய்தி
பள்ளி கழிவறை உள்ளிட்ட தூய்மைப் பணிகளில்
தலித் மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்படுவதை
தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!!
தமிழக அரசு கடந்த 2021 நவம்பர் மாதம் ”தமிழ்
மாநில குழந்தை உரிமைக் கொள்கை”யினை வெளியிட்டது. குழந்தைகளின் வாழ்நிலை, உடல் நலம்,
கல்வி, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு ஆகியவைகளை மையப்படுத்தி, குழந்தைகள் நலன் மீதான
அக்கறையுடன் வெளியிடப்பட்ட இக்கொள்கைக்கான செயல்திட்டம், அதனை நடைமுறைபடுத்துவது தொடர்பான
ஆலோசனைக் கூட்டத்தினையும் இம்மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடத்தியது. இதில் பங்கேற்று SASY சார்பில் பல்வேறு பரிந்துரைகளை
அளித்துள்ளோம். குறிப்பாக குழந்தைகளுக்கான
வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை ஆகிய
4 உரிமைகளும் இக்கொள்கையில் உள்ளடங்கியுள்ளது. இம்முயற்சிகளை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு
பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில்தான், சமீப காலமாக குழந்தைகள்,
அதுவும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்போக்கு
சமூகத்தில் பெரும் சிக்கலை உருவாக்குகின்றது.
கொரோனே தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்டிருந்த
பள்ளிகள் கடந்த மூன்று மாதங்களாக செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில், பள்ளிகளில் கழிவறை
உள்ளிட்ட தூய்மைப் பணிகளில் பள்ளியில் பயிலும் தலித் மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்படும்
நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெறுவது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றது.
· 26.03.2022 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், முள்ளம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் சுதா என்பவர்
இரு தலித் மாணவர்களை கழிவறை
சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
· 29.03.22 அன்று கோவை மாவட்டம், பேரூர் வட்டம், செம்மேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தலித் குழந்தை சுரேந்தர், பள்ளி கழிவறையில் மலம் கழித்துள்ளார். கழிவறையில் தண்ணீர் இல்லை என்று கூறி, ஆசிரியர் தங்கமாரி என்பவர், 3-ஆம் வகுப்பு படிக்கும் அக்குழந்தையை, கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
· 29.03.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவியை, கடந்த மூன்று மாதங்களாக பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் தலைமை ஆசிரியர் புஷ்பவதி ஈடுபடுத்தியுள்ளார்.
02.04.2022 அன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, கும்மனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் மூன்று மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் பணியில், அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றுமொறு ஆசிரியர் ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக, சமத்துவத்தையும், கன்னியத்தையும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாக அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அரசியல் சாசனத்தில் பிரிவு 17 ல் “தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது.. தீண்டாமையை கடைப்பிடிப்பது தண்டணைக்குறிய குற்றமாகும்” என்றும் கூறுகிறது. தீண்டாமை பாகுபாடுகளை ஒழிக்கவும், வன்கொடுமைகளைத் தடுக்கவும் மனித கழிவை மனிதரகற்றும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013, தலித் / பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச்சட்டம் 2015, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டம் 2012 போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நீதியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இதுபோன்ற சட்டங்கள் முறையாக நடைமுறைபடுத்தப்படாத காரணத்தால் குழந்தைகள் மீதான பாகுபாடுகளும், உரிமை மீறல்களும் தொடர் நிகழ்வாக நடைபெறுகின்றது
இந்நிலையில், தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் சாதிய வன்கொடுமை, தீண்டாமை பாகுபாடுகள் மற்றும் உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் தலித் – பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நீதியும், நிவாரணமும் கிடைப்பதற்கான சட்ட ரீதியான உதவிகளையும், வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் (SASY) சார்பில், மேற்கண்ட, கழிவறை சுத்தம் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக, கீழுள்ள பரிந்துரைகளை பத்திரிகைச் செய்தியாக வெளியிடுகின்றோம்.
இதனைத் தங்கள் ஊடகங்களில்
வெளியிட்டு குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்து, சமத்துவத்துடன், அவர்களுக்கான மாண்பினை
உறுதி செய்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பரிந்துரைகள்.
1. தலித்
மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்யும் பணியில் கட்டாயப்படுத்திய ஈடுபடுத்திய மேற்படி
4 பள்ளிகளில் தொடர்புடைய ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது, SC/ST வன்கொடுமை தடுப்பு
திருத்தச் சட்டம் 2015 பிரிவு 3(1) (j) மற்றும் மனித கழிவை மனிதரகற்றும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013
ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து,
தொடர்புடைய ஆசிரியர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.
2. பாதிக்கப்பட்டுள்ள
மாணவ, மாணவிகளுக்கு உரிய ஆற்றுபடுத்தல் மற்றும் உளவியல் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
3. பாதிக்கப்பட்டுள்ள
மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் இடைக்கால நிவாரணமாக ரூ 5,00,000/- வழங்கப்பட வேண்டும்.
4. அரசு
பள்ளிகளில் கழிவறையை சுத்தம் பணிகளில் தலித் குழந்தைகளே ஈடுபடுத்தப்படுத்தப்படுகின்றனர்.
இது, குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் சாதிய மற்றும் தீண்டாமை வன்கொடுமையாகும். ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமை பற்றிய போதுமான
புரிதல் இல்லை என்பதையே இதுபோன்ற தொடர் நிகழ்வ்வுகல் வெளிப்படுத்துகின்றன. எனவே, பள்ளியில்
பயிலும் அனைத்து மாணவர்களையும் சமத்துவத்துடன் நடத்தப்படுவது குறித்தும், குழந்தை உரிமைகள்
குறித்தும் பள்ளியில் உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.
5. இதுபோன்ற
கழிவறை தூய்மைப் பணி மட்டும் இல்லாமல், பள்ளி வளாகம், மைதானம், வகுப்பறை உள்ளிட்ட அனைத்துப்
பகுதிகளையும் மாணவ, மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்வது, துடைப்பம் கொண்டு பெருக்குதல்
போன்ற பணிகளும் செய்யப்படுகின்றது. இதனால் குழந்தைகள் இதுபோன்ற பாகுப்பாடுகளுக்கு ஆளாவதுடன்,
உளவியல் சிக்கல்களுக்கும், சக மாணவர்களால் இழிவுக்கும் ஆளாக நேரிகின்றது. இவைகளைத்
தடுக்க, அரசு உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படவேண்டும்
என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
6. வரும்
23.04.2022 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு
உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கடந்த 3 மாத
காலமாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளையும்,
விளக்கக் கூட்டங்களையும் ஒவ்வொரு பள்ளி சார்ந்து கிராமங்களில் அரசு அளித்து வருகின்றது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட
உள்ள பள்ளி மேலாண்மைக் குழு, இதுபோன்று சாதியப் பாகுபாடுகளையும், குழந்தைகள் மலம் அள்ளுவதையும்,
கழிவறை சுத்தம் செய்வதையும், குழந்தைகள் மீதான நேரடி மற்றும் மனரீதியான பாதிப்புகளையும்
தடுத்து நிறுத்துவது குறித்தும் திட்டமிட வேண்டும், செயல்படுத்தவேண்டும்.
7. மேலும்,
தற்போது புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி அரசாங்கமும் இதுபோன்றவைகளில் கூடுதல்
கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக பள்ளி பாதுகாப்பு, பராமரிப்பு, தூய்மைப் பணி போன்றவற்றில்
உள்ளாட்சி அரசாங்கம் தனது பங்களிப்பனை செலுத்த
வேண்டும்.
இவன்,
V.A.Ramesh Nathan,
Director,