The Empire என்ற பெயரில் மொகலாயப் பேரரசைத் தோற்றுவித்த,
பாபர் 14 வயதில் பதவியேற்பது தொடங்கி, முதல் பானிபட் போர் முடிந்து, இந்தியாவில் மரணமடையும் வரையில் 8 தொடர்களாக Disney யில் உள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரித்துள்ளனர்.
அரசர் தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும், பிறர் அப்பதவியை அடைய செய்யும் துரோகம், பழிவாங்குதல், சதி உள்ளிட்டவைகள் எல்லாம் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அரசப்பதவிக்கு வெளியில் இருந்து வரும்போட்டிகள் ஒருப்பக்மென்றால், குடும்பத்தின் அந்தப்புரங்களிலும், பிற வாரிசுகளும் செய்யும் சதிகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏராளம். இதுவும் பதிவாகியுள்ளன.
27-ஆம் தேதி தொடங்கிய இத்
தொடரை, தடைசெய்ய வேண்டும் சிலர் கூறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தடை செய்யும் அளவிற்கு என்ன உள்ளது எனத்தெரியவில்லை.