நேற்று மதியம் முதல் கடுமையான
மன அழுத்தமும் –
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு
ஒன்றில் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தின்
மோசமான செயல்பாடுளால்.. நெருக்கடியான நிம்மதியில்லா நிலை..
இன்று நேரடியாக நீதிமன்றம் சென்று
பல்வேறு முயற்சி, நடவடிக்கைகளுக்கு பின்பு ஒரு சிறு நிம்மதியுடன் நீதிமன்றத்தைவிட்டு
வெளியேறினால்..
கொஞ்சம் நம்பமுடியாமல்.. மனதில்
உறுதிசெய்யமுடியாத செய்தியாய் தோழர் ஆஸி அவர்களின் மரணச் செய்தி…
மனிதர்களுடோடு பழகுவதில் மிகச்சிறந்த
மாமனிதன்..
யப்பா.. என்று வாஞ்சையோடு அழைத்திடும்
தோழர்..
வயது மிகக் மிகக் குறைந்தவர்களையும்
மரியாதையோடு ஏற்கும் சிறந்த பண்புகளை உடையவர்..
சட்டங்கள் எளிய மனிதர்களுக்கும்
முழுமையாய் போய் சேரவேண்டும் என்பதிலும், சட்டத்தின் முழு பலனும் பயனும் எல்லோருக்கும்
கிடைக்கச் செய்யவேண்டும் என்பதிலும்.. இழப்புகள் வரினும் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கவேண்டும்
என்பதிலும் எவ்வித சமரசங்களும் இன்றி செயல்பட்டவர்..
பெரியவர் சிறியவர் என்ற பேதமின்றி
அனைவரையும் சமமமாய் கருதியதுடன் அப்படியே நடத்தியவர்..
எல்லோரும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும்
என்பதில் தீராத பற்றுடையவர்..
அவரோடு இணைந்து செயல்படுகின்ற
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு அனுபவம் கிட்டும்..
பொதுவிசாரணைகளும், புத்தக வெளியீடுகளும்
அவரோடு நெருக்கமாய் செயல்பட்ட நினைவுகளுடன்..
எல்லோரையும் இயங்க வைப்பவர்..
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்…
தான் பின்னால் இருந்தபடியே
புதிதாய் வருகின்ற அனைவரையும்
முன்னோக்கி நகர்த்தியவர்..
ஒரு முறை நிகழ்ச்சியொன்றி அவரை
தனிப்படமாக எடுக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன்.. அதைக் கண்டுகொண்ட அவர் ’’என்ன ஏப்பா
எடுக்குற மக்களை எடுப்பா’’ என்று கூறிக்கொண்டவர்..
இன்று முகநூலில் அவரை நினைவுபடுத்துகின்ற
அனைவரும் பதிவிடுகின்ற ஒரே ஒரு புகைப்படமே அவரின் எளிமைக்கும், இயல்பான போக்கிற்கும்,
உறுதிக்கும் உதாரணமாகும்..
மேலும் விரிவாய் பிரிதொரு தருணத்தில்…
அவரை இழந்து துயரில் தவிக்கும்
HRF அமைப்பில் உள்ள நண்பர்களுக்கும், தோழர்களுக்கும்..
அவரது குடும்பத்தினருக்கும் எந்த ஆறுதலும் ஈடு செய்யாது…
துயரங்களைப் பகிர்ந்துகொள்வது
ஒன்றே ஆறுதல்..
ஆறுதலுடன்…