31.12.12
அனுப்புதல்
இரா.முருகப்பன்,
5, பாரதிதாசன் நகர்,
கல்லூரிச் சாலை,
திண்டிவனம்-&604001.
பெறுதல்
1.மாண்புமிகு. முதல்வர் அவர்கள்,
தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை&9.
2.செயலாளர் அவர்கள்,
பதிவுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை&9.
3.பதிவுத் துறை தலைவர்,
பதிவுத் துறை தலைவர் அலுவலகம்,
100, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை&18
அய்யா/அம்மையீர்,
பொருள் : தனது பதவியை
முறைகேடாகப் பயன்படுத்தி - ஊழல் செய்யும் - விழுப்புரம் மாவட்டப் பதிவாளர் & அருள்சாமி மீது - விசாரணை
மற்றும் நடவடிக்கைக் கோருதல் -
வணக்கம். நான் கடந்த
17 ஆண்டுகளாக பொது வாழ்கையில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, மக்கள்
உரிமைக் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளின் மூலமும், தற்போது
செயலாளாராக உள்ள நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழுவின்
மூலமும் ஏழை, எளிய மக்களின் மனித உரிமை மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காகவும் என்னால்
இயன்ற பணிகளைச் செய்து
வருகின்றேன். மேலும் தற்போது
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் என்கிற மனித உரிமை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிக்கொண்டு, மனித உரிமை மீறல்களால் பாதிப்புறும் மக்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைப்பதற்கான சட்டரீதியான உதவிகளைச் செய்து
வருகின்றேன்.
மனித
உரிமைகள் தொடர்பான கட்டுரைகளை பத்திரிக்கைகள் மற்றும் இணையங்களில் எழுதிவருகின்றேன்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டப் பதிவாளர் திரு.அருள்சாமி என்பவர் தனது பதவியை
முறைகேடாகப் பயன்படுத்துவது குறித்தும், அவரின்
முறைகேடான செயலுக்கு ஒத்துழைக்காத நேர்மையான அதிகாரிகளை பொய்யான
குற்றச்சாட்டுகளின் மூலம் பழிவாங்கும் செயலைச் செய்கின்றார் என்பது
குறித்தும் பல்வேறு மக்களிடம் நான் விசாரித்ததன் அடிப்படையில் கிடைத்த தகவல்களை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு
வருகின்றேன். இதன்மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, அவர்மீது உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
·
விழுப்புரம் மாவட்டப் பதிவாளர் திரு.அருள்சாமி, அருகே உள்ள மாவட்டத் தலைநகரமான கடலூரில் நிரந்தரமாக குடியிருந்து வருகிறார். இவரது நிர்வாகத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் பதினோறு
சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.
இவர் சார்பதிவாளராக விக்ரவாண்டி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் பணியாற்றி, தற்போது இதே மாவட்டத்திலேயே மாவட்டப் பதிவாளராக பதிவு உயர்வு
பெற்று பணியாற்றுகின்றார்.
·
இவர் சார்பதிவாளராக பணியாற்றியபோது பொதுமக்களிடத்தில் கட்டாயப்படுத்தி கையூட்டு பெறுவதை
தொழிலாகச் செய்துள்ளார். மேலும்
அலுவலகம் வருகின்ற பொதுமக்களை இழிவாக பேசுவார். இதனால்
விக்ரவாண்டியில் இவரால் பாதிக்கப்பட்ட ஒருவர் அப்போது இவர் மீது புகார் எழுதியுள்ளார். அதன்பிறகு இவர் புகார்
எழுதியவரின் வீட்டிற்குச் சென்று,
சமாதானம் பேசி, அப்போது
விசாரணையிலிருந்து தப்பியுள்ளார்.
·
தற்போது
அரசின் அனைத்து துறைகளிலும் உரிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ளது
அனைவரும் அறிந்ததே. அதிலும்
குறிப்பாக கீழ்நிலைப் பணியிடங்ளுக்கு சுத்தமாக நியமனம் இல்லாமல், உயரதிகாரிகள் பணியிடங்கள் மட்டுமே நிரப்படுகின்றன. இதனால்,
அனைத்துத் துறை அரசு அலுவலங்களிலும் கீழ்நிலை பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது
அன்றாட ஊதியம் என்ற அடிப்படையில் ஆட்களை வைத்து
வேலைகளைச் செய்துவருகின்றனர் அலுவலர்கள். அருள்சாமி போன்ற ஊழல் அதிகாரிகள் இந்த நிலையை தமக்குச் சாதகமாக்கிகொண்டு கடைநிலை ஊழியர்
முதல் சார்பதிவாளர்கள் வரை அனைவரையும் பணம் வசூலித்து தரும்படி கட்டாயப்படுத்துவதாக தெரியவருகின்றது. இவரின் இந்த ஊழல் செயற்பாடுகளுக்கு உடன்படாதவர்களை இவர் மிரட்டி
அச்சுறுத்துவதாகவும் தெரியவருகின்றது. ஆண், பெண், வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் இழிவு செய்து கேவலமாக நடத்துவதாகவும் அறிந்தேன். மேலும், ஆவண எழுத்தர்களையும் தினமும்
இவ்வளவு பணம் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களின் உரிமத்தை (லைசன்சை)
ரத்து செய்து விடுவதாக மிரட்டியும் வருகின்றார்.
·
இவருடைய
நிர்வாகத்தின் கீழுள்ள பதிவு அலுவலகங்களில், அதிக வருமானம் வரக்கூடிய இடங்களில் தனக்கு
வேண்டிய மூன்று உதவியாளர்களை (ஷிமீஸீவீஷீக்ஷீ கிssவீstணீஸீts) நியமித்து பணம் வசூலித்து வருகின்றார்.
இந்த மூன்று உதவியாளர்கள் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள் இவர்களுக்கு பயந்துதான் பணிபுரியவேண்டியுள்ளது.
·
இவர் பார்வையிடச் செல்லும்போதெல்லாம், அந்த அலுவலகத்திலுள்ள சார்பதிவாளர்கள் இவருக்கு ‘‘கவர்’’ கொடுக்கவேண்டுமாம். மேலும், நில மதிப்பு நிர்ணயம் தொடர்பாக யாரேனும் சந்தேகம் கேட்கவந்தாலும், ஞிமிநிக்கு பணம் கொடுக்வேண்டுமென்று கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ அதிகப்படியாக பணம் வாங்குகின்றாராம். இப்படி
இவருக்கு பணம் தர மறுக்கின்ற அல்லது இதை வெளியில் சொல்ல நினைக்கின்ற சார்பதிவாளர்களை தனக்கு விஜிலென்ஸ் அதிகாரியை தெரியும் என்றும், அவரிடம் மாட்டவைத்து விடுவேன் என்று மிரட்டி
பணம் பறிக்கின்றார். இதுபோன்று இவர் மிரட்டியதில் ஒரு சார்பதிவாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
·
அதிலும்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
ஊழியர்களை இவர் இழிவு செய்து பேசி, அவமானப்படுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.
·
அரகண்ட
நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளாராக உள்ள இரவி என்பவர், மேற்படி அருள்சாமி மாவட்டப் பதிவாளராக பதவியேற்றது முதல் அலுவலகம் செல்லாமல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்துகொண்டு, அருள்சாமிக்கு தேவையான மறைமுகமான வேலைகளையும் செய்து வருவதாகவும் அறிந்தேன். அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளசிலர் இவருக்கு ஆதரவாக செயல்படுவதுடன், ரவியின் கையைழுத்தையும் தினமும்
வருகைப்பதிவேட்டில் போட்டுக்கொள்கிறார்களாம்.
·
கடலூரில் தங்கி தினமும் விழுப்புரம் வந்துசெல்கின்ற மேற்படி அருள்சாமி கடலுரில் அரசுமருத்துவமனைக்கு எதிரில் ‘‘Friends” என்ற பெயரில்
TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை
நடத்துகிறார். ஒவ்வொரு தேர்விற்கும் சுமார் 500 மாணவர்கள் படிக்கின்றார்கள். கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.5000/& என
இதன் மூலம் வருடத்திற்கு 50 இலட்சங்கள் சம்பாதிக்கிறார். மாவட்டப் பதிவாளர் என்கிற தன்னுடைய பதவியின் மூலமும்,
ஜிழிறிஷிசி யில் பல்வேறு
அதிகாரிகள் பழக்கமென்று கூறியும் பயிற்சியில் சேர்க்கின்றார். கடந்த TNPSC-Group IV தேர்வு
வினாத்தாள் வெளியான சம்பவத்திலும், வழக்கிலும் கடலூர் நகரம் பெரும்பங்கு வகித்துள்ளதை அனைவரும் அறிவோம். வினாத்தாள் வெளியான
சம்பவத்தில் இவருக்கும் வாய்ப்பிருக்கலாம் என்பதால், அந்த வழக்கில் இவரையும் ஒரு குற்றவாளியாகச் சேர்ந்து உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் இவர் வெளிப்படையாக ‘‘எனது பயிற்சி
வகுப்பில் பயின்ற மாணவர்கள்தான் தமிழ்நாட்டில் பதிவுத்துறையில் எல்லா இடங்களிலும் அனைத்துமட்டங்களிலும்
அதிகாரியாக பணியாற்றுகிறார்கள். என் மீது புகார் எழுதிவிட்டு யாரும்
தப்பிக்க முடியாது. அப்படி
எழுதினாலும் அங்கேயே கிழித்துப் போட எனக்கு ஆள் இருக்கிறார்கள். மிநி அலுவலகத்திலும் எனக்கு
வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அடுத்து, நான்தான் ஞிமிநி-யாக (துணை பதிவுத் துறைத்
தலைவர்) வருவேன். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எனக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் உள்ளனர்’’ என்று பேசிவருவதாக கூறுகின்றனர்.
·
இவரது மாத வருமானமாக டி.என்.பி.சி பயிற்சி வகுப்பு நடத்துவதில் தோராயமாக ரூ. 50,00,000/, இவரது மாத ஊதியம், ஆசிரியராக உள்ள இவரது மனைவியின் மாத ஊதியம், 11 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் மூலம் வருகின்ற லஞ்சப்பணம், என ஆண்டு ஒன்றுக்கு
சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார். இதற்கெல்லாம் முறையாக வரிகட்டுகின்றாரா என்பது
குறித்தும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும்.
·
பதிவுத்துறையில் எழுத்தராக இருந்து பின்னர், தேர்வுவெழுதி சார்பதிவாளராகி தற்போது மாவட்டப் பதிவாளராக பணியாற்றுகின்ற இவர்மீது வருமானத்திற்கு அதிமாக
சொத்து சேர்த்துள்ளது தொடர்பான வழக்குபதிவு செய்து, உரிய புலன்விசாரணைகளை மேற்கொண்டால் பல்வேறு
உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவரும்.
இவ்வாறு தனது பதவியைப் பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான வழியில் பணம் சம்பாதிப்பது, பினாமியாக சொத்து சேர்ப்பது, உடன்பணியாற்றுகின்றவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, இழிவுசெய்வது போன்ற இவரின் இதுபோன்ற சமூகவிரோத மற்றும்
மனித நேயமற்ற செயற்பாடுகளால் முடிந்தவரை ஓரளவு நேர்மையாகப் பணியாற்றுகின்ற, பணியாற்ற நினைக்கின்ற அதிகாரிகள் பல்வேறு இன்னல்களையும், அவமானங்களையும் எதிர்கொள்கின்றனர். மேலும், பொதுமக்களுக்கு அதிக செலவில்லாமல், சட்டப்படி கிடைக்க
பத்திரம் மற்றும் பதிவு தொடர்பான சேவைகளில் பெரும்
தொய்வு ஏற்படுகின்றது.
எனவே, விழுப்புரம் மாவட்டப் பதிவாளாராக உள்ள மேற்படி
அருள்சாமியின் முறைகேடுகள் குறித்து துறை ரீதியான விசாரணையும், வருமானத்திற்கு அதிகாமச் சொத்து
மற்றும் பணம் சேர்த்துள்ளது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு
மற்றும் கண்காணிப்புத் துறையும் உரிய வழக்குகள் பதிவு செய்து, அவர்மீது சட்ட ரீதியன நடவடிக்கைகள் மேற்கொண்டு, விழுப்புரம் மாவட்ட பதிவுத்துறையினை நேர்மையானதானதாகவும், முழு சேவையுடையதாகவும் மாற்றிட உதவும்படி வேண்டிகொள்கிறேன்.
இவண்,
(இரா.முருகப்பன்)
நகல் :
1.துணைப் பதிவுத் துறை தலைவர்,
கடலூர் மாவட்டம், கடலூர்
2.துணைக் காவல் கண்காணிப்பாளர்,
ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்புப் பிரிவு
92 ஏ, ராதாகிருஷ்ணன் தெரு, வி.ஜி.பி நகர்,
கிழக்கு சாலாமேடு, விழுப்புரம்.