Monday, May 4, 2020

அகரம் கல்வி அறக்கட்டளை கொரோனா நிவாரண நிதியாக 1750 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு ரூ. 4,34,330/- வழங்கியது..


பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
334 H, நேரு வீதி, பூந்தோட்டத் தெரு, திண்டிவனம்-604001.
---------------------------------------------------------------------------------------------------
01.05.2020

நடிகர் சூர்யா அவர்களின் அகரம் கல்வி அறக்கட்டளை
கொரோனா நிவாரண நிதியாக
1750 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு ரூ. 4,34,330/- வழங்கியது..
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நன்றி! நன்றி!!

விழுப்புரம் மாவட்டத்தில், 1996 ஆம் ஆண்டு ‘’பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்” தொடங்கப்பட்டது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் இருளர் மக்களுக்கான பணிகளை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவருகின்றது. உரிமை சார்ந்தவை மட்டுமல்லாமல், பழங்குடி இருளர் மக்களின் கல்வி உள்ளிட்டவைகளிலும் தொடர்ந்து பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றோம்.
அன்றாடக் கூலி வேலை செய்தும், செங்கல் சூளை, அரிசி ஆலை, கரும்புத் தோட்டம் போன்றவைகளில் கொத்தடியாக இருந்தும், தோப்புகளுக்கு காவல் காக்கும் பணிகளைச் செய்துமே பழங்குடியினர் பிழைத்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலை மற்றும் வருமானம் இன்றி அன்றாட வாழ்வை பெரும்சிரமத்துடன் நகர்த்திவருகின்றனர் பழங்குடி இருளர்கள்.
இந்நிலையில், பழங்குடி இருளர்களுக்கு திண்டிவனம் வட்டத்தில் தி.மு.க பிரமுகர் திரு. டி.கே.பி.ரமேஷ் அவர்கள் 36 குடும்பத்திற்கும், பழங்குடியினர் நலன் காக்கும் குழு 33 குடும்பத்திற்கும், மரக்காணம் வட்டத்தில் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை  456 குடும்பத்திற்கும், விழுப்புரம் வட்டத்தில் பங்குத் தந்தை திரு. பெலிக்ஸ் ஆல்பர்ட் அவர்கள் Communities rising trust மூலம் 270 குடும்பத்திற்கும், செஞ்சிலுவை சங்கம் 50 குடும்பங்களுக்கும்,  திரு ’’தமிழ் அலை” அசன் மற்றும் வி.சி.கட்சி நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டை ஏரியில் உள்ள 25 குடும்பத்திற்கும், சித்திலிங்கமடம் நீதிபதி கே.சந்துரு குடியிருப்பில் திருக்கோவிலூர் மருத்துவர் கமலசேகரன் அவர்கள் உள்ள 50 குடும்பத்திற்கும் என மொத்தம் 920 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுபோன்ற நிவாரணங்கள் கிடைக்காமல், பாதிக்கப்படும் பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியும், 1 உப்பு பாக்கெட்டும் வழங்க உதவிசெய்திடுமாறு,  கடந்த 15.04.2020 அன்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில்  நன்கொடை கேட்டு கோரிக்கை வைத்தோம்.  
எங்களின் இக்கோரிக்கையினை ஏற்று, நேற்று வரை 105 பேர் ரூ 7,96,160/- நன்கொடையாக வழங்கினர். இந்த நன்கொடைகள் மூலம்  திண்டிவனம், வானூர், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களில் உள்ள 140 கிராமங்களில் வாழும் 2506 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியும், 1 உப்பு பாக்கெட்டும் நிவாரணமாக வழங்கினோம். இதற்காக       ரூ.   7, 05,490/- செலவானது. 2506 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது போக மீதம்  ரூ. 90,670/-  கையிருப்பில் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான், மேலும், திண்டிவனம், வானூர், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், கண்டாச்சிபுரம், உளுந்தூர்பேட்டை, கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களில் உள்ள 91 கிராமங்களில் வசிக்கும் 1750 குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண உதவிகள் வழங்கவேண்டியுள்ளது. இதற்காக, ரூ 5,25,000/- வரை தேவைபடுகிறது, ஏற்கனவே வந்த நன்கொடையில் நிவாரணமாக வழங்கியது போக மீதமுள்ள ரூ.90,670/-  உடன் கூடுதலாக                          ரூ. 4,43,300/- தேவைபடுகிறது என்றும்,  தங்களால் இயன்ற நன்கொடையினை வழங்கி உதவிடுமாறும் நேற்று நண்பர்கள் பலரிடம் கோரிக்கை வைத்து உதவிகேட்டோம்.
இந்தச் சூழலில்தான், பழங்குடி இருளர் மாணவர்கள் உயர்கல்வி கற்கவும், குடும்ப நிலை மேம்படுத்தவும் பல்வேறு உதவிகளை ஏற்கனவே செய்து வருகின்ற நடிகர் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை இன்று 01-05-2020 பழங்குடி இருளர் மக்களின் 1750 குடும்பங்களுக்கு  கொரோனோ நிவாரண நிதியாக4,34,330 (ரூபாய் நான்கு இலட்சத்து முப்பத்து நான்காயிரத்து, முன்னூற்று முப்பது மட்டும்) நன்கொடையாக அளித்துள்ளார்கள்.  
பழங்குடியினர் நலனில் பெரிதும் அக்கறையுடன் தொடர்ந்து பங்காற்றுவதுடன், நெருக்கடியான இந்த நேரத்தில், பழங்குடி இருளர் மக்கள்  வாழ்வாதரத்திற்கு பேருதவியான உணவுப் பொருட்கள் அளிக்க நன்கொடை வழங்கி உதவிய அகரம் அறக்கட்டளைக்கும், நடிகர் சூர்யா குடும்பத்திற்கும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏற்கனவே நன்கொடை நன்கொடை வழங்கிய 105 பேரில், நீதிபதி கே.சந்துரு அவர்கள் ஒரு லட்சம், புனித அன்னாள் சபை மற்றும் கவசம்-கிளாரெட் சபை இரண்டும் தலா ரூ 1,50,000/- நன்கொடையாக வழங்கியுள்ளனர். இத்துடன், சென்னையிலுள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர் சற்குண ஸ்டீபன் அவர்களும், அவரது குடும்பத்தினர் நண்பர்களும் சேர்ந்து சுமார் ரூ.50,000/- வழங்கினர்.  வழக்கறிஞர் அருள்மொழி ரூ.5000/- மற்றும் திண்டிவனம் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 11 பேர் தங்களின் ஒரு நாள் ஊதியமான ரூ. 3,938/- ஐ நிவாரணமாக வழங்கினர். மேலும், நாடு முழுவதுமிருந்தும் நண்பர்கள் பலரும் பழங்குடியினர் நலனுக்காக நிவாரண உதவிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
ப.இளங்கோவன், தலைவர், சு ஆறுமுகம், பொதுச் செயலர்,
மு.நாகராஜன், பொருளாளர்,
கோ.ஆதிமூலம், துணைத் தலைவர்,  க.சிவகாமி, துணைச் செயலர்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
சி.வள்ளுவன் - அருட்தந்தை .ரபேல்ராஜ் - அருட்சகோதரி லூசினா
ஆல்பர்ட் வேளாங்கண்ணி -  இரா.முருகப்பன் - பிரபா கல்விமணி,

மற்றும்
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை
ஆசிரியர் சி.ஜெயபாலன், தலைவர்,
ஆசிரியர் பொன்.மாரி, செயலர், பி.வி.ரமேஷ், பொருளாளர்.

தொடர்புக்கு;
பிரபா கல்விமணி – 9442622970 / 9047222970 / 9894207407













பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்திண்டிவனம்
கொரோனா நிவாரணம் -  வரவு செலவு விவரம்
விவரம்
வரவு
29 ம் தேதி வரை
நிவாரணம்
வழங்கிய செலவு
15.04.20 ல் வரவு
5,000.00

16.04.20 ல் வரவு
77,532.00

17.04.20 ல் வரவு
1,53,000.00

18.04.20 ல் வரவு
21,500.00

19.04.20 ல் வரவு
61,251.00

20.04.20 ல் வரவு
55,500.00

21.04.20 ல் வரவு
49,500.00

22.04.20 ல் வரவு
2,70,877.00

23.04.20 ல் வரவு
9,500.00

24.04.20 ல் வரவு
40,000.00

27.04.20 ல் வரவு
4,500.00

28.04.20 ல் வரவு
43,000.00

29.04.20 ல் வரவு
5,000.00

திண்டிவனம் & வானூர் வட்டம்

2,75,659.00
விக்கிரவாண்டி & கண்டாச்சிபுரம் வட்டம்

1,37,331.00
செஞ்சி & மேல்மலையனூர் வட்டம்

2,75,000.00
விழுப்புரம் வட்டத்திற்கு

17,500.00

7,91,160.00
7,05,490.00
மீதி இருப்பு
90,670.00


கொரோனா நிவாராண உதவி – நன்கொடையாளர்கள் பட்டியல்

நாள்
வ.எ
பெயர்
தொகை
15.04.2020
1
செந்தில் தினகரன்
5,000.00
16.04.2020
2
ராபீன் ஸ்டீபன், பெங்களூர்
10,000.00
3
வேணுகோபால், பெங்களூர்
3,000.00
4
பெயரில்லாமல் வரவு
10,000.00
5
நடராஜ், கல்பாக்கம்
5,000.00
6
பிரபு ராஜேந்திரன், லண்டன்
1,000.00
7
பாலசுப்பிரமணியன்
2,000.00
8
முத்துராஜ், சிங்கனூர்,
5,000.00
9
டார்வி
1,000.00
10
மனோ
10,000.00
11
சபரீஷ்ரகுபதி, அமெரிக்கா
20,032.00
12
பெயரில்லாமல் வரவு
500.00
13
அருண்
10,000.00
17.04.2020
14
சீனுவாசன், அமெரிக்கா
5,000.00
15
ஸ்ரீமன்
2,000.00
16
தினேஷ்குமார் அமெரிக்கா
2,000.00
17
சுமதி அறவேந்தன், சென்னை
2,000.00
18
இம்ரான், அமெரிக்கா
10,000.00
19
புஞ்சோலை கோச்சடை
10,000.00
20
விஸ்வநாதன் அமெரிக்கா
10,000.00
21
சபரி வாழை அமைப்பு
2,000.00
22
நீதிபதி கே.சந்துரு
1,00,000.00
23
பெயரில்லாமல் வரவு
2,000.00
24
பிரேம்குமார்
1,000.00
25
முருகன்
2,000.00
26
மருத்துவர் முத்துசாமி, பல்லடம்
5,000.00
18.04.2020
27
பிரபு
500.00
28
ஏ.பி.ராஜசேகரன், சென்னை
2,000.00
29
பிரபா கல்விமணி, திண்டிவனம்
10,000.00
30
சென்
1,000.00
31
ராஜா
2,000.00
32
ஆசிரியர் கார்த்தி, திண்டிவனம்
1,000.00
33
தா.பாரதிராஜன், அமெரிக்கா
5,000.00
19.04.2020
34
அறிவுச்செல்வன்
3,500.00
35
பூஞ்சோலை கோச்சடை
10,000.00
36
அருளப்பா
750.00
37
ராஜ்குமார்
5,000.00
38
பாலசரவணன், சென்னை
2,000.00
39
வேர்கள் மு.இராமலிங்கம்
5,000.00
40
ஜெய்சங்கர் முத்துசாமி
1,000.00
41
சுவாமிநாதன், சென்னை.
2,000.00
42
செந்தில்குமார்
1,001.00
43
ராமசுப்பிரமணியன், ஜெர்மணி
30,000.00
44
தாமரைச் செல்வன்,
1,000.00
20.04.2020
45
அருண்சுவாமிநாதன்
10,000.00
46
பிரதீப்
500.00
47
இளங்கோவன் பெருமாள்
1,000.00
48
ராபர்ட் சந்திரகுமார், மதுரை
1,000.00
49
பெயரில்லாமல் வரவு
3,000.00
50
உண்மை
5,000.00
51
புனித அன்னாள் கலைக் கல்லூரி, சென்னை
25,000.00
52
காங்கேயன்
1,000.00
53
சீனுவாசன்.ஜி
1,000.00
54
பெயரில்லாமல் வரவு
1,000.00
55
டாக்டர் சிவா
2,000.00
56
சுரேஷ் சுமதி, கல்பாக்கம்
5,000.00
21.04.2020
57
குமார்.பி
10,000.00
58
பிரென்னா
2,500.00
59
நடராஜன்.பி
10,000.00
60
முருகப்பன் தமிழரசி, திண்டிவனம்
1,000.00
61
சாலமன் ஸ்டீபன், சென்னை
5,000.00
62
சேகர்.எஸ்
1,000.00
63
கிரேஸ் எடிசன்
10,000.00
64
பேராசிரியர் சற்குணம் ஸ்டீபன்
10,000.00
22.04.2020
65
சகோ.லூசினா, புனித அன்னாள் சபை
50,000.00
66
அருட்பணி ரபேல்ராஜ், கிளாரெட் சபை
1,50,000.00
67
அருட்சகோதரி மரியரத்தினம், சேத்பட்டு
50,000.00
68
ஆசிரியர் சாம்பவமூர்த்தி, செஞ்சி
1,000.00
69
ராமலிங்கம் சுவாமிநாதன்
143.00
80
ஜெயநேசன், திருமிழிசை
200.00
81
Vani23
2,000.00
82
செல்வகுமார்
2,000.00
82
அஜாய்குமார் & ஜெயபதி
12,017.00
83
முத்துகுக்குமரன்
1,500.00
84
சுப்ரியா
2,017.00
23.04.2020
85
சுஜாதா எம்
2,000.00
86
தண்டாயுதபாணி
1,000.00
87
பீட்டர் தஞ்சாவூர்
500.00
88
பாக்கியநாதன்
1,000.00
89
சகோ.லியோனி, பு.அ.சபை
5,000.00
24.04.2020
90
கிறிஸ்டோபர், திருச்சி
10,000.00
91
ப.சிவக்குமார், சென்னை
2,000.00
92
செல்வராசு
5,000.00
93
பரிமளா குடும்பம், கல்பாக்கம்
2,000.00
94
வழக்கறிஞர் அருள்மொழி, சென்னை
5,000.00
95
கமலா, குடந்தை
1,000.00
96
Gregroy K.Muralidhar
5,000.00
97
புனித அன்னாள் கல்லூரி பணியாளர்கள், சென்னை
10,000.00
27.04.20
98
KTVAR
2,000.00
99
பெயரில்லாமல்
1,500.00
100
பாஸ்கர்
1,000.00
28.04.20
101
துரைராஜ்
10,000.00
102
பேராசிரியர் மணிவண்ணன்,, தஞ்சை
3,000.00
103
திருஞானம், அகரம் தன்னார்வலர்
10,000.00
104
செயின்ட் தாமஸ், பெங்களூர்
20,000.00
29.04.20
105
அருண்பாலாஜி, பொள்ளாச்சி
5000.00
மொத்த வரவு
7,96,160.00

கிராமங்கள் &  குடும்பங்கள்
நிவாரணப் பொருட்கள் : 10 கிலோ அரிசி, 1 கிலோ உப்பு.
.
நாள்
வட்டம்
கிராமம்
குடும்பம்
1
19.04.20
திண்டிவனம்
6
198
2
19.04.20
செஞ்சி மேல்மலையனூர்
16
180
3
20.04.20
திண்டிவனம்
10
208
4
21.04.20
வானூர்
8
209
5
23.04.20
திண்டிவனம்
10
230
6
23.04.20
செஞ்சி மேல்மலையனூர்
13
223
7
23.04.20
விக்கிரவாண்டி
17
341
8
24.04.20
செஞ்சி மேல்மலையனூர்
14
259
9
25.04.20
செஞ்சி மேல்மலையனூர்
6
100
10
27.04.20
திண்டிவனம்
6
57
11
வானூர்
12
125
12
விழுப்புரம்
2
26
13
கண்டாச்சிபுரம்
11
145
14
28.04.20
செஞ்சி மேல்மலையனூர்
9
205


மொத்தம்
140
2506


No comments: