முந்தைய ஆண்டுகளின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இவை. தேர்வெழுதுவதில் 94.5% மாணவர்கள் தேர்ச்சி அடைகின்றனர். ஏறக்குறைய 100% தேர்ச்சிதான் இது.
இந்த ஆண்டு 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். தனித்தேர்வு மாணவர்களையும் சேர்த்தால், ஏறக்குறைய 10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத, 1 லட்சத்திற்கும் குறையாத ஆசிரியர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
கொரோனா 3-வது கட்டத்தை நோக்கி நகரும் நிலையில் 11 லட்சம் பேரை வீட்டிலிருந்து பொதுவெளிக்கு வரவழைத்து, கூட்டம் கூட்டமாக சேர்ப்பது சரியா? சாத்தியமா? என்பதை அரசும், அதிகாரிகளும் யோசிக்க வேண்டும்.
தேர்வு உண்டா? இல்லையா? என மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள பதட்டம், மன உளைச்சல், குழப்பங்களை தவிர்க்க அரசு முடிவினை தெரிவிக்க வேண்டும்.
நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற குழப்பம் போன்ற நெருக்கடியில் உள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி, கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் கூடுதல் நெருக்கடியாகும். பதட்டம், மன உளைச்சலை அளிக்கும்.
No comments:
Post a Comment