விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் கருங்காலிப்பட்டு பழங்குடி இருளர்கள் - திருப்பூர் மாவட்டம் திருமலாபாளையம் டி.பி.சி செங்கல் சூளையில் அடி ,உதை, சித்திரவதை, கொலை மிரட்டல்.
10 கொத்தடிமை குடும்பங்களை மீட்க கோரி திருப்பூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு. விழுப்புரம் மாவட்டம் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆன்லைன் புகார் மனு!
விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் கருங்காலி பட்டு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளர் சாதியை சார்ந்த ஏழுமலை மற்றும்10 குடும்பத்தினரை விழுப்புரம் மாவட்டம் தெளிமேடு கிராமத்தைச் சார்ந்த முருகன் கவுண்டர் முன்பணமாக ஒரு ஜதைக்கு 70 ஆயிரம் ரூபாய் வீதம் 5 குடும்பங்களுக்கு கொடுத்து கடந்த தை மாதம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் எல்லைக்கு உட்பட்ட திருமலா பாளையம் கிராமத்தில்
டி.பி.சி செங்கல் சூளையில் வேலைக்கு விடப்பட்டார்கள்.
சூளை அருகே விவசாய நிலத்தில் பயன்படாத வெங்காயத்தை நிலத்தின் ஓரமாக கொட்டி இருந்ததை குழம்பு வைப்பதற்காக எடுத்து வந்த பழங்குடி இருளர் 1.வினோத், 2 .முத்து ஆகிய இருவரையும் சூலை உரிமையாளர் & இரண்டு பேர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் தெளிமேடு கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ் ஆகிய மூன்று நபர்களும் மேற்படி இரண்டு நபர்களை "எதற்காக வெங்காயத்தை எடுத்து வந்தீர்கள்?"-என்று கேட்டு ஈவு இரக்கமின்றி செங்கல்லை எடுத்து முகத்தில் குத்தி சித்திரவதைக்கு உட்படுத்தப்படுத்தி கொலை மிரட்டல் விடுதனர்.
இது சம்பந்தமாக எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் 2015-இன் கீழ் மற்றும் கொத்தடிமை மீட்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கோரியும்,
விழுப்புரம் மாவட்டம் கருங்காலிபட்டு கிராம பழங்குடி இருளர்களை பாதுகாப்பாக மீட்டுக் கொடுக்குமாறு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
- பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்,
விழுப்புரம் மாவட்டம்.
விழுப்புரம் மாவட்டம்.
No comments:
Post a Comment