இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
28 பேருக்கு நிவாரண உதவி:
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்:
-----------------------------------------------------------------------
திண்டிவனம் அருகே, மொளசூர் கிராமத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 28 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து சொந்த மாநிலம் செல்வதற்கு அவர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இடம்பெயர்ந்த மேற்படி 28 தொழிலாளர்களுக்கும் 10 நாட்களுக்குத் தேவைப்படும் கோதுமை மாவு, அரிசி, உருளைக் கிழங்கு, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் இன்று காலை வழங்கப்பட்டது.
அப்போது திண்டிவனத்தைத் தலைமை இடமாகக் கொண்ட "சசி" ( SASY) என்ற மனித உரிமை அமைப்பின் இயக்குனர் வே.அ. இரமேஷ்நாதன், மனித உரிமை செயற்பாட்டாளர் இரா.முருகப்பன், பேராசிரியர் ஜெ.இராமமூர்த்தி மற்றும் திண்டிவனம் தாய்த் தமிழ் பள்ளி அறங்காவலர் த.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபோன்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் எங்களுக்குத் தொடர்புள்ள இருளர் உள்ளிட்ட 5000 க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நிதிஉதவி அளித்து ஊக்குவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா, விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும் வி.சி.க பொதுச் செயலாளர் து.ரவிக்குமார், பேராசிரியர் சற்குணம் ஸ்டீபன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.... நன்றி.. நன்றி...
இவண்,
ப.இருளர் பாதுகாப்புச் சங்கம்,
ப.இருளர் கல்வி அறக்கட்டளை,
புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு,
கவசம் - கிளாரட் சபை,
பழங்குடி இருளர் மேம்பாட்டு அமைப்பு.
தொடர்புக்கு :
9442622970 / 9047222970 / 9894207407.
No comments:
Post a Comment