Thursday, June 18, 2020

10-ஆம் வகுப்பு ரத்து செய்யக்கோரி - முதல்வருக்கு மனு

நாள் : 08.06.2020
பெறுதல்
மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை.

ஐயா,
பொருள் : கொரோனா நோய்த் தொற்று – தீவிரம் – குழந்தைகள் பாதுகாப்பு – 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோருதல்

வணக்கம்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று, சில நாட்களாக தமிழகத்தில் ஏ13 என்கிற புதிய வகை வைரஸாக தீவிரமாக பரவிவருகின்றது. ஒவ்வொரு நாளும், நோய் தொற்று எண்ணிக்கையும், இறப்பும் அதிகரித்தபடியே உள்ளது.

இந்நிலையில் 18 வயதுகுட்பட்ட குழந்தைகளான 10-ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 9.50 லட்சம் பேர், தேர்வு மற்றும் பாதுகாப்புப் பணி என சுமார் 5 லட்சம் பேர் நாடு முழுவதும், 15 நாட்களுக்கு பல இடங்களில் கூடுவது நோய்த்தொற்றினை அதிகரிக்கவே செய்யும். அதுவும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாத மாணவர்களும் பல்வேறு பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.
இந்த சூழலில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்களின் நோய்த் தொற்று அதிகரிக்கவெ செய்யும். உயிர் ஆபத்து எனத் தெரிந்தும் இந்தத் தேர்வினை நடத்துவது என்பது, தெரிந்தே மாணவர்கள் அவரைச் சார்ந்த குடும்பத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும்.
மேலும், 81 நாட்களில் வீட்டில் இருந்த குழந்தைகளை, 82-வது நேரடியாக தேரடியாக பொதுத் தேர்வு எழுத வைப்பது, மாணவர்கள் மீதான ஆகப்பெரிய சித்திரவதையாகும். இதனால் மாணவர்களும், அவர்களைச் சார்ந்தோரும் கடும் மனச் சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.
எனவே, ஐயா அவர்கள், நோய் தொற்று பரவுததைத் தடுக்கவும், குழந்தைகள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் பலியாவதைத் நிறுத்தவும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்குறிய பொதுத்தேர்வினை ரத்து செய்யவேண்டும்.

அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
குழந்தைகள் / மாணவர்கள் உயிர் ஆபத்தை தடுத்த நிறுத்தவும்.
இவன்,
முருகப்பன்,
திண்டிவனம்,
9894207407.

(இந்த மின்னஞ்சலை முதல்வர் மற்றும் கல்வித்துறை செயலாளர் இருவருக்கும் அனுப்பியுள்ளேன். இன்னும் சில நாட்கள் உள்ளது. நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து இது போன்ற மின்னஞ்சலை அனுப்பலாம். மின்னஞ்சல் எண்ணிக்கை அதிகமாகும்போது ஒரு நெருக்கடி / அழுத்தம் உருவாகும்.
ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும், மீண்டும் மீண்டும் கூட மின்னஞ்சல் அனுப்பலாம்.
இதனை ஒரு இயக்கமாக/போராட்டமாக முன்னெடுக்கலாம்..
நான் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இதே மின்னஞ்சலை மீண்டும் மீண்டும் அனுப்பப் போகின்றேன்.
நன்றி.)
மின்னஞ்சல் முகவரி
cmcell@tn.gov.in
Sches@tn.gov.in

08.06.2020 முகநூல்

No comments: