தம்பி செந்தில் பிறந்த நாள் வாழ்த்து முகநூல் பதிவு
நான் விழுப்புரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நேரம் அது. நண்பன் ஒருவன் திண்டிவனத்தில் தலித் மனித உரிமை சம்மந்தமாக வேலை வாய்ப்பு உள்ளது அப்லை செய் என்றான். நானும் விண்ணப்பம் செய்திருந்தேன். என்னை நேர்காணலுக்கு வரச்சொன்னார் ஒருவர் தொலைபேசி வாயிலாக.
சரியாக 13/09/2013 அன்று எனக்கு நேர்காணல், காலை திண்டிவனம் சென்று அவருக்கு போன் செய்தேன் எங்கு வரவேண்டும் என்று தெரிந்துக் கொள்ள. எதிர் முனையில் அதே குரல்,
நீங்க இப்ப எங்க இருகீங்கனு?
நான்: திண்டிவனம் போருந்து நிலையம் சார்.
அந்த குரல்: அப்படியா, நான் பக்கத்துல தான் இருக்கன், பாலத்துக்கு கீழ நில்லுங்க நானே அலுவலகம் கூட்டிட்டு போரனு சொன்னது அந்த குரல்.
அந்த குரலின் சொந்தகாரருக்காக காத்திருந்தேன். என்னை நிறைய நபர்கள் கடந்து சென்ற வண்ணம் இருந்தனர். ஒருவர் சற்று தொலைவில் ஷ்கூட்டி வண்டியில் வருவதை கண்டேன். அப்போழுது என் மனதில் தோன்றியது இவராகதான் இருக்க வேண்டும் என்று. நான் நினைத்தது போலவே அவரும் என் அருகில் வந்து, நீங்க தான் செந்தீல என்றார், நானும் தலையாட்டினேன். சற்று புன்முருவலோடு நான் முருகப்பன் என்றார் (அன்று தொடங்கிய நட்பு பயணம், இன்று வரை). இது தான் எங்களின் முதல் சந்திப்பு....
இவர் தான் என் வாழ்வின் நிறைய மாற்றங்களுக்கு செந்தகாரராக இருக்க போகிறார் என அறிந்திருக்கவில்லை நான் அன்று .. என்னை போலவே அவரும் நாத்திகராக இருந்தார். என் வாசிப்பை உலகத்தை விரிவுபடுத்தினார். என் எழுத்தை மேம்படுத்தினார், உங்களுக்கு சிறுகதை நல்லா வருது எழுதுங்க செந்தில் என்றார் (கண்டிப்பாக உங்களின் அன்பு கட்டளையை நிறைவேற்றுவேன் சார்). என் இக்கட்டான காலங்களில் எனக்கு உறுதுணையாக நின்ற அண்ணன். நான் எடுத்த கடுமையான முடிவுகளுக்கு அதரவு கரம் நீட்டிய கரங்களுக்கு செந்தகாரன்.
SASY அலுவலகத்தில் முருகப்பன் சாரும், ஜெசியும், நொருக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் புத்தகம் எழுத தொடங்கிய சமயம் அது. கள ஆய்வு சம்பவங்களை தொகுக்க வேண்டிய நபர், அவரின் திருமணம் காரணமாக அப்பணியை தொடரமுடியாமல் போனதால். அப்பணியை எதிர்பாராமல் நான் செய்ய வேண்டி இருந்தது. நான் செய்த பணி இப்புத்தகத்திற்க்கு வலுசேர்ததாக சொல்லி இன்றுவரை பாராட்டுபவர்.
இடுக்கண் களைவதாம் நட்பு- என்பதற்க்கு உதாரணமானவர்.
நி
ற்
க
சாரி சார் பணி நிமிர்தமாக உரிய நேரத்தில் வாழ்த்த முடியவில்லை....
இன்று போல் என்றும் சமுக பணி செய்து மகிழ்திட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணன் சார்.
No comments:
Post a Comment